Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆவா குழுவினரின் கைதிற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையற்றது-சுரேஷ் வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் பாரிய குற்றச்செயல்களில் ஈடுப டுபவர்களாக இருப்பின் அவர்கள் இலங்கையின் பாரிய குற்றங்களுக்கான சட்டங்களின் கீழ் தண்டி க்கப்படலாம். அதைவிடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதானது தேவை யற்றதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடரும் கைதுகள் தொடர்பிலும் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப டுவது குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறி ப்பிட்டார். மேலும் …

  2. ஆவா குழுவினர் அட்டகாசம்! நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக…

    • 4 replies
    • 687 views
  3. ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…

  4. ஆவா குழு­வினர் என்ற சந்­தே­கத்தில் கைதானோர் மீது குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை மனோவின் அதி­ருப்­தியை அடுத்து முடி­வு (நமது நிருபர்) வடக்கில் ஆவா குழு உறுப்­பி­னர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 11 பேருக்கும் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி நீதி விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்டம் நேற்­றி­ரவு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் முன்­ன­ணியி…

  5. ஆவா குழுவினர் நால்வர் நேற்று வாளுடன் கைது புதுவருட தினத்தில், நவாலி – அட்டகரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து, பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த ஆவாக்குழுவைச் சேர்ந்த நால்வரை, இன்று கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் நால்வரும், உடுவில் மற்றும் நவாலி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஆவா-குழுவினர்-நால்வர்-நே/

  6. ஆவா குழுவின் அச்சுறுத்தல்; ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு August 10, 2020 இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச் செய்யப்பட்டது. புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொர்ச்சியாக இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை முன்னணி நடத்திவருகின்றது. http://thinakkural…

  7. ஆவா குழுவின் ஆயுத பூஜை… யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் . அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது. அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர…

  8. ஆவா குழுவின் சின்னா மானிப்பாய் காவல்துறையினரால் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த சின்னா என அழைக்கப்படும் , ரவிகிருஷ்ணா (வயது 23) எனும் இளைஞரையே மானிப்பாய் காவல்துறையினர் இன்று வியாழகிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபர் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்ன…

  9. ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…

  10. ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது! Nov 12, 2025 - 11:15 AM ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmhvku4bc01jlo29n3kszllx7

  11. ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரண்டைந்தார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன. அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாகச் சரண்டைந்தார். இதனை அறிந்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் காத்திருக்கின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/109957

  12. ஆவா குழுவின் தலைவர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவுக்கு தலைமை வகித்து வரும், அந்த குழுவின் ஆரம்ப தலைவரான “ஆவா” என்ற குமரேசரத்னம் வினோதன் என புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆவா என்ற வினோதன், அந்த குழுவின் ஆரம்ப உறுப்பினரான மோகன் அசோக் என்பவருடன் இணைந்து இந்த குழுவை வழிநடத்தி வந்துள்ளார். பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் தொழில்நுட்பங்கள் வழியாக இந்த குழுவினர் தொடர்புகளை கொண்டுள்ளனர் என புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கூறுகின்றன. பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள இந்த நபர்களை கைது செய்ய பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை…

  13. ஆவா குழுவின் பகிரங்க எச்சரிக்கை! வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள் Report us Theesan 2 hours ago வவுனியாவில் இன்று காலை முதல் பல வீதிகளில் ஆவா குழுவினரின் பொது மக்களுக்கான பகிரங்க எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா - குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகளில் வீசப்பட்ட நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர். …

  14. ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர் (ஆர் .யசி) ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென உறுதியாக கூறமுடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது அரசாங்கதின் கடமையாகும். ஆனால் வடக்கில் பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று அர்த்தம் அல்ல. வடக்கில் இராணுவத்தை பலப்படுத்துவது அவசியம் எனவும் அ…

    • 4 replies
    • 449 views
  15. ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அ…

  16. ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கை யும் அச்­சு­றுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே அக்­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தது. ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, இந்த விவ­காரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதான மூன…

  17. ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் ? யாழில்.இயங்கும் ஆவா குழுவில் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் உள்ளதாக சில இரகசிய தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாது, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் பலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் எனும் நபர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை ஆவா குழுவிற்கு தகவல்களை வழங்கும் உளவாளியாக செயற்பட்டவர் எனும் சந்தேகத்தில் நேற்று முன்தினம்…

  18. ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத் தண்டனை! நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்காக ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்பட்ட நிசா விக்டருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மல்லாகம் நீதிவான் மன்றம் இன்று தீர்ப்பளித்தது. மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபரான நிசா விக்டர், அந்த வழக்கில் முற்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த சந்தேக நபர் நீதிமன்…

  19. ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு! In இலங்கை June 14, 2019 8:35 am GMT 0 Comments 1305 by : Benitlas ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன…

  20. ஆவா குழுவிற்கு, வடக்கு ஆளுநர் அங்கீகாரம்? – PTA ஐ பயன்படுத்தி உள்ளே போட வேண்டும்: கொதிக்கிறார் வாசு யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,”யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும். அது அர…

  21. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா எனக் கூறப்படும் குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இராணுவச் சிப்பாய் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருபவர் என அந்த தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த 6 சந்தேக நபர்களில் இராணுவச் சிப்பாய்க்கு மேலதிகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். ஆவா குழு தொ…

  22. ஆவா குழுவுக்கு புலி முத்திரை குத்துவதற்கு முயற்சி முஸ்லிம் ,சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ அல்­லது வேறு எந்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ நாட்டில் செயற்­ப­டுத்த எவ­ரா­வது முயற்­சிப்­பா­ராயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. மீண்­டு­மொரு இரத்­தக்­க­ளரி நிலைமையை உரு­வாக்க மேற்­கொள்ளும் முயற்­சி­களை முறி­ய­டிக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தையும் நடை­ மு­றைப்­ப­டுத்த தயா­ரா­க­வி­ருக்கின் றோம் என்று புத்­த­சா­சன மற்றும் நீதி அமைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ தெரி வித்தார். தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு இருக்­கி­றது. ஆவா குழு­வி­ன­ருக்கு விடு­தலைப் புலிகள் முத்­தி­ ரையை குத்த பார்க்­கின்­றனர். இவ்­வாறு புலி முத்­தி­ரையை…

  23. ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த சாரு என அழைக்கப்படும் 17 வயதுடைய நபரே கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் , ஆவா குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பற்றி தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளோம். அவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த சி…

  24.  'ஆவா'வில் முன்னாள் இராணுவ வீரர் வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், இராணுவத்தில் சேவையாற்றியவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று, அறிவிக்கப்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/186086/-ஆவ-வ-ல-ம-ன-ன-ள-இர-ண-வ-வ-ரர-#sthash.4ruZHPV4.dpuf  'இராணுவத்தினால் 'ஆவா' இயக்கப்படவில்லை' வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு, இராணுவத்தினரால் இயக்கப்படும் குழுவல்ல என்றும் இராணுவத்தில் சேவையாற்றியவர்கள் அதில் உள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெ…

  25. ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி Published by Daya on 2018-09-20 14:37:05 ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் , நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.