ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
வானொலி மூலமாக ஒரு சமூகக் கட்டமைப்பை, ஊடகங்கள் உருவாக்கக்கூடிய ஒரு பொதுக் கருத்தை, ஒரு பொதுப் பண்பை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடி நாதத்தை வானொலிகளின் ஊடாகத்தான் நாங்கள் தக்க வைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்த பிஞ்சு குழந்தையை பாருங்கள்.இப்படியொரு வியாதியால் மரணிக்கும் 49 வது குழந்தை.வன்னியில் இருந்து மாண்டவர் போக தப்பிவந்தவர்கள்.வவுனியாவை வந்தடைந்து 15 நாட்களில் எஞ்சியிருந்தவர்களை பார்க்கவோ என்னவோ பூமியில் ஜனனித்தது.தற்போது கிட்டதட்ட இரண்டரைவயசு.காய்சல் வந்தது இரத்த பரிசோதனையின் பின் இரத்த புற்று நோயாக இருக்குமோ என தீர்மானித்த டாக்டர் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு டாக்டர்கள் குழந்தையின் உன்மை நிலையை பரிசோதனைகளின் முன்பே தெரிந்துகொண்டுள்ளார்கள்.காரணம் வன்னியில் இருந்து வந்தவர்கள்.இருந்தாலும் பிள்ளைக்கு உடனடியாக இரத்தம் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.அதற்கிடையில் காலன் அணைத்துவிட்டான். பின்பு கிடைத்த தகவல்:- பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
பாடசாலை மாணவர்களை போதைப்பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கான விரிவான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி ரிச்மண்ட் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகப் பணம் கிடைப்பதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, வித்தியாவின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இதுபற்றி பலரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரிவித்தார். அத்துடன், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் மதுபாவனை விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதப் பண்புள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பு தமக்கிருப்பதாகவும் கூறினார். http://ne…
-
- 2 replies
- 648 views
-
-
மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், இன்று (11) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/115743/
-
- 2 replies
- 428 views
-
-
களுபோவில சிறுவர் வைத்தியசாலையின் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘க்ளோக்சிலின்’ என்ற மருந்தில் கொசு ஒன்று காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படதாகும். குறிப்பிட்ட இந்த மருந்து காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, இந்த விடயம் தொடர்பில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ஒளடத அதிகார சபை ஆகியனவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மருந்து வகை தற்போது பாவனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். http://akkinikkunchu.com/new/
-
- 0 replies
- 1.6k views
-
-
கே.பி.யை தவறாக புரிந்துகொண்ட அமைச்சர் தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார். அவ்வில்லத்துக்கு திடீரென விஜயம் செய்த சுவாமிநாதன், கே.பி.யை அடையாளம் கண்டுகொள்ளாமல் யார் நீங்கள் என வினவியுள்ளார். அப்பொழுது தான்தான் குமரன் பத்மநாதன் என அறிமுகப்படுத்தியிருக்கிறார் கே.பி. உடனே ஆச்சரியப்பட்ட சுவாமிநா…
-
- 2 replies
- 502 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள மத சார்ந்து செயற்படும் குழுக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகம பிரதேசத்தை சேர்ந்த சர்வமத குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம்; ஒன்றை மேற்கொண்டு இன்று (18)வருகை தந்துள்ளனர். மன்னார் மாவட்டதில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் மத ரீதியான நல்லெண்னத்தை வளர்துக்கொள்ளும் முகமாகவும் நேரடியாக திறந்த மத கலந்துறையாடல்களுக்கு வழி சமைக்கும் வகையில் குறித்த பயண…
-
- 2 replies
- 436 views
-
-
தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து! தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378019
-
- 0 replies
- 586 views
-
-
இரண்டு வருடத்தில் 59 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை - தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் சிறீலங்கா அரச படைகளாலும், அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களாலும் 59 மனித நேயப் பணியாளர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மன்னாரில் கடந்த 26ஆம் திகதி மேற்கொண்ட ஊடுருவித் தாக்குதலில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை நிக்கொலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். மன்னார் துணுக்காய்க்கு அருகிலுள்ள கல்விளானில் வெள்ளாங்குளம் வீதியில் மனிதநேயப் பணி நிமித்தம் சிற்றூர்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர் கொல்லப்பட்டிருந்தார். மனிதநேயப் பணியாளரான வணக்கத்திற்குரிய பிதா நிக்கொலாஸ்பிள்ளை படுகொலை செய…
-
- 0 replies
- 913 views
-
-
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு இராஜாங்க செயலகத்தின் பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார…
-
- 5 replies
- 1.4k views
-
-
பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்! இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதா…
-
- 0 replies
- 376 views
-
-
அரசியல் சத்துராதிகளை அடையாளம் கண்டு கொள்வதே முதலாவது தேவை [10 - October - 2007] * அரசியல் வங்குரோத்தே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதன் பிரதான காரணி வ.திருநாவுக்கரசு `இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல. அது தொடர்ந்தும் யுத்தம் நடத்துவதற்குரிய நிலைமைகளையே தோற்றுவிக்கும். சமாதானத்தைப் புழுதியில் எறிவது பொறுப்புணர்ச்சியற்றது இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஜேர்மன் தூதுவர், ஜோர்ஜன் வீர்த் கூறினார். சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் ஒரு தடவை தூதுவர் வீர்த் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. எனினும், இம்முறை வீர்த் தனது உள்ளக் கிடக்கையை சற்று விரிவாக விளக்கியுள்ளார். அதாவது, "சமாதானம் கொண…
-
- 0 replies
- 916 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வடக்கு ஆளுநரின் வாசஸ்தலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசியும் சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஷின் உயஸ்தானிகரும் இன்று மாலை வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்…
-
- 0 replies
- 463 views
-
-
பெல் பொட்டிங்கர் எனும் பிண வியாபார செய்யும் ( இனப்படுகொலையாளிகளை காப்பாற்றும் பொதுசன தொடர்பு ஊடக நிறுவனம்) பிரித்தானிய நிறுவனம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இவர்கள்தான் மஹிந்த இராஜபக்ஷவிற்காகவும், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அரசுக்காகவும், மாலைதீவுக்காகவும் இன்னும் பல இனப்படுகொலையாளிகள், குற்றவாளிகள் ஆகியோரை காப்பாற்றும், நியாயப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். . இந்த பெல்பொட்டிங்கர் அண்மையில் அண்ட கவர் ஊடகவியலாளரிடம் மாட்டிக்கொண்டு சில இரகசியங்களை கசியவிட்டுள்ளனர். யானைக்கும் ஒரு நாள் அடி சறுக்கும் என்பதுபோல அண்டகவர் ஊடகவியலாளரிடம் மிகப்பெரிய நிறுவனத்தின் ஒரு தலைவர் மாட்டிக்கொண்டது அவர்களின் இமாஜையே கவிட்டுவிட்டது. இனி இவர்கள் ( பெல்பொட்டிங்கர்) நிறுவனம் தமத…
-
- 0 replies
- 588 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை: பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசாவுடன் செவ்வி…. (புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் தற்போதைய நிலவரம் என்ன? இவ்வழக்கில் இருந்து நீங்கள் விலகியதன் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன?, எதிர்காலத்தில் இந்த வழக்கில் ஆஜராவீர்களா?, தடயங்கள் அழிக்கப்பட்டதாக அரசியல்வாதி ஒருவரால் குற்றம் சாட்டுவதன் காரணம் என்ன? அந்த குற்றச்சாட்டு உண்மையா?... உங்களுக்கும், அந்த அரசியல்வாதிக்கும் உள்ள பிரச்சினை என்ன?? உட்பட பல கேள்விகளுக்கு, மனம்திறந்து ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் அளித்த பதில்கள்..) http://www.athirady.com/tamil-news/howisthis/627997.html
-
- 0 replies
- 348 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
கிழக்கில் விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமோண்டோ அணி ஊருவல்: "லக்பிம" சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற கொமோண்டோ அணியினரை கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரையிறக்கி உள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:விபரங்களுக்கு
-
- 2 replies
- 3k views
-
-
சுவிஸின் சுற்றுலாத் துறையான Travelhouse (SBB) எனும் நிறுவனம் Sri Lanka Air Lines உடன் இனைந்து உல்லாசத் துறையை மேன்படுத்தும் முகமாக விளம்பர நடைவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.சிறீ லங்க அரச பயங்கரவாத நாடானது தனது தமிழின அழிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்து வரும் நிலையில், அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களையும் ஊடகங்களையும் தமிழீழ பிரதேசங்களுக்குள் அனுமதிக்காத நிலையில் , இராணுவ அடக்குமுறை வேலிக்குள் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்படும் நிலையில், கடத்தல்கள்;, கப்பம்பெறுதல்; காணாமல் போகுதல்;, பாலியல் வன்முறைகள் தொடர்ந்துவரும் நிலையில், சித்திரவதைமுகாம்கள் அகற்றப்படாத நிலையில,; திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்களக் க…
-
- 1 reply
- 768 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிளவை வெளிப்படுத்திய தேர்தல் அறிக்கை வெளியீடுJUL 28, 2015by கி.தவசீலன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் இன்று நடந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது. அதிபர் செயலகத்தில் இன்று காலையில், தேர்தல் அறிக்கையைக் கையளிக்கும் நிகிழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்களாக சுசில் பிரேம்ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா,தினேஸ் குணவர்த்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ,குணசேகர, டிலான் …
-
- 0 replies
- 363 views
-
-
சமூக வலைத்தளங்களூடாக வதந்தி; சந்தேகமிருந்தால் அழைக்கவும் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, பி.ப. 12:04 Comments - 0 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது சந்தேகநபர்கள் எவரும் இருப்பின், கீழ்க்கண்ட தொலைபேசி இ…
-
- 0 replies
- 461 views
-
-
அரச படைகளையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் அறிக்கையாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு இணங்க தயாரிக்கப்பட்டவையாகவோ அல்லது அதற்கு இணங்க விசாரணைகளை நடத்தப்பட்டதாகவோ இல்லை மாறாக மேலும் பல ஆணைக்குழுக்களை நிறுவி நடந்து முடிந்த கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, குற்றங்கள் கண்டறியப்படவில்லை, அதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளப்படுத்தப்பட விலலை. அது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்படவில்லை. மொத்தத்தில் இது இனங்களிடையே ஐக்கிய…
-
- 0 replies
- 565 views
-
-
சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக என்னை புறந்தள்ளுகிறது கூட்டமைப்பு! வேட்பாளர் மதினி நெல்சன் Aug 03, 20150 பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அத்தகைய சம்பவங்களின் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன். யாழ்ப்பாணத்தில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார். பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…
-
- 4 replies
- 1.9k views
-
-
2 கோடி ரூபா பெறுமதியான அபின் மீட்பு! யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியபோது, அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து குறித்த பொதியினை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிரேம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55068
-
- 0 replies
- 614 views
-
-
04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/1…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-