ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
கடவுச் சீட்டினை... பெறுபவர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்பொழுதே அதிகமான கடவுசீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக எண்ணிக்கையிலானோர் கடவு சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையினால் பத்தரமுல்லையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1…
-
- 1 reply
- 297 views
-
-
ஐ.நா விசாரணையை இலங்கை ஏற்க மறுத்ததால் தான் பயணத்தை கைவிட்டேன்! – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:10:19] ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்த காரணத்தால் தான், இலங்கைக்கான பயணத்தில் இருந்து தாம் விலக்கிக் கொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனால் உருவாக்கப்பட்ட "நன்மைக்கான தளம்" என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் - அனைத்துச் செலவுகளும் அந்த நிறுவனத்தால் ஏற்கப்பட்ட- பயணம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் மேற்கொள்ளவிருந்தார். அவரோடு பயணம் செய்யவிருந்த வேறும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை கடந்தவாரம் இரத்துச…
-
- 0 replies
- 205 views
-
-
போர் குற்றங்களும் மனித நாகரிகமும் – தமிழ்நெற் ஆசிரியர் குழு பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன. இந்தப் போரில் வெற்றிப் பெற்ற நாடுகள் தமது காலனித்துவ நாடுகளுக்கு ஈற்றில் விடுதலை வழங்கின சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையாக கையாள்வதில் கூட்டாளிகளான அமெரிக்காவும் இந்தியாவும் தவறிழைத் துள்ளன இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர், இந்திய ஒருமைப்பாடு, மேற்குலக நாகரிகம் ஆகியவற்றின் மீது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம் எந்தளவு முக்கியமோ அதேயளவு …
-
- 0 replies
- 898 views
-
-
கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் என ஞானசார தேரர் கூறியுள்ளார். இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின்அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேனஅமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் , கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். பதுர்தீன் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்கள் அங்கு சென்றுள்ளதாக பிரச்சினைபூதாகரமாகியுள்ளது. ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார். விரைவில்அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர் யார் …
-
- 4 replies
- 700 views
-
-
நாட்டிலுள்ள... 17 சதவீதமான சிறுவர்கள், போசாக்கின்மையால் பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதான ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் மக்கள் உணவை பெற்றுக்கொள்ள ஏற்பட்டுள்ள தடையே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு இலட்சம் சிறுவர்களும், ஏழு இலட்சம் பாடசாலை மாணவர்களும் போ…
-
- 0 replies
- 166 views
-
-
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப் புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி வந்தனர். இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக …
-
- 5 replies
- 3.2k views
-
-
பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார். யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குமான விண்ணப்பங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08…
-
- 0 replies
- 333 views
-
-
கோட்டா கோ கம நூலகத்திலருந்து... கிளிநொச்சி மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! காலி முகத்திடல், கோட்டா கோகம போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி முற்போக்கு சிந்தனை இளைஞர்களின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கோட்டா கோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்காக கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யாழிலிருந்து கிளிநொச்சிக்கு புகையிரதத்தில் விஜயம் ம…
-
- 0 replies
- 231 views
-
-
“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு ! இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும் இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில…
-
- 1 reply
- 628 views
-
-
இன்று, அதிகாலை முதல்... எரிபொருள் விலை அதிகரிப்பு ! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 470 ரூபாயாக உயர்ந்துள்ளது. அத்துடன், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றர் ஒன்றின் புதிய விலை 550 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஓட்டோ டீசல் 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 460 ரூபாவாகும், சூப்பர் டீசல் 75 ரூபாயினால் உயர்ந்து 520 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள விலை அ…
-
- 11 replies
- 474 views
-
-
‘சைக்களில் தனித்து போட்டி’ உள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சைக்களில்-தனித்து-போட்டி/71-208489
-
- 1 reply
- 494 views
-
-
ஆக 20, 2010 / பகுதி: செய்தி / இந்து ஆலயங்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டள்ளது கிழக்கு மாகணங்களில் உள்ள இந்து ஆலயங்களை திட்டமிட்ட வகையில் அழித்துவரும் சிறீலங்கா அரசு அந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கங்குவேலி சிவன்கோவில் அழிக்கப்பட்டுள்ளது. அதனைபோலவே வெருகல் பால முருகன் கோவில், வெருகல் கல்லடி கிராமம் நீலியம்மன் ஆலயம் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. சிறீலங்கா அரசின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மற்றும் பொது அம…
-
- 3 replies
- 571 views
-
-
அமைதியான போராட்டக் காரர்களுக்கு.... இராணுவம், பொலிஸார் இடமளிக்க வேண்டும் அமெரிக்கா கோரிக்கை. அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். வன்முறை ஒரு தீர்வாகாது எனவும், போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் எனவும் அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பை வழங்கவேண்டும் என நினைவூட்டுகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குழப்பமும், பலப்பிரயோகமும்…
-
- 0 replies
- 114 views
-
-
சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் நடத்துக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்: "ரொய்ட்டர்ஸ்" புகழாரம்! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகத்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ராஜூ கோபாலகிருஸ்ணன் எழுதியுள்ள கட்டுரை: இலங்கையில் கிளிநொச்சி மிகச் சிறிய பகுதி. கிளிநொச்சி வீதியில் கடைகள், சிறு வீடுகள், அரச கட்டடங்கள் வரிசையாக பிரதான வீதியில் உள்ளன. ஆனால் பேரூந்துகளும் வாகனங்களும் நிதானமாக மெதுவாக கிளிநொச்சிக்குள் பயணிக்கின்றன. வாகன ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. எதுவித விவாதமும் லஞ்சமும் அங்கு இல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? - வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள் [ வலம்புரி ] - [ Aug 28, 2010 04:00 GMT ] யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெறு வதாகவும் தெரியவருகின்றது.விமான ரிக்கெட் பெறப்பட்டு விட்டது. பயண ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அறிகிறோம். நாம் அங்கு வரலாமா? என்ற கேள்விக் கணைகளையே வெளிநாட்டிலிருந்து க…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு-3, பம்பலப்பிட்டி ஆண்கள் இந்துக்கல்லூரி மறுஅறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியரான குளியாப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் மன்னாரை பிறப்பிடமாகவும் கொண்ட பிரான்ஸ் கமிலாஸ் (வயது 37) என்பவரின் சடலம், வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்டதையடுத்தே பாடசாலை மூடப்பட்டதுடன் இன்று பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/111242-2014-05-21-03-49-58.html
-
- 3 replies
- 1.2k views
-
-
ரணில், என்ற தனி மனிதரின் பதவிப் பேராசைக்காக... நாட்டையும், மக்களையும்... பலிகொடுக்க வேண்டாம் – அநுர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்ப…
-
- 0 replies
- 293 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கமைவாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை சேகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டுக்கான…
-
- 0 replies
- 487 views
-
-
ஆட்சி தொடருமா? : 31ஆம் திகதி இறுதி முடிவு ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இது தொடர்பாக இரண்டு கட்சிகளும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் கூட்டு அரசாங்கத்தை முறித்துக்கொள்ளும் நிலைமை உருவாகுமாக இருந்தால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடமளிக்காது தங்களின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்க…
-
- 0 replies
- 545 views
-
-
எதிர்வரும் 10ஆம் நாள் விசாரணைகுழுவினை அறிவிக்கும் நவீம்பிள்ளை! ஜூன் 1, 2014 மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், மனித உரிமைகள் பேரவையின் 26 வது கூட்டத்தொடரில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் எதிர்வரும் வரும் 10ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையானர் உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் இலங்கை விவகாரம் குறித்து கருத்து வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விசாரணைக்குழுவின் நியமனம் குறித்த அறிவிப்பையும் இதன்போது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணை…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் (யாழ். அலுவலக நிருபர்) இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு. தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு. இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற த?94;ப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 20, செப்டம்பர் 2010 (10:14 IST) தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழக மீனவர்களையும் தாக்கியுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தன. இந்த படகுகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் கரை திரும்பிக்கொண்டிருந்தன. அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த படகில் அதன் உரிமையாளர் காலின், மீனவர்கள் சந்தியா, ஹச்சூரியன், பார்த்திபன் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடித்து விட்டு இந்திய கடல் பகுதிக்குள் வந்த போது திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் வந்து துப்பாக்கியை காண்பித்து படகை நிறுத்துமாறு கூறினர். ஆனால் மீனவர்களோ தா…
-
- 1 reply
- 689 views
-
-
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை... அடக்குவதை விடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை... நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்! போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற…
-
- 0 replies
- 203 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 27, 2010 gotta in court விடுதலைப் புலி உறுப்பினர்கள் வௌ்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையில் சாட்யமளிக்க பாதுகாப்பு விவகார செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ் மேல் நீதிமன்றிற்கு சமூகம் கொடுத்தார். இந்த விசாரணைகளின் போது பொன்சேகா சமூகமளிக்கவில்லை. அவரது உடல் நிலை காரணமாகவே சமூகமளிக்கவில்லையென் கூரப்படுகின்றது. இதனால் வழக்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏராளமான சோடிப்புக்களையும் சாட்சி ஒழிப்புக்களையும் செய்த கோத்தா சிலரை வெளி நாட்டிற்கும் அனுப்பிய நிலையிலேயே துணிச்சலாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதித்தார் என்பது…
-
- 0 replies
- 965 views
-
-
கொக்கு ஒன்றை அடித்து கொலைசெய்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா நேற்று உத்தரவிட்டார். இறக்காமப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த 8 ஆம் திகதி இலுக்குச்சேனை குளத்தில் கொக்கு ஒன்றை இறைச்சிக்காக அடித்து கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் மேற்படி நபர் நேற்று அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணமாக 20 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=711323112212866596#sthash.NoeAU1ng.dpuf
-
- 9 replies
- 771 views
-