ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
பிரதமர் மகிந்தவிடம்.. கேள்வி கேட்க, சந்தர்ப்பம்! ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது. இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தினை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1249048
-
- 3 replies
- 342 views
-
-
முன்னாள் எம்.பி. நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு Digital News Team 2021-07-28T08:20:47 (சி.எல்.சிசில்) படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவுச் சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்…
-
- 3 replies
- 393 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு... தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1249093
-
- 4 replies
- 691 views
-
-
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாக அர்த்தப்படாது: விக்னேஸ்வரன் விளக்கம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவை கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாகவோ அர்த்தப்படாது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவிடம் கோரிக்கை விடுவது தொடர்பில் அண்மையில் தமிழ் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டம் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து ஊடக…
-
- 1 reply
- 357 views
-
-
காரைநகர் பிரதேச சபை சுயேட்சை குழு வசமானது! November 10, 2021 காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில, இன்றைய தினம் நடைபெற்றது. குறித்து அமர்வின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் போட்டியிட இருந்த போதிலும், அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில், சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை என்பவர், தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு, ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் வெற்றியீட்டியுள்ளார். இந்த தவிசாளர் தெரிவு விசேட அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சா…
-
- 1 reply
- 358 views
-
-
மக்கள்... ராஜபக்ஷேக்களையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தையும்.. பிடித்து வெளியில் வீசுவார்கள் – சாணக்கியன்! மக்கள் ராஜபக்ஷேக்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் தற்போது இரண்டு பில்லியன் டொலரே கையிருப்பிலுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு டொலரினால் வரும் அனைத்து கட்டணங்களையும் 18…
-
- 1 reply
- 332 views
-
-
நந்திக்கடலில் இயற்கையாக ஏற்பட்ட மாற்றம் சீரற்ற காலநிலையை அடுத்து, நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடல் இயற்கையாகவே உடைப்பெடுத்து நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது. நேற்றைய தினம், நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் நேற்று இரவு நந்திக்கடல் இயற்கையாகவே, உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது. நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடல…
-
- 0 replies
- 355 views
-
-
நாடாளுமன்றத்தில், கெட்ட வார்த்தையை... பயன்படுத்திய லொஹான் ரத்வத்த… சமாதானம் செய்த மஹிந்தானந்த ! எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைதிப்படுத்தும் வகையில் செயற்ப்பட்டார். உர விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதன்போது அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் கோபத்தில் மீண்டும் மீண்டு…
-
- 0 replies
- 183 views
-
-
எரிபொருள் விலையை அதிகரிக்க கூடாது என்பதே தனது நிலைப்பாடு, நிதி அமைச்சே தீர்மானிக்கும் என்கிறார் கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிதத்தர். மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். …
-
- 0 replies
- 123 views
-
-
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இன்று யாழ். மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.இதனால் மாவட்டத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்நிலைகளுக்…
-
- 6 replies
- 366 views
-
-
இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி 8 நவம்பர் 2021 பட மூலாதாரம்,KRISHANTHAN இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4…
-
- 5 replies
- 452 views
- 1 follower
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) சீன உர கப்பல் தொடர்பில் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை. சீன உர நெருக்கடியால்தான் இந்தியாவுடன் கலந்துரையாடி நைட்ரிஜன் உரம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் இரசாயன உர முதலீட்டாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்களே எமது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9 ) நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விவசாயிகளின் உரப்பிச்சினை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுக்கு அடுத்தபடியான பா…
-
- 1 reply
- 237 views
-
-
அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! சமல் ராஜபக்சவின் ஆலோசனை இது! நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு போன்றவற்றை உண்டனர் என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில், பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார். எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசி…
-
- 36 replies
- 2.7k views
- 1 follower
-
-
நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார். அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்…
-
- 17 replies
- 802 views
-
-
வெளியேறியதன் பின்னர் அரசாங்கத்தினை விமர்சியுங்கள் : இல்லையேல் சலுகைகளுக்காக எதிர்ப்பதாய் நினைப்போம் – சாணக்கியன்! அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், “அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடிய…
-
- 0 replies
- 266 views
-
-
(ஆர்.ராம்) மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் தொடரும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அடுத்து வரும் காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…
-
- 2 replies
- 568 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக கனத்த மழை – குளங்களின் நீர் மட்டம் உயர்வு! கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழைகாரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னுரிக்குளம் இன்று (செவ்வாய்க்கிழமை) வான்பாய ஆரம்பித்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த நிலையில் குளங்களிற்கு நீர்வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட…
-
- 1 reply
- 128 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்! யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்ததன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீ…
-
- 0 replies
- 261 views
-
-
தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்…
-
- 0 replies
- 311 views
-
-
வெள்ளத்தில்... மூழ்கியது, நல்லூர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1248863
-
- 0 replies
- 317 views
-
-
சீன சேதனப் பசளை விவகாரம் : விவசாய அமைச்சரை சந்திக்க கொழும்பிற்கு வந்த சீன நிறுவனம்! சீன சேதனப் பசளை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு சீன தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சீன சேதனப் பசளை நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று திங்கட்கிழமை விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதை மேற்கோள் காட்டி அமைச்சர் மேலதிகமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சீனத் தூதுவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர்…
-
- 0 replies
- 277 views
-
-
முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் – ஜி.எல் பீரிஸ் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். கூட்டணி அரசாங்கத்திற்குள் பிரிவுகள் எழுந்துள்ள நிலையில் புத்தமத போதனைக்கு அமைய பங்காளி கட்சியினர் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 2019 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது சர்வதேச மட்டத்தில் பெரும் சவாலையையும் தற்போதுவரை கொரோனாவையும் எதிர்கொள்வதை பங்காளிக் கட்சியினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆகவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடனும் பொறுமையுடனும் செயற்படுவது அவசியம் என்…
-
- 0 replies
- 172 views
-
-
மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு, இன்றும் இடியுடன் கூடிய மழை ! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் நாட்டில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 700 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெர…
-
- 0 replies
- 180 views
-
-
மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல்! சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவ்வாறு கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதி…
-
- 0 replies
- 142 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் முன்நின்று செயற்பட வேண்டும். அவர்கள் தங்களையும் , தங்களது குடும்பங்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொள்வதற்காக மாத்திரம் செயற்படலாகது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ளவர்கள், உண்மையை மூடி மறைப்பவர்கள் ஆகியோரை தேடிப்பார்க்குமாறு நாம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அராசங்கத்திடம் கேட்டு நிற்கிறோம். இந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது என அவர் மேல…
-
- 1 reply
- 422 views
-