ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கை நெருக்கடி: "ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்" 27 மே 2022, 05:15 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (மே 27) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது: "ஜ…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: பல நாட்கள் நீடித்த போராட்டம் வலுவிழந்தது ஏன்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது. இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்த…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
கச்சத்தீவில் கண்டது என்ன? உயிர் பயம் காட்டிய படகு அனுபவம் - ஒரு செய்தியாளரின் பயணக்குறிப்பு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், கொழும்புவில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தி சேகரிக்கும் செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் கச்சத்தீவுக்கு தாம் மேற்கொண்ட பயண அனுபவத்தை நேயர்களோடு பகிர்ந்துகொள்கிற…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக வறுமையும் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சலுகை வழங்காதவிடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்கு முடியாது போகும் என்பதால்,பலர் தமது தொழி…
-
- 41 replies
- 2.6k views
-
-
அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு! அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283828
-
- 10 replies
- 616 views
- 1 follower
-
-
விமல் வீரவன்சவின் மனைவிக்கு... இரண்டு வருட சிறைத்தண்டனை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சஷி வீரவன்சவை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதற்கமைய, சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்ந…
-
- 0 replies
- 241 views
-
-
பதவி விலகுகிறார் சவேந்திர சில்வா – புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே! இராணுவ தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி விலகவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்கவுளள்தாக என இராணுவம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1283967
-
- 13 replies
- 672 views
-
-
13,200 லீற்றர் பெற்றோலை... ஏற்றிச் சென்ற, பௌசர் விபத்து – பாரியளவு எரிபொருள் வீண்! கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1284138
-
- 1 reply
- 228 views
-
-
இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – ஞானசார தேரர் ! kugenMay 27, 2022 ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. இதன்படி, ஒரே நாடு ஒரே ச…
-
- 3 replies
- 245 views
-
-
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து... பிரதமர் அலுவலகம் விளக்கம்! அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் உடனடியாக அமுலுக்…
-
- 0 replies
- 157 views
-
-
அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக... டொலர்களை வழங்குவதற்கு, மத்திய வங்கி இணக்கம்! அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திய ‘சப்ளையர் கடன் வசதியை’ பயன்படுத்துவதை நிறுத்துமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு மாற்றாக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவ…
-
- 0 replies
- 135 views
-
-
21ஆவது திருத்தச் சட்டத்திற்கு... ஆதரவு வழங்குவது குறித்து, ஜே.வி.பி.இன் அறிவிப்பு! ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் அதனை ஆதரிக்க தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். https://athavannews.com/2022/1284149
-
- 0 replies
- 140 views
-
-
” கோட்டா கோ கம” வில் உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் : நாளை போராட்டத்திற்கு 50 ஆவது நாள் ” கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 49 நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நாளையதினம் 28 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவுபெறுகின்றது. இந்நிலையில் நாளையதினம் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் கொட்டும் மழை, வெயில் என்று பாராது இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. …
-
- 1 reply
- 365 views
-
-
மீண்டும் இயங்கவுள்ளது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையம் மீண்டும் இயங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கப்பல் ஒன்றிலிருந்து இன்று மசகு எண்ணெய் இறக்கும் நடவடிக்கையுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையம் மீண்டும் இயங்கவுள்ளதாகவும்,கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் அந்நிலையம் முதல் தடவையாக இயங்கவுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார். 6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிபொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை, 26 ஆம் திகதி வியாழக்கிழமை நிலைவரப்படி, 23,022 மெற்றிக…
-
- 0 replies
- 122 views
-
-
போக்குவரத்து நெரிசல் காரணமாக... நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை, நாட்டுக்கு நட்டம்! கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இதனை தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் விரயம், மற்றும் உழைக்கும் மக்கள் வேலை செய்யும் வீதிகளை மறிப்பதானது ஒரு நாடு என்ற ரீதியில் தாங்க முடியாத பொருளாதார இழப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வாகனங்கள் நாடாளுமன்ற வீதி, கண்டி வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி, ஹொரண வீதி, தெமட…
-
- 0 replies
- 149 views
-
-
யாழில் உள்ள, எரிபொருள் நிரப்பு நிலையத்தின்... முன்மாதிரியான செயல்! நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல மணித்தியாலங்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் பெற்றோலை பெறுவதற்கு காத்திருந்த வேளை பெண்களை தனியாக வரிசைப்படுத்து அ…
-
- 0 replies
- 211 views
-
-
கோட்டா கோ கம தாக்குதல் – மஹிந்த உள்ளிட்ட... 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு! கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்குமூலங்களைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை அடையாளம் காண ஆறு அடையாள அணிவகுப்புகள் நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் நான்கு அடையாள அணிவகுப்பு நடத்தப…
-
- 0 replies
- 118 views
-
-
3 நாட்களுக்கு... எரிவாயு விநியோகம் இடம்பெறாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ! நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதலே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் …
-
- 1 reply
- 150 views
-
-
சுயேட்சைக் கட்சிகளின்... கோரிக்கையை ஏற்றால், 21 இற்கு ஆதரவளிப்போம் – விமல்! அரசாங்கத்தில் சாராத கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய பெறுமதி வழங்கினால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் 9 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “21வது திருத்தத்தின் வரைவை ஆய்வு செய்து, எங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளோம். அதை ஆதரிக்கும் அனைத்…
-
- 0 replies
- 135 views
-
-
21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு.. ஆதரவு வழங்கவுள்ளதாக, அறிவித்தது சுதந்திரக் கட்சி! உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே, இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், 21ஆவது திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.…
-
- 0 replies
- 86 views
-
-
அரச ஊழியர்கள்... வேலை வாய்ப்பிற்காக, வெளிநாடு செல்ல சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள…
-
- 5 replies
- 493 views
-
-
அரசியலமைப்பின், 21ஆவது திருத்தம் தொடர்பான... விசேட கலந்துரையாடல் இன்று! அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பித்தார். உரிய திருத்தத்திற்கு கட்சிகளின் சம்மதத்தைப் பெறுவது அவசியமா…
-
- 0 replies
- 84 views
-
-
நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை... உடனடியாக பெற்றுக் கொள்ள, நடவடிக்கை – ரணில்! நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1284056
-
- 0 replies
- 129 views
-
-
மக்கள் கோரினால்... மஹிந்த மீண்டும் வருவார் என்கின்றது, பொதுஜன பெரமுன மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார் என டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போத…
-
- 6 replies
- 637 views
- 1 follower
-
-
நோ டீல் கம ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்றம் மறுப்பு (எம்.எப்.எம் பஸீர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் ஒழுங்கை கேம்பிரிஜ் பிளேஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதை (நோ டீல் கம எனும் தொனிப்பொருளில் ( தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (26) நிராகரித்தது. கொழும்பு மேலதிக நீதிவான் அர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அமைதி போராட்டங்களை தடுக்க நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பதில்லை எனவும், எனினும் கல்வி பொதுதராதர சாதாரண தர மாணவர்களின் கல்வி ,பரீட்சை நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையி…
-
- 0 replies
- 224 views
-