ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறையிலுள்ள அதன் பிராந்திய அலுவலகங்களிலும் பார்வையிட முடியும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாகக் கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் மூலமாகப் பெறப்பட்டு, பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காணாம…
-
- 0 replies
- 402 views
-
-
மட்டக்களப்பில் விபத்து; மூவர் பலி வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 09:07 -ரவீந்திரன், எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான் மட்டகளப்பு, புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். இவ் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் ஏனைய இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். வீதியால் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மற்றும் துவிச்சக்கர வண்டி, வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர். டொல்ப…
-
- 0 replies
- 386 views
-
-
நீதித்துறையினை அவமதித்திருக்கும் தேரர்கள் மீது உரிய நடவடிக்கை அவசியம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத…
-
- 2 replies
- 481 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கனரக பீரங்கிகளை மருத்துவமனைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் றோஸ்மேரி டிகார்லோ, ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தொடரினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த மாதத்தில் கூடிய இரண்டாவது கூட்டத்தொடரிலும் சிறிலங்கா தொடர்பான விவாதம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிக அழுத்தமற்ற இந்த கூட்டத்தொடர் மூடிய அறைக்குள் நடைபெற்றது. வன்னிப் பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, ஐ.நா. போன்றவ…
-
- 0 replies
- 600 views
-
-
சென்னையில் சினிமா நட்சத்திரங்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தென் இந்தியாவின் புகழ் பூத்த சினிமா நட்சத்திரங்களாக போற்றப்படும் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அர…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு…
-
- 3 replies
- 591 views
-
-
கொரோனா தொற்றாளர் அடையாளம் – கீரிமலை அந்தியேட்டி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 12ஆம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தமை தெரிய வந்துள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபர் கீரிமலைக்கு சென்றிருந்த நேரத்தில் கீரிமலைப் பகுதியில் வாகன பாதுகாப்பு வீதியில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உட்செல…
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்காவின் கண்டி நகரில் பேருந்து நிலையத்தில் தமது சொந்தக் கிராமத்துக்குச் செல்வதற்காகக் காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
இராணுவம் மீதான குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்கமுடியாது! - சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றில் உரை!! 'தவறு செய்யாத இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது தொடர்ந்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை உண்மையாகவே தவறு செய்ய வைத்துவிடாதீர்கள். அரசியல் இலாபங்களுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது' என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்…
-
- 1 reply
- 593 views
-
-
ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் விக்ரோரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழீழ மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சுமார் 12 மணி நேர மிகக் குறுகிய அழைப்பையேற்று பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியமையானது, மக்களின் பேரெழுச்சியை காட்டியது. இந்த கவனயீர்ப்பு கண்டண பேரணிக்கான அழைப்பை தமிழ் இளையோர் அமைப்பும் தமிழ் அமைப்புக்களும் விடுத்திருந்தனர். இன்று காலை 11 மணியளவில் விக்ரோரிய நாடாளுமன்றத்தின் முன் ஒன்றுகூடிய மக்கள்,வானதிர கோசங்களை எழுப்பி மெல்பேரன் வாழ் பல்லின மக்கள் பலரினதும் கவனத்தையீர்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. "சிறிலங்காவே இரசாயன அயுதங்களை பாவிப்பதை நிறுத்து..!!!…
-
- 0 replies
- 571 views
-
-
போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன் போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவை தொடர்பாக தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை. கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றமு…
-
- 7 replies
- 878 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் அரசபடைகள் வடக்குகிழக்கின் ஒவ்வொரு இடத்தைப் பிடித்த போதும், தென்னிலங்கையில் அது பௌத்த சிங்களத்தின் வரலாற்று வெற்றி என்றே புகட்டப்படுகிறது. அண்மையில் புதுக்குடியிருப்பைப் படையி னர் கைப்பற்றியிருக்கின்ற நிலையில் ரஜரட்ட இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே காணப்பட்ட பண்டைய நகரமே புதுக்குடியிருப்பு என்றும், இதை மீட்டதற்காக படையினருக்கு நன்றி கூறவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர். புதுக்குடியிருப்பை சிங்கள மன்னர்களின் வரலாற்றுடன் பிணைக்கச் செய்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு உரிமை கொண்டõடுகின்ற முயற்சியே இது. ஒட்டுமொத்த வடக்குகிழக்கும் சிங்கள மக்களின்…
-
- 1 reply
- 753 views
-
-
இலங்கையின் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு போட்டியின் போதே இலங்கை தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது. தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அதனை இறக்கி திரும்பவும் முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர். யாழ் நவாலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் போதே இலங்கைத் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. http://www…
-
- 4 replies
- 884 views
-
-
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) முள்ளியவளை நினைவாலயத்தில் முல்லைத்தீவு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும…
-
- 13 replies
- 921 views
-
-
சுவிஸ்முரசம் வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.. (படங்கள் இணைப்பு) 15.04.2009 இன்று மாலை 4 மணிக்கு இவரது உடல்நிலையை குடும்ப மருத்துவர் பரிசோதித்தார். இவரது உடல் நிலையைப் பரிசோதித்த பின்னர் இது தனது மருத்துவ அனுபவ காலத்தில் புதுமையானதென்றும் ஆகவே உளவியல் மருத்துவரையும் அழைத்தார். மருத்துவர்கள் இருவரும் இவரது உடல்நிலை மோசமடைந்து செல்…
-
- 0 replies
- 814 views
-
-
செங்கலடி இரட்டை கொலை: சந்தேக நபர்களுக்கு 8ஆம் திகதிவரை விளக்கமறியல் பேரின்பராஜா சபேஷ் செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். செங்கலடி …
-
- 0 replies
- 754 views
-
-
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 'சு.க.வுக்கு தோல்வியில்லை' கவிதா சுப்ரமணியம், வி.யுகாந்தினி 2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே வெற்றிபெறும் என்றும் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம்.மன்சூர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் 2 வருடம் கழிந்துவிட்டது. பிறக்கவுள்ள 2017ஆம் ஆண்டு, வெற…
-
- 0 replies
- 230 views
-
-
(நா.தனுஜா) உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார். அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்டரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நினைவுத்தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவுகூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூருவதில்…
-
- 0 replies
- 512 views
-
-
பயங்கரமான உயிர் கொல்லி இரசாயண திரவகம் திருகோணமலைக்கு ஏன் வந்தள்ளது? துருக்கி கப்பலுக்கூடாக சல்பூரிக் அமில இரசாயண திரவகத்தை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்த கப்பலிருந்து சல்பூரிக் அமிலம் ஒழுக்கேற்பட்டுள்ளது. கிட்லர் இந்த அசிட்டுக்குள்ளே தான் யூதரை போட்டு கரைத்தவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை. அப்படியானால் தமிழரை இந்த அசிட்டுக்குள்ளே போட்டுக் கரைப்பதற்கா இந்த அமிலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா? இந்த அமிலத்துடன் திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்திருப்பதை டெயிலி மிரர் 07.04.09 இணைய பத்திரிகையில் 10.40 வெளியிடப்பட்ட, "Navy repairing Turkish Sulfuric Acid Ship off Trincomalee" என்ற செய்தியில் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கையரசின் இன அழிப்பு கொ…
-
- 2 replies
- 2.2k views
-
-
நைஜீரிய கடற் கொள்ளையர்கள், இலங்கையர்களை கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யா, மியன்மார் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களே இந்தக் கப்பலில் பயணித்துள்ளனர். 14 கடற் கொள்ளையர்கள் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கொள்கலன் கப்பல் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91237/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 616 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையால் சமூக சீர்கேடுகள் அதிகரிப்பு வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் தரைவழியாக விநியோக ஸ்தர்களை சென்றடைகின்றமை பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கு கடற்பரப்பினூடாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை என இலங்கை இந்திய மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயலை திட்டமிட்டு ஒரு குழுவினர் மேற்கொண்ட…
-
- 0 replies
- 234 views
-
-
இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ? ஆனால் கண்டிப்பாக மே 13க்கு பிறகு இருக்காது. போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்று முழங்கிய தலைவி இன்று ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார். ஐந்துவருடம் ஆட்சியில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று மேடைக்கு மேடை இலங்கையில் போரை நடத்துவதே காங்கிரஸ்தான் என்கிறார் , இந்த ஞானோதயம் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை ஒருவேளை புத்தருக்கு போதி மரம் போல் இவருக்கு அம்மாவின் நிழல் போல. ஈழ தமிழர்களுக்கா உண்மையாக பாடுபடுகிறவர் என்று நினைத்து வந்த திருமா, நான் காங்கிரசின் விசுவாசி காங்கிரஸுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று சிதம்பரத்தில் முழ…
-
- 1 reply
- 1.6k views
-
-
கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழ…
-
- 6 replies
- 1k views
- 2 followers
-
-
மனித நடமாட்டமோ, கட்டடங்களோ இல்லாத வனாந்தரமாகக் காட்சிதரும் பரந்தன் முல்லைத்தீவுப் பிரதேசம்;போரின் உக்கிரத்தை உணர வைக்கிறது அந்தப் பகுதி: அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்ட பிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையுமின்றி மனித நடமாட்டமே இல்லாத, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை கைது செய்யாது என்ன செய்திருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தொடர்பில் தமிழ் நாட்டில் கருத்து வெளியிட்டமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்ட ஓர் நபரை செய்வதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில ஊடகங்கள் அசாத் சாலியை ஹீரோவாக்க முயற்சித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது, சிரேஸ்ட தமிழ்த் தலைவர் அமிர்த்தலிங்கம் அந்தப் பிரச்சினையை இளைஞர்களின் துடிப்பு மிக்க செயற்பாடாக உதாசீனம் செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பிற்காலத்தில்…
-
- 5 replies
- 585 views
-