ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143597 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 'பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே ' என சபைக்குள் கோஷல் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில்இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ் தேசியக்கூட்…
-
- 1 reply
- 309 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். அத்துடன் இப்போதுள்ள நிலையில் 92 ரக பெட்ரோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெட்ரோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளது. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கும். மேலும் ஆறு நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. எனினும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான த…
-
- 0 replies
- 249 views
-
-
Published by T. Saranya on 2022-02-24 15:28:30 (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் காணி அபகரிப்பு நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்டமாக ஆரம்பித்துள்ள போராட்டத்தினை வடக்கு, கிழக்கிலும் பாரியளவில் தொடர்வோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அ…
-
- 0 replies
- 242 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-24 21:50:43 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல…
-
- 0 replies
- 183 views
-
-
யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் போல மிக விரைவில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுக் கொள்வது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பாரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.அதே போன்ற ஒரு வெற்றியை இலங்கையில் அடுத்து வருகின்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றி பெறும் அந்த காலம் மிக தூரத்தில் இல்லை. இன்று…
-
- 9 replies
- 673 views
- 1 follower
-
-
நாடாளுமன்றில்... டோர்ச் லைட்களுடன், எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்! ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை (torches) கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையை அடுத்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2022/1268837
-
- 1 reply
- 207 views
-
-
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெ…
-
- 14 replies
- 726 views
-
-
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா -யாழ் நிருபர்- யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது . இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன். யாழ் மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில், அதிலும் பெ…
-
- 8 replies
- 841 views
- 1 follower
-
-
யுத்தக் குற்றத்தில் இராணுவமும் ஈடுபட்டிருக்கலாம்! February 24, 2022 யுத்தக் குற்றத்தில் இராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23.02.22) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் எதுவும் அரசாங்கத்திடம்…
-
- 1 reply
- 314 views
-
-
நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிப்பு ; நாட்டில் முதலீடு செய்வதற்கு யார் முன்வருவார்கள்? - ரோஹினி கவிரத்ன (நா.தனுஜா) உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் அவற்றை ஊக்குவிப்பதற்கும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார். ஆனால் நாளொன்றில் சுமார் நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்படும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு யார் முன்வருவார்கள்? அத்தோடு இறக்குமதிகளும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்…
-
- 0 replies
- 181 views
-
-
22 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/122986
-
- 0 replies
- 270 views
-
-
இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக இடம்பெறுகின்றது : நீதி அமைச்சர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவ…
-
- 1 reply
- 271 views
-
-
நிதி நெருக்கடிக்கு, தீர்வாக... இலங்கையில் முதலீடு செய்யத் தயார் – ஜெய்சங்கர் நிதி நெருக்கடியைக் குறைக்க இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குறிப்பாக அந்நியச் செலாவணியை பேணுவதற்கும், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் உதவியை வழங்கியுள்ளது. இருப்பினும் கடுமையான அந்நியச்…
-
- 1 reply
- 281 views
-
-
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ் 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக்காட்டினார். பயங்கரவ…
-
- 1 reply
- 201 views
-
-
ரணிலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கையா? முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியஉடன்படிக்கையொன்று காணப்படுகின்றது என வெளியாகும் செய்திகளை ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கியதேசிய கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைப்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார் என வெளியான தகவல்களையே ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் இசினிவிக்கி…
-
- 0 replies
- 225 views
-
-
ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன் எச்சரிக்கை வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத் தரத் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த…
-
- 0 replies
- 289 views
-
-
அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்! யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில…
-
- 0 replies
- 189 views
-
-
ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த அறிக்கை ஏற்கனவ…
-
- 0 replies
- 130 views
-
-
யாழில்... கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும், அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு! கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது , படகில் …
-
- 0 replies
- 154 views
-
-
பூநகரி, முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் விசனம்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம் குஞ்சுக் குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப் பட்டு எல்லையிடப் படுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் பொது மக்கள் பயன்படுத்திய பயிர் செய்கை காணிகள் தணியார்காணிகள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மிகப் பழம் பெரும் கிராமங்களான குஞ்ச…
-
- 4 replies
- 412 views
-
-
PreviousNext பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் திரண்ட தோட்ட மக்கள்! வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை…
-
- 6 replies
- 447 views
-
-
போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? February 22, 2022 “புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.” என முன்னாள் நாடாளும…
-
- 2 replies
- 645 views
-
-
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள…
-
- 5 replies
- 707 views
- 1 follower
-
-
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்…
-
- 1 reply
- 207 views
-