ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
பாணந்துறை பிரதேசத்திலுள்ள நகைக்கடையொன்றில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் தோரணையில் சென்று 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வளையல்கள் இரண்டினை திருடிச்சென்ற இரண்டு பெண்கள் உடபட மூவரை தேடும் தேடி வலைவரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நகைக்கடையில் இருந்த சீ.சீ.டிவி கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் இந்த திருட்டுச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்க நகை கொள்வனவு செய்யும் பாவனையில் வந்த பெண், பின்னால் இருந்த பெண்ணிடம் தங்க வளையல்கள் இரண்டினை திருடி கொடுத்துள்ள காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122440-2014-08-16-10-09-14.html
-
- 0 replies
- 365 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்! இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு ப…
-
- 13 replies
- 766 views
- 1 follower
-
-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் சில முளைக்கின்றன என்று 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்து உள்ளது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவராக இருந்த Geoffrey Pyatt இந்த ஆவணத்தை அமைச்சுக்கு அனுப்பி இருக்கின்றார். இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான கே.ஜி.சிங் என்பவரை மேற்கோள் காட்டி இத்தகவலை வழங்கி உள்ளார். " இந்திய உயர் அதிகாரிகள் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் வேர் விடுகின்றது குறித்து மிகவும் அவதானமாக உள்ளனர். இஸ்லாமிய ஜித்தா தீவிரவாதிகளின் செயல்பாடு இலங்கைய…
-
- 0 replies
- 811 views
-
-
வன்னிக்கான தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிப்பு
-
- 0 replies
- 1.4k views
-
-
சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாகாணசபை அமர்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர். அப்போது தற்காலிக தீர்வாக வடமாகாணசபையால் வலி.தெற்கு பிரதேச சபைக்கு குடிதண்ணீர் விநியோகத்துக்காக தண்ணீர் பவுஸர் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உறுதியளித்திருந்தார். அதன்படி பவுஸர் வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிணறுகளைப் பார்வையிடுவதற்காக நேற்று சனிக்கிழமை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன், வலி.தெற்கு (சுன்னா…
-
- 0 replies
- 460 views
-
-
யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது. கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அதிகபட்சமாக 1…
-
- 19 replies
- 1.9k views
-
-
போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசிய தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 955 views
-
-
தமிழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது: த.தே.கூ.. நடராஜா ரவிராஜ் குண்டுகளை வீசி தமிழ் மக்களைக் கொல்வதற்கு அப்பால் ஏ-9 வீதியை மூடியதன் மூலமும் தமிழ் மக்களை சாகடிக்க சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான் அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எனக்கு உறுதியான சந்தேகம் உள்ளது. நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயாராக இருப்பதாக நோர்வே அனுசரணையாளர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்முறை தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 926 views
-
-
சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜூர்கன் மொர்காட் யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஒருநாள் பயணமாக இன்று யாழ்பாணம் வந்த அவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து வடமாகாண செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. http://www.pathivu.com/news/33649/57//d,article_full.aspx
-
- 0 replies
- 500 views
-
-
EUவிடம் அதிருப்தி வெளியிட்ட சம்பந்தனும், வாக்குறுதி அளித்த இலங்கை அரசாங்கமும்….. பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்குவதற்கு; நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை தொடர்ந்தும் சீர்திருத்த பாதையில் பயணிக்குமென தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்…
-
- 1 reply
- 325 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தோல்வியாக ஒழுங்கான முறையில் உருமாறிக் கொண்டிருக்கிறது மனோ கணேசனுடன் ரய்சா விக்கிரமதுங்கவின் ஒரு நேர்காணல் ((நன்றி: சண்டே லீடர்) கேள்வி:- ஒரு மனித உரிமைகள் பிரச்சாரகராக ஒரு தமிழ்கட்சித் தலைவராக ஸ்ரீலங்காவில் தமிழர்களின் தற்போதைய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- இதில் இரண்டு விதமான கணிப்புகள் உள்ளன. முதலாவது தமிழர்களின் தினசரி வாழ்க்கை.வடக்கில் இன்று அது பேரவலமாக உள்ளது. இரண்டு நாட்களின் முன்னர்தான் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.அதற்கு மூன்று நாட்களின் முன்னர்தான் ஒரு இந்து மத அர்ச்சகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.நேற்று மீசாலையில் முன்பு கப்பம்…
-
- 0 replies
- 726 views
-
-
கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.29,000 மில்லியன் கடனுதவி புதன்கிழமை, 10 செப்டெம்பர் 2014 19:13 -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டமானது திட்டமானது உலக வங்கியின் சலுகை கடன் உதவியுடன் (ரூ.29,000 மில்லியன்) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு நகர பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கையளித்தார். இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் இன்று புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கப்…
-
- 0 replies
- 292 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஜே.ஆர்.ஜெயவர்தன 1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணமாக இணைத்தமையினால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews
-
- 39 replies
- 6.8k views
-
-
புறக்கோட்டையைச் சேர்ந்த வர்த்தகர் சுட்டுக் கொலை:- 15 ஜனவரி 2011 புறக்கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது. புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கித்சிறி ராஜபக்ஷ என்ற வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலையுண்ட வர்த்தகர் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதாள உலகக் கோஷ்டியினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகரின் சகோதரர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் கொலையுண்ட நபர் காவல்துறை…
-
- 1 reply
- 871 views
-
-
வழக்கிலிருந்து மகிந்த விடுதலை சுனாமி அனர்த்தத்தின்போது அம்பாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பதற் காக வழங்கப்பட்ட யஹல்பிங் அம் பாந் தோட்டை நிதி மோசடி வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் அடிப்படை மனித உரிமை மீறப் பட்டதாகவும், அவருக்கு 5 ஆயிரம் டொலர் நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அம்பாந்தோட்ட
-
- 4 replies
- 1.8k views
-
-
வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச அலுவலகத்திற்கு செய்திகளை வழங்கிய பின்னர் வழமை போலவே பரந்தனிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவ்வேளை அவரது துவிச்சக்கர வண்டியினை வழிமறித்து இரு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். தம்மை முதலில் சி.ஜ.டி என …
-
- 0 replies
- 292 views
-
-
உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!! உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!! ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கா விட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியை வகுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பு தமிழ் சங்க…
-
- 8 replies
- 956 views
-
-
தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர்! அனுராதபுரம் சிறையிலும் அதுவே நிகழ்த்தப்பட்டுள்ளது! அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்னொரு இனக்கொடூரம் சிங்கள வன்முறையாளர்களால் தமிழ்க் கைதிகள்மீது நடாத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர்! அனுராதபுரம் சிறையிலும் அதுவே நிகழ்த்தப்பட்டுள்ளது! சிறைச்சாலைகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகள் போலவே, இதுவும் உலகின் மனச்சாட்சிக்கு ஒரு உறுத்தலைக் கொடுத்துவிட்டு நீங்கிவிடும். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்கள்மீது நடாத்தப்படும் கொடூரங்கள் சிறைச் சாலைகளையும் விட்டு வைக்கப் போவதில்லை. எங்களுக்காகக் குரல் கொட…
-
- 0 replies
- 548 views
-
-
ஹபாயா அணிய தயாரா? ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் கேள்வி தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து கல…
-
- 0 replies
- 453 views
-
-
கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகை மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து கொளுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி வி…
-
- 0 replies
- 528 views
-
-
முல்லைத்தீவில் வான் படையினரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! முல்லைத்தீவில் வான் படையினரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! வான் படையினரின் காவலரணில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 துப்பாக்கியைக் காணவில்லை என்று முல்லைத்தீவில் முப்படையினருடன் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை வான் படையினரின் காவலரணில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியே …
-
- 0 replies
- 497 views
-
-
இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன?…
-
- 0 replies
- 191 views
-
-
அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் வீரகேசரி நாளேடு அரசாங்கம் குற்றச்சாட்டு ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது இந் நாணயத்தாள்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மட்டும் இலங்கை நடனக்காரர் என்று தொனிபொருளுடன் வெளியிடப்பட்டுள்ளன . புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது . வீரகேசரியிலிருந்து........
-
- 12 replies
- 4.7k views
-
-
யாழ். கச்சாய் கெற்பேலி பகுதியில், இராணுவ டிரக்ட் வாகனம் முச்சக்கரவண்டியுடன் இன்று (05) மாலை மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கச்சாய் வடக்கை சேர்ந்த குமாரசாமி திவாகரன் (வயது 28) என்ற இளைஞன் உயிரிழந்தார். அத்துடன் கொடிகாமத்தை சேர்ந்தவர்களான நடராசா நிரூசன் (வயது 21), உதயகுமார் இதயநுகன் (வயது 21), கச்சாய் பகுதியை சேர்ந்தவர்களான சிவகுமார் வின்சன் (வயது 19), சின்னத்துரை தபேந்திரன் (வயது 23) ஆகிய நால்வரும் படுகாயமடைந்தவர்களாவர். பிறந்ததின வீட்டொன்றுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த வேளை…
-
- 0 replies
- 698 views
-