ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
உண்மையை கண்டறிவதற்கு புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கு முன்னர் கடந்த கால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு கடிதம் Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 04:39 PM இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்தகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உண்மை ஐக்கியம் நல்லிணக்கம குறித்த ஆணைக்குழு சட்ட மூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
தருஸ்மனின் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மையுடையதாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,யுத்த சூனியப் பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இருந்தது. புலிகள் இந்த பிரதேசத்தை சரிவர பயன்படுத்தவில்லை புலிகள் பொது மக்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தினர். வேறு யுத்த சூனிய பகுதிகள் உருவாக்கப்பட்டபோதும் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை நல்லிணக்க ஆணைக்குழு தெளிவாகக் கூறுகிறது. தருஸ்மன் அறிக்கை தவறானதாகும் தவறான வழிகாட்டலின் கீழே தருஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆஸ் பத்திரி…
-
- 3 replies
- 524 views
-
-
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து, அங்குள்ள அரச சார்பற்ற அமைப்பான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பெரும் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களுக்கான மொழிபெயர்ப்பின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், சாட்சிகளுக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்கிடமாக இருப்பதாகவும், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் சில பதில்களை நிர்ணயித்து விட்டு அதனை பெறும் நோக்கில் கேட்கப்படுவது போல இருப்பதாகவும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த பாக்கியஜோதி சரவணமுத்து,…
-
- 0 replies
- 240 views
-
-
எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை. இது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பெயரில் நடைபெறும் கண்துடைப்பு வேலையே. எனவே இத்தகைய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு நான் விரும்பவில்லை. பதிலாக ஓர் அறிக்கையை மாத்திரம் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். - இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருக்கிறார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப். ஆணைக் குழுவின் ஆறாவது அமர்வு மன்னாரில் இன்று மூன்றாவது நாளாக மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதன்போது ஆயருக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று முற்பகல் 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜேசப் ஆண்டகையும் மன்னார் மறை மாவட்ட குரு…
-
- 3 replies
- 827 views
-
-
ஆணைக்குழுவுக்கு ஒரு சபாஷ்! உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து திட்டமிட் டது போன்றே எதிர்வரும் தை மாதத்தில் அரைவாசித் தேர்தலையாவது நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு பிடிவாதத்துடன் நடந்துகொண்டுள்ளது. 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் மக்களின் அடிப்படை உரிமை, அதனை அரசியல்வாதிகள் தமது தேவைக்காக ஒத்திப்போடுவது ஏற்புடையது அல்ல என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு, தனது கொள்கையை…
-
- 0 replies
- 337 views
-
-
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78ஆவது வருடாந்த கூட்டம் ருவான்வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று…
-
- 2 replies
- 515 views
-
-
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தடையை தவிர்க்கமுடியாதிருக்கும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78ஆவது வருடாந்த கூட…
-
- 1 reply
- 498 views
-
-
-ரஸீன் ரஸ்மின் 'பல்கலைக்கழகத்தில் படிச்சுக்கொண்டிருந்த எனது மகனை 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடிச்சுக்கொண்டு போனார்கள். இன்று வரைக்கும் எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. என்னுடைய மகன் இருக்கிறானா அல்லது இல்லையா இரண்டில் ஒரு முடிவைச் சொல்லுங்கள்' என முல்லைத்தீவு முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகள், ஞாயிற்றுக்கிழமை (02), முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. இதன்போது, ஆணைக்குழு முன் முறைப்பாடுகளை பதிவு செய்யும் போதே அவர் மே…
-
- 3 replies
- 751 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக இலங்கைப் பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வு ஒன்றை காண முடியும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்துமானால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒருபோதும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட மாட்டாதென அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 496 views
-
-
[size=4]கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவது தொடர்பில் வெளியுறவு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், அமைச்சின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இதில் வெளிநாடுகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் ராஜதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.[/size] [size=4]இதன் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க…
-
- 1 reply
- 688 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் குறித்துகவனம் செலுத்தும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினால் பரிந்துரைசெய்யப்பட்ட சில விடயங்கள் குறித்து இன்னமும் கவனம் செலுத்தப்படவில்லை என அவர்தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்றபோதிலும், குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளார். நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின்முத…
-
- 0 replies
- 703 views
-
-
ஆணைக்குழு அறிக்கை வருமா ஐ.நா. சபைக்கு?; சமர்ப்பிப்பதில் அமெரிக்கா கடும் ஆர்வம் கொழும்பு வரும் பிளேக் அது பற்றிப் பேசுவார் ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பது குறித்து அமெரிக்கா அதிககரிசனை செலுத்தி வருகிறது. அதற்கு இலங்கை அரசு இணங்கி வராவிட்டால், நாளை ஆரம்பமாகும் 18ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. நாளைமறுதினம் கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பி…
-
- 0 replies
- 663 views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 4, 2011 நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை தாம் பெரிதாக எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. நவம்பர் 18 இல் வெளிவரவிருப்பதாக கூறப்படும் அறிக்கையானது நம்பகத்தன்மையானதாகவும் அதே வேளை அதனை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலக பேச்சாளர் விக்டோரியா நூலான்ட் கூறியுள்ளார். இதே வேளை கூட்டமைப்பினர் வருகை பற்றியும் அவர்கள் அமெரிக்காவின் அரசியல் விவகார செயலரை சந்தித்தது பற்றியும் உறுதிப்படுத்தியுள்ளார் விக்டோரியா. Re
-
- 0 replies
- 719 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அவர் முழுமையாக வெளியிடுவாரா என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சந்தேகம் கிளப்பியுள்ளது. உணர்ச்சிபூர்வமான தகவல்கள் அடங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்த வாரஇதழ் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழில் வெளியான பத்தியின் சிலபகுதிகள். “காலியில் கடந்தவாரம் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், சிறிலங…
-
- 1 reply
- 731 views
-
-
ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்? மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும், பெப்ரவரி 10ஆம் நாள்…
-
- 0 replies
- 205 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை எனக் கண்டால் சுயாதீனமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க செனற்றர்கள் மூவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளாரி கிளிங்டனை எழுத்துமூலம் கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு வலயம், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியமை நீதிப்புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். http://www.saritham.com/?p=41841
-
- 0 replies
- 765 views
-
-
ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்பதை விட அரசுக்கு வேறு வழியில்லை; மனோ கணேசன் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து அதில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளை குறிப்பிட்ட திட்டவட்டமான காலவரையறைக்குள் நடைமுறைபடுத்துகிறோம் என ஐநா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் அளிப்பதை தவிர இன்று இந்த அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது. என ஜனநாய மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் தொடர்பில் மனோ கணேசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில், ஐ.நா செயலாளரின் அறிக்கைக்கு பதிலடியாக, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை இந்த அரசாங்கம்தான் நியமித்தது. இன்று அரசாங்கத்தில…
-
- 1 reply
- 791 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 04:08 GMT ] [ கார்வண்ணன் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியக அமைச்சர், அலிஸ்ரெயர் பேர்ட் நேற்று லண்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மோதல்களில் இருந்து சிறிலங்கா மீள்வதற்கு இந்த அறிக்கை ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என்று பலரும் நம்புகின்றனர். தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிரூபிப்பதற்கான இந்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிக்கையை விரைவாக பகிரங்கப்படுத்துவது இந்த உ…
-
- 3 replies
- 795 views
-
-
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசு நடைமுறைப்படுத்துவதுடன் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். எனினும் வெளியிலிருந்து வரும் எந்த அழுத்தங்களுக்கும் அரசு அடிபணியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்படுமா? என்பதுடன் அறிக்கையின் படி குற்றவாளியாக காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரேயே ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். சுதந்திரமும் இறைமையும் உள…
-
- 0 replies
- 614 views
-
-
ஆணைக்குழுவின் மொழி பெயர்ப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றது. அத்துடன் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்படுவர்களுக்கு உரிய காலத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை என்று அமர்வுகளின் அவதானிப்பாளர்களாகச் செயற்பட்டு வரும் மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம் பெற்ற காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகளின் அவதானிப்பாளர்களாக இருந்த மன்னார் பிரஜைகள் குழுவினர் நேற்றைய அமர்வுகளின் முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அங்கு அவர்கள் தெரிவித்தவை வருமாறு: காணாமற்போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.ஆனாலும் அவர்கள் எப்போது விசாரிக்கப்படுவார்…
-
- 0 replies
- 265 views
-
-
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக மேலும் பேசிய அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தல், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்…
-
- 0 replies
- 715 views
-
-
ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்தும் இரகசியத்துடன் ஜீ.எல் உலக வலம் - சஜித் ஆரூடம் ஜெனீவா பிரேரணையில் இலங்கை தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போது ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் கியூபாவுக்கு தூதுவராக மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்ய வேண்டியது அதுவல்ல எனவும் தோல்விக்கான பொறுப்பை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 755 views
-
-
ஆணைக்குழு முன் ஈபிடிபியை குற்றம்சாட்டிய பெண்ணை குறுக்கு விசாரணை செய்யப் போகிறாராம் டக்ளஸ்! [saturday 2014-07-12 09:00] கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணையின் போது தமது கட்சியைக் குறிப்பிட்டு பெண்ணொருவர் கூறிய குற்றச்சாட்டுகள் வேதனையளிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு அரியாலை பிரதேசத்தில் அப்பெண்மணி வசித்து வந்ததாகவும், அப்போது வெள்ளைவேனில் வந்த இனந்தெரியாதோர் தனது கணவரை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது ஆணைக்குழுவினர் அந்தப் பெண்மணியிடம் உங்கள் கணவர் கடத்தப்பட்ட பகுதியை அந்தக் காலப்பகுதியில் நிர்வாகம் செய…
-
- 4 replies
- 339 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது. காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 175 பொதுமக்கள் சாட்சி யமளித்திருந்தனர். சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 13 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளித்திருந்தனர். இவ்வாறு சாட்சியமளித்த மக்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியத்தை முன்வைத்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் ஆணைக்குழுவ…
-
- 0 replies
- 287 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்…
-
- 0 replies
- 479 views
-