Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காலநிலை சீரானதும் சுமார் 5000 கிலோ மீற்றர் ஆபத்தான கடல் பயணத்தை மேற் கொண்டுஅவுஸ்திரேலியா செல்வதற்கு ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று அவுஸ்திரேலியாவின் டெய்லி ரெலிகிறாப்ட் பத்திகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்களை சட்ட விரோதமாக கடத்திச் செல்லும் முகவர்கள் பாரம்பரிய வழியான இந்தோனேசியா, மலேசியா ஆகியவற்றை தவிர்த்து ஆபத்தான பாதைகள் வழியாக நேரடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு மக்களை கொண்டு செல்ல இருக்கிறார்கள் என்று சிரேஷ்ட கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட இலங்கை கடற்படை அதிகாரிகள் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகளுடன் இத்தகைய சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன்னரே உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சட்டவிரோத ஆட்கடத்தல்களால் மனித …

  2. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லாவூட் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதி ஒருவர் மீது சேர்கோ என்ற நிறுவன காவலாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லாவூட் அகதி முகாம் ஆலோசனைக் குழுவொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், ஒரு நபர் மாத்திரம் சிகிச்சைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் சேர்கோ எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தில் 20 காவலாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 5 அல்லது 6 பேர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகவும் அகதி அதிரடி கூட்டணி கட்சியின் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார். இன்று (31…

  3. ஆஸி.சென்ற சர்ச்சைக்குரிய படகின் படம் வெளியாகியது (இணைப்பு) இந்தியாவில் இருந்து, 153 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு அவுஸ்ரேலியா சென்ற படகின் ஒளிப்படம் முதல்முறையாக வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இந்த ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த படகு, கடந்த ஜூன் மாதம் அவுஸ்ரேலியப் பயணத்தை ஆரம்பிக்க முன்னர், துறைமுகத்தில் தரித்து நின்ற போது இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தப் படத்தில் உள்ளது தான், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த படகில் உள்ளவர்களின் உறவினர்களே இந்தப் படகு தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்ரேலிய சட்டவாளர்களிடம் கூறி…

    • 0 replies
    • 446 views
  4. ஆஸி.செல்லத் தயாராகவிருந்த வடக்கு,கிழக்கைச் சேர்ந்த 58 பேர் கைது: சிலாபத்தில் படகு மீட்பு [Friday, 2011-03-11 16:14:05] சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 58 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பிரதேங்களிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக முறையில் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 58 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 40 ஆண்கள்,12 பெண்கள் மற்றும் 6 குழந…

  5. ஆஸி.யின் நிலைப்பாட்டில் அவசர பரிசீலனை வேண்டும் – இலங்கை தொடர்பில் கோடன் வைஸ்! அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதனை சிறிலங்காவில் மேற்கொள்ள முடியும் எனக் கூறுகின்றது. இவ்வாறு சிறிலங்காவில் போரின் இறுதி மூன்றாண்டுகள் ஐநாவின் பேச்சாளராக பணியாற்றியவரும், சிறிலங்காவின் போரை விபரிக்கும் The Cage என்னும் நூலின் ஆசிரியருமான Gordon Weiss* தனது கருத்தை The Newcastle Herald என்னும் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின…

    • 0 replies
    • 383 views
  6. ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/…

  7. ஆஸி.யை தொடர்ந்து கனடாவிலும் இந்தியர் மீது தாக்குதல் வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த…

    • 2 replies
    • 1.8k views
  8. ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு news ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்களப் பிரதேச சபை களுக்கு தலா 50 மில்லியன் ரூபாய்களும், வடக்கு கிழக்கின் 79 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்றிட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண…

  9. ஆஸிக்கு தஞ்சம் கோரிச் சென்றவர்கள் பசுபிக் தீவில் உள்ள அகதி முகாமுக்கு 83 பேரில் எவருமற்ற ஒரு சிறுவனும்! அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் 83 இலங்கை அகதிகளையும் பசுபிக் தீவான நவ்றுவில் தடுத்து வைப்பது என்று ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்திருக் கின்றது. இவர்களில் மிகப் பெரும்பாலா னோர் இலங்கைத் தமிழர்கள். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர். நாட்டுக்கு வெளியே இவர்களைத் தடுத்துவைத்துப் பின்னர் அவர்களது தஞ் சக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்தி வரும் செயலில் ஈடுபடும் கடத்தல்காரர் களுக்கு இதன்மூலம் உறைப்பானசெய்தி ஒன்றைத் தெரிவிக்க ஆஸ்திரேலி…

  10. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் 141 பேரை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவிற்கு 185 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. இவ்வாறு புகலிடம் கோரிச் சென்றவர்களில் அதிகமானோர் இலங்கையர்கள் எனவும், சிலர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்…

    • 0 replies
    • 572 views
  11. 18 ஏப்ரல், 2013 ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை முதலில் வி…

  12. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்திருந்ததாகவும் அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் 6 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் , சிலாபம், கொழும்பு மற்றும் மாரவில பக…

  13. ஆஸியிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 30 பேருக்கு விளக்கமறியல் சனிக்கிழமை, 10 நவம்பர் 2012 10:13 0 COMMENTS (கே.என்.முனாஷா) அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 30 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்றை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்காவை வந்தடைந்தனர். நீர்கொழும்பு, ஜா-ஹெல, சிலாபம், வென்னப்புவ உ…

  14. ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Friday, 2012-12-28 18:58:44] அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது. நாடு கடத்தப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் தலா ஐந்து லட்ச ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாத்தறை, காலி,…

  15. நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்திவந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது - 27) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்துவந்த சுன்னாகம் சிவன்கோவிலடியைச் சேர்ந்த தி.பிரகாஷ் (வயது 23) என்பவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போத…

  16. ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…

  17. ஆஸியில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம்! வியாழன், 11 நவம்பர் 2010 09:02 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம் ஒன்று அடித்துள்ளது. இவர்கள் எந்நேரமும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவர்களின் தலைவிதியை மாற்றக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று இன்று ஆஸி நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டு உள்ளது. அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டமை மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை ஆகியவற்றை ஆட்சேபித்து இலங்கையர் இருவர் அங்கு மேல்நீதிமன்றம் ஒன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்குகளை ஏழு பேர் கொண்ட நீதி…

  18. பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20 ஆயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக இலங்கை - அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கை ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்திற்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. 2012ஆம் ஆண்டில் உயர் ரக 2000 கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவை விவசாயிகளிடையே சிறந்த பயனை தந்துள்ளன. எனவே தான் மீண்டும் அவுஸ்திரேலியாவில…

  19. புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்று அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தால் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் இன்று 25ம் திகதி புதன்கிழமை நாடு கடத்தப்படுகிறார். இவரை நாடு கடத்தலில் இருந்து தடுப்பதற்கான முயற்சிகளை சட்டத்தரணிகள் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்படி குறித்த இலங்கையர் அவுஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 2.35 அளவில் பேங்கோக் நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார். அதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். குறித்த நபரை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவருடைய உயிருக்கு ஆபத்து என அவர் சார்பான சட்டத்தரணி மனு தாக்கல் செய்தபோதும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான நேரம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்…

    • 0 replies
    • 797 views
  20. அவுஸ்ரேலியா இருந்து இலங்கை வருகை தந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடந்த 2012 /8/12 படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று இரண்டரை வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வந்தவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத் தக்க இவர் கடந்த 2012 /8/12 சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றுள்ளார். மேலும் 64 பேருடன் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி 28 நாட்கள் கடலில் பயனித்து, அங்கு சென்று வீடு ஒன்றில் பணிபுந்து வந்த போது சுய விருப்பத்தின் பேரில் தான் இலங்கைக்கு திரும்பி வந்ததாக குற்றப் புலனாய்வு …

  21. ஆஸியில் இருந்து மேலும் 8 இலங்கை அகதிகள் நாடு கடத்தல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று புகலிடம் கோரிய 8 இலங்கை அகதிகள் சுயவிருப்பில் மீண்டும் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி நெளரு முகாமில் உள்ள 5 பேருடன் சேர்த்து 8 இலங்கை அகதிகள் நேற்று (16) வெள்ளிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் முடிவை இவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நௌரு தீவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் தொடர்ந்தும் சுயவிருப்பில் நாடு திரும்ப முன்வருகின்றமை அவுஸ்திரேலியா ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிற…

  22. அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒருவர் எஸ்.கமலேஸ். இவர் ஒரு சிறந்த சித்திரக் கலைஞர். கடந்த 16 மாதங்களாக சிறையில் கழியும் இருவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பல ஓவியங்களை அங்கு வரைந்து உள்ளார். இவரின் திறமை அங்குள்ள சில மனிதாபிமானிகள் மூலம் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. இவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் எதுவும் அற்ற நிலையில் இலங்கையில் இருக்கின்றார்கள்.

  23. டாக்டர்கள் அரசை எச்சரிக்கின்றனர் Workflow: Public மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 29, 2011 அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிச் சிறுவர்கள் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். . சிலர் தம்மை தாமே காயப்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். . இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற பலர் தற்போது பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். . சிலர் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தனியாக வைக்கப்பட்டுள்ளனர் . தொடர்ந்தும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்காமல், தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். . சில சிறுவர்க…

    • 0 replies
    • 659 views
  24. ஆஸியில் புகலிடம் மறுப்பு: இலங்கைத் தமிழர்கள் சிறைச்சாலைக் கூரையில் தற்கொலை முயற்சி! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 07:51 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள். பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.…

  25. ஆஸியில் புலிகள் தடை குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்தும். ஆஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியாகத் தடைசெய்யும் சாத்தியக்கூறுகள் பற்றி அந்த நாட்டு அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சுப் பிரதிநிதிகள் குழு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென அறியமுடிகின்றது. ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் உட்பட அரச அதிகாரிகளுடன் விடுதலைப் புலிகளின் தடைகுறித்து இக்குழுவினர் பேச்சு நடத்துவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுகளின் போது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய இலங்கை சமாதான முயற்சிகள் குறித்தும், வடக்கு, க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.