ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இலங்கையைச் சேர்ந்த ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி கட்சியின் தலைவர்கள் ராஜன் என்கிற ஞானசேகரன், வசீகரன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற உதவுமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின்போது 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைகளை இலங்கையிடம் வலியுறுத்துமாறும் அவர்கள் பிரதமரை கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்பரசும் உடன் இருந்தார். பிரதமரிடம், ஈழத் தலைவர்கள், இலங்கையின் தற்போதையை நிலையை விளக்கிக் கூறினர். பின்னர் அன்பரசு செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
-
- 0 replies
- 940 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சில விஷமிகள் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார். மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற…
-
- 2 replies
- 129 views
-
-
இ.தொ.கா - எஸ்.பி கடும் வாக்குவாதம்: கூட்டத்தில் குழப்பம் டி.சந்துரு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்துக்கும், இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இ.தொ.காவின் அங்கத்தவர்கள், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எவ்விதமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தின் போது, நானு ஒயாவில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் குடும்பமொன்றுக்கு எதிராக, நுவரெலியா பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறவேண்டு…
-
- 0 replies
- 869 views
-
-
இ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து? மறைந்த ஆறுமுகன் தொண்டமான் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரான முத்துசிவலிங்கம் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தலைவராக முத்துசிவலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்திற்குள் இது தொடர்பாக இ.தொ.கா இறுதி தீர்மானங்களை எடுக்கவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-கா-தலைவராக-மீண்டும்-ம/
-
- 0 replies
- 798 views
-
-
பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஶ்ரீங்கா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வேட்பு மனு கிடைக்கவில்லையெனத் தெரியவருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் 18ஆவது திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அவருக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது ஶ்ரீரங்கா மற்றுமொரு அரசியல் கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்க…
-
- 4 replies
- 467 views
-
-
""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான். நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல…
-
- 4 replies
- 1.2k views
-
-
முன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அலரிமாலிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார். http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81 -ரஞ்சித் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்து ம…
-
- 0 replies
- 671 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைகின்றன. அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் இரு கட்சிகளுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கத்துடன் இணையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவியும் இரு பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன. இதேபோன்று மலையக மக்கள் முன்னணிக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இ.தொ.கா. சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் விவகார, சமூக, அபிவிருத்தி அமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பிரதி தேசிய அபிவிருத்தி அமைச்சராகவும் எம்.சச்சிதானந்தன் பிரதிக்கல்வி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அ…
-
- 1 reply
- 940 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கும். அதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது என்று கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி. வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று பார்வையிட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்த தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்…
-
- 0 replies
- 278 views
-
-
இ.தொ.கா.வின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு [08 - December - 2007] [Font Size - A - A - A] * விடுவிக்கப்படாதோர் விபரத்தை சமர்ப்பிக்க பிரதம நீதியரசர் உத்தரவு த.தர்மேந்திரா கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை ஆட்சேபித்து இ.தொ.கா.வால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று வெள்ளிக் கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சக நீதியரசர்களான நிஹால் காமினி அரமரதுங்க, ஜகத் பாலபட்ட பெந்தி ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவே சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளின் கீழ் இ…
-
- 0 replies
- 821 views
-
-
இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும் – பொன்சேகாவை வலுப்படுத்துமா? -இதயச்சந்திரன் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது. வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் சலுகையாக, மீன் பிடித் தடை நீக்கமும், பாதை திறப்புக்களும் முன் வைக்கப்படுகின்றன. இயல்பு வாழ்வு திரும்பி விட்டதானதொரு கற்பிதம் உருவாக்கப்படுகின…
-
- 0 replies
- 764 views
-
-
க.கோகிலவாணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்திய வம்வசாவளியினரின் பாதுகாவலனாக கடந்த 75 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வதாரங்களை உயர்த்தி, அவர்களது அடிப்படை உரிமைகளை பெற்றுகொடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அவர்களை உயர்வடைய செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான பி.ராதாகிஷ்ணன் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தனது பவள விழாவை கொழும்பிலுள்ள அதன் தலைமயகத்தில் கொண்டாடியது. இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உப-தலைவர் பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட ப…
-
- 0 replies
- 265 views
-
-
இ.தொ.காவின் அமைச்சு பதவிகள் தொடர்பில் யாரும் தலையீட வேண்டாம்.! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த அமைச்சு பதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யாரிடமும் கேட்கவில்லை. அமைச்சு பதவிகளை கொடுப்பதற்கு முன்பே சிலர் இதனை கொடுக்க வேண்டாம் என விமர்சிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் இதில் தலையீட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் வழியுறுத்தியுள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.காவின் தொழிற்பயிற்சி கேட்போர் கூடத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர…
-
- 1 reply
- 308 views
-
-
இ.தொ.காவின் செயற்பாடு 08.12.2007 தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில நாட்களாக வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் விவரப் பட்டியலை நாளை மறுதினம் சமர்ப்பிக்கும்படி உயர் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றே இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது. இந்த விடயங்கøளை ஒட்டி, மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு குறித்து தமிழர் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் அது குறித்து இப்பத்தியில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவது…
-
- 0 replies
- 782 views
-
-
இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொட்டகல சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை,நிர்வாக சபை ஆலோசனையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் பொதுச் செயலாளர் பதவியை வகித்த அனுசா சிவராஜா அவர்கள் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.-(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-காவின்-பொதுச்-செயலாள/
-
- 1 reply
- 713 views
-
-
இ.தொ.காவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் பிரபா எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தின் கீழ்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து பல இடங்களில் போட்டியிடவுள்ளது. இதுதொடர்பான வேட்பு மனு கையெழுத்திடும் நிகழ்வானது கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இன்று (3) கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்றது. கொழும்பு,கொலன்னாவை,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. …
-
- 0 replies
- 289 views
-
-
15 APR, 2024 | 04:46 PM இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தனி…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
இ.போ.ச சாரதி கைது சாரதிகள், நடத்துநர்கள் திடீர் வேலை நிறுத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு இ.போ.ச.வவுனியா சாலைக்கு (டிப்போ) அருகில் உள்ள படையினரின் காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு வீச்சைத் தொடர்ந்து சாலைக்குள் புகுந்த படையினர் பேரூந்து சாரதி சத்தியமூர்த்தி என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். இவர் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை தமக்கு தெரியப்படுத்துமாறு கோரியே இவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேவேளை சாரதி சத்தியமூர்த்தியின் கைது குறித்து மனித உரிமை அமைப்புகள், மாவட்ட அரசாங்க அதிபர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 916 views
-
-
இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்! Published By: DIGITAL DESK 5 16 MAR, 2023 | 04:29 PM இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது. மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து வைக்கப்பட்டது. இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளமும் அங்கு திறக்கப்பட்டது. மேலும், மூன்று மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் 1315 என்ற தொலைபேசி மூலம் இருக்கைகளை மு…
-
- 5 replies
- 374 views
- 1 follower
-
-
இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்: மூவர் படுகாயம் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பஸ்வண்டியில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தாளங்குடா பகுதியில் இடம் பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் மீதே தாளங்குடா பிரதான வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் சேதமடைந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடி பொலிசார் விசாரண…
-
- 1 reply
- 306 views
-
-
19 Sep, 2025 | 03:12 PM யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்துத் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இ.போ.சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர், எந்த முடிவானாலும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே எடுக்க முடியும் என தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (18) யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றவேண்டுமெனக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெ…
-
- 0 replies
- 62 views
-
-
Published By: VISHNU 29 JUL, 2024 | 01:40 AM வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) முதற் கட்டமாக 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுக…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'டானியல் றெக்சியன்; ஈபிடிபியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்சியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர். கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்ற…
-
- 4 replies
- 1k views
-
-