Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்! January 21, 2022 2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டுக்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல் வேண்டும் என்றும் சபை தீர்மானித்துள்ளது. தற்போதைய மற்று…

  2. ஆங்கிலப் படத்திரையுலகிற்குப் பரிச்சயமானவர்கள் பலரும் இவரை நன்கு அறிவர். மோகன் பிரீமன் என்னும் பெயர் கொண்ட இவர் நெல்சன் மண்டேலவாக நடித்திருக்கிறார். மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் உயிரோடு இருக்கும் இவரது படத்தைப் போட்டுத் தமிழகத்தில் பெரிய போஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். யாகூ அதனைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது.

    • 5 replies
    • 1k views
  3. நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=156878

    • 0 replies
    • 256 views
  4. யேர்மனியில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு யேர்மனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது யேர்மனி வாழ் ஈழத்தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு யேர்மனி முழுவதும் அமைக்கப்பட்ட 110 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியது காலை வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டவுடன் யேர்மன்வாழ் தமிழ்மக்கள் தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு தங்கள் வாக்குகளை பதிவுசெய்த வண்ணமுள்ளனர் http://www.pathivu.com/news/5226/54/.aspx

    • 0 replies
    • 489 views
  5. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பாணந்துறையில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் இராபோசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார். சந்திரிக்காவுக்கு ரணிலுக்கும் இடையிலான சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல், அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன் போது பேசப்பட்டுள…

  6. வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழில் இடைநிறுத்தம்! February 9, 2022 வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார். https://globaltamilnews.net/2022/172875

  7. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நேரடியாகப் பங்கேற்ற லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். அப்போது இந்திய இராணுவத்தின் 53வது காலாற்படைப்பிரிவின் கீழ் செயற்பட்ட கூர்க்கா படைப்பிரிவு ஒன்றின் கொம்பனி கட்டளை அதிகாரியாக லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் போரில் பங்கெடுத்திருந்தார். புலனாய்வு உள்ளிட்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் நிபுணரான இவர், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், ஆயுதப்போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைக…

  8. ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB படக்குறிப்பு, நீதி அமைச்சர் அலி சப்ரி ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…

  9. முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்பத் திட்டம்: முரளிதரன் (கருணா) தமிழீழ விடுதலைப் புலி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்ப உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக இவர்கள் பாடுபட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆர்.மௌனகுருசாமி ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பி உள்ளதாக தேசநிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் ஐக்கிய மக்க…

    • 2 replies
    • 1.3k views
  10. தேர்தல் முடிவுகளை நிராகரிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல். இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் பல்வேறுபட்ட மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, அதன் முடிவுகளை ரத்துச் செய்யவேண்டும் எனக்கோரி எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தேர்தல் காலங்களில் அரச ஊடகங்கள் , அரச சொத்துக்கள் , அரச அதிகாரிகள் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு சார்பாக செயற்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையாளர் உட்பட 20 அதிகாரிகள் இணைந்து பதிவான வாக்குகளை ராஜபக்சவிற்கு ஆதரவாக மாற்றியாதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது பா.உ ரவி கருணாநாயக்க, பா.உ ஜோன் அமரதுங்க, ஜே.வி.பி தலைவர் சோமவன்ச…

  11. தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர். இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

    • 17 replies
    • 4.5k views
  12. இந்திய இராணுவத் தேவைக்கு மத்தலவைப் பாவிக்க முடியாது கட்டுப்பாடு விதிக்கின்றது இலங்கை மத்தல வானூர்தி நிலை­யத்தை இரா­ணு­வத் தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்ற முக்­கி­ய­மான நிபந்­த­னையை இந்­தி­யா­வி­டம் இலங்கை முன்­வைத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­­படு­கி­றது. மத்­தல வானூர்தி நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னத்­துக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் வழங்­கும் கூட்டு முயற்சி உடன்­பாட்­டைச் செய்து கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. மத்­தல வானூர்தி நிலை­யம் தொடர்­பாக இந்­தி­யா­வு­டன் செய்து கொள்­ளத் திட்­ட­மி­டப்­ பட்­டுள்ள உடன்­பாட்­டில், இந்த வானூர்தி நிலை­யத்தை இரா­ணு­…

  13. வட்டுவாகல் கோத்தாபாய கடற்படையினருக்கு தமிழர்நிலங்களை விடுவிக்கும் எண்ணமில்லை; மாறாக நிலங்களை பறிக்கவே தொடர்ந்தும் பிரயர்த்தனம் – ரவிகரன் குற்றச்சாட்டு Digital News Team 2022-03-05 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர் இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் அக்காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் கடற்படைக்கோ, ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இல்லை எனவும், மாறாக தமிழ் மக்களின் காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர்கள் செயற்படுவதாகவும் முன்னா…

  14. சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு சிறீலங்காபடையின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் துணைவியார் சரத்பொன்சேகாவினை விடுதலைசெய்யுமாறு மனுத்தாக்கல் செய்யதிருந்தார். அடிப்படை உரிமை மீறல் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சரத்பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளதுடன் துணைவியார் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. eelaman.com

  15. தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை – ரணில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறினா…

    • 2 replies
    • 251 views
  16. அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்…

  17. கடன் மறுசீரமைப்பிற்காக... அமெரிக்காவை, நாடுகின்றது அரசாங்கம் ! கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை நாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1272879

  18. உயர் பாதுகாப்பு வலய வீடுகள் விரைவில் சொந்தக்காரர்கள் வசம்! இராணுவ தளபதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள் கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனஇராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார் மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று உறுதியளித்தார். ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத…

    • 2 replies
    • 607 views
  19. ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…

  20. இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது... இ.தொ.கா! இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1273761

  21. ரணில் விக்கிரமசிங்க குழுவினர் இன்று யாழ்.நகர் வருகின்றனர்:வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம்! March 19th யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஐ. தே.கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் செய்யும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் டி.எம். சுவாமிநாதன், ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் சகிதம் வரும் ரணில், பிற்பகல் இரண்டு மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுவார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு ரணில் குழுவினர் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட முன்னா…

  22. இறுதி அறிக்கை வரும்­வரை பொறுமை காத்­தல் அவ­சி­யம் “தற்­போது வெளி­வந்­தி­ருப்­பது இடைக்­கால அறிக்கை. இது­வரை பொறு­மை­காத்த நாங்­கள் இன்­னும் கொஞ்­சக் காலம் பொறுமை காத்­தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்­னரே – இடைக்­கால அறிக்­கையை நாம் தூக்கி எறி­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­கத் தெரி­ய­வில்லை. புதிய அர­ச­மைப்பு முயற்­சியை நாமே குழப்­பிக் கொண்­ட­தாக இருக்­கக் கூடாது” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், புளொட் அமைப்­பின் தலை­வ­ரு­மான த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் அமைக்­கப்­பட்ட உப­கு­ழு­வுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தலைமை தாங்­கி­யி­ருந்­தார். இந்த …

    • 3 replies
    • 534 views
  23. நல்லூர் ஆலயத்தைச் சூழவுள்ள நடை பாதை வியாபார நிலையங்களை நாளை மறுதினம்ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அகற்றுதல்வேண்டும் என்று யாழ். மாநகர சபை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஏ9 ஊடான போக்குவரத்து முற்று· முழுதாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.கு டாநாட்டில் பிரபல்யமான இடங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வீதியோர நடை பாதை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒருசில மாதங்களாக நல்லூர் ஆலயச் சூழலிலும் பெருமளவில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. இதற்கான வாடகை வரியையும் இவர்கள் நாளாந்தம் செலுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இப்பிரதேசங்களால் போக்குவரத்துச் செய்யமுடியாதவாறு நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருகிறது. …

    • 2 replies
    • 1.2k views
  24. போரில் பயங்கரவாதிகள் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது – குறி தப்பவில்லை என்கிறார் விமானப்படைத் தளபதி. [Tuesday, 2014-02-11 17:38:02] போரில் விமானப்படையினர் பயங்கரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம தெரிவித்துள்ளார். விமானப் படையினரின் தாக்குதல் தொடர்பாக எவரும் குற்றம்சுமத்த முடியாது. தேவையானால் வேண்டிய சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை முன்வைக்க தயாராக இருக்கின்றோம்.இலங்கை விமானப்படையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட வானில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான எழுதப்பட்ட புத்தகம் ஒன்று அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழிக்க விமானப் பட…

  25. கோழிக் கறிக்குள் ஹெரோயின் யாழ்.சிறைச்சாலைக்குள் மீட்பு Share விளக்­க­ம­றி­யல் கைதிக்கு ஹெரோ­யின் போதைப்­பொ­ருளை கடத்த முற்­பட்ட நப­ரொ­ரு­வர் நேற்று முன்­தி­னம் யாழ்ப்­பா­ணச் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. விளக்­க­ம­றி­ய­லில் இருக்­கும் கைதி­யொ­ரு­வ­ரைப் பார்ப்­ப­தற்­காக யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த குடும்­பத் தலை­வர் ஒரு­வர் போத்­தல் ஒன்­றி­னுள் கோழிக்­கறி கொண்டு சென்­றுள்­ளார். அந்த கோழிக் கறி மீது சந்­தே­கம் கொண்ட சிறைக்­கா­வ­லர்­கள் அதனை பரி­சோ­தித்­துள்­ள­னர். அப்­போது கோழிக்­க­றி­யின் குழம்­ப…

    • 1 reply
    • 201 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.