ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன. நாளைய தினம் சனிக்கிழமை…
-
- 0 replies
- 280 views
-
-
20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) ந…
-
-
- 8 replies
- 551 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது. ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்…
-
-
- 12 replies
- 522 views
- 1 follower
-
-
குடும்பங்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன; பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 21 AUG, 2025 | 06:01 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 AUG, 2025 | 03:17 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்…
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை…
-
- 0 replies
- 84 views
-
-
தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற…
-
- 0 replies
- 82 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் த…
-
-
- 6 replies
- 425 views
-
-
மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறை…
-
- 0 replies
- 83 views
-
-
21 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார். அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன் 21 AUG, 2025 | 02:40 PM வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்கள் ப…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
21 AUG, 2025 | 12:40 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொ…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 AUG, 2025 | 08:08 PM மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகர…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீ…
-
- 1 reply
- 156 views
-
-
பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கை…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
20 AUG, 2025 | 04:03 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 2…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
20 AUG, 2025 | 05:45 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்…
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின்…
-
- 0 replies
- 204 views
-
-
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்…
-
- 0 replies
- 135 views
-
-
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ்…
-
- 0 replies
- 112 views
-
-
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண…
-
- 1 reply
- 177 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:18 PM லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெர…
-
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 01:52 PM வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண ம…
-
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
20 AUG, 2025 | 04:55 PM 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
09 AUG, 2025 | 03:32 PM முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு -…
-
- 11 replies
- 692 views
- 1 follower
-