Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான படுகொலைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவே காரணம் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (4) கம்பல் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசும் போதே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளுக்கு கோத்தபயாவே பொறுப்பானவர் ஆனால் அவர் தற்போது என்னை குற்றம் சுமத்துகின்றார். படுகொலைகளை மேற்கொள்வதற்கென கோத்தபயா ஒரு குழுவை வைத்துள்ளார். அவர்கள் தான் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பெருமளவான படுகொலைகளை மேற்கொண்டவர்கள். நான் எனது சீருடையை துறந்த பின்னர் முதலில் களணியில் உ…

  2. மாகாணங்களின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதன…

  3. இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.என சம்பந்தன் ஐயா நேற்று யாழில் கூறியுள்ளார். இந்தியா தான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன். ஆனால் என்ன திர்ர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தி…

  4. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக…

  5. பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை 2010-01-17 07:15:10 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. x புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. இந்திய மத்திய உள்துற…

  6. நாட்டின் அரசியல் அமைப்பில் உள்ள தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு உரிமையில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என்றால் தமக்கு தேசிய கீதம் தேவையில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எனவே நாட்டின் தேசிய கீதத்தை பாட முடியாது என சவால் விடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று அதன் முன் சத்தியப் பிரம…

  7. கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் மீண்டும் பதற்றம் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று மாலை வரை வெளியேறாமல் பல்கலைகழக நிர்வாக கட்டிடத்தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைகழக வளாகத்தில் தரித்து நிற்கும் மாணவர்ககளில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியை பல்கலைகழக வளாகத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே மாணவர்களுக்கு…

  8. இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன? இம்ரான் எம்.பி கேள்வி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்…

    • 0 replies
    • 200 views
  9. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது.பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு முற்போக்கான தேசியவாத நிலைப்பாடோ அல்லது வர்க்கம் கடந்த தூய்மையான தேசியமோ அல்லது இரண்டிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடோ எதுவித பங்கினையும் வகிக்கவில்லை. தமிழர் தரப்பினைப் பொறுத்தவரை, முக்கிய தமிழர் அரசியல் பங்காளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை தக்க வைக்கும் நகர்வுகளையே காணக் கூடியதாக இருக்கிறது. ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட்டமைப்பு இயங்க முடியாத நிலை நிலவியது. அதன் மூன்று நாடாளுமன்ற அங்கத்தவர்கள், ஆயுதக் கு…

  10. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர…

  11. மகிந்தவுக்கு எதிரான அரசியல் சதி! பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் 12 பேரை பதவிநீக்கி விசாரிக்க நடவடிக்கை!! .மகிந்த அரசுக்கு எதிராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து அரசியல் சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 12 உயர் அதிகாரிகளை உடனடியாக பதவிவிலகும்படி சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. பதவி விலகிய பின்னர் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளவர்களில் மூன்று மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள் மற்றும் கேணல், கப்டன் தர அதிகாரிகளும் அடங்குவர் என்று உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

  12. திருகோணமலையில் வைத்து இலங்கை பாதுகாப்பு காடையர்களால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகின்றன. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நினைவஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த படுகொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும், பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/28863/85/5/d,article_full.aspx

  13. கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா? முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்திருந்தது. தேர்தல் மேடைகளிலும் வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் தீர்வு, காணாமல் ஆக்கப்ப…

    • 0 replies
    • 331 views
  14. கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் கச்சத்தீவு பெருவிழா நடைபெறவுள்ளது. அதற்கு இலங்கை பக்தர்களை மட்டும் இம்முறை அனுமதிப்பது தொடர்பில், யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இம்முறையும் இருநாட்டு பக்தர்களையும் அனுமதிப்பது இல்லை என அரசு முடிவெடுத்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அத்துடன் இம்முறையும் மதகுருமார் மாத்திரம் சென்று பூஜை விடையங்களை முன்னெட…

  15. சிறிலங்காப் பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரத்திற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார் புதிய தேர்தல் தொடர்பான விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. http://www.eelamweb.com/

    • 8 replies
    • 1.1k views
  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை நினைக்கப் போவதும் இல்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமாக இருந்த உறவினையும், தற்போது இருந்துவரும் உறவினையும் அறியாமல் அதனை கொச்சப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளக் கூடாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார். 'கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால' வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைய…

  17. 200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உறவினா்களின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. 200 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் எந்தவித உறுதிப்பாடுகளும் இல்லாது 200 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். http://www.virakesari.lk/article/24112

  18. (எம்.எப்.எம்.பஸீர்) சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவ…

  19. ஜெனரல் சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக தியில் போராட்டங்களை ன்னெடுத்து மக்கள்அலமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. சூளுரைத்தது. ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோ கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர். மக்கள் விடுதலை முன்னணி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது. அவ்விடத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கா…

    • 9 replies
    • 1.5k views
  20. ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை... பாரதூரமானது, என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தளத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் தொடர்பான கொள்கைகளை மீறுகிறது என்றும் பேர…

  21. 3ம்இணைப்பு ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மைகளாக செயற்படுகிறது ‐ ஸ்ரீகாந்தா ‐ சிவாஜிலிங்கத்தின் குரல் இணைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொடுரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே பொறுப்பென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள எம்.பி. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியொன்றை உருவாக்கிய நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்த் தேசியக் …

  22. 20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. [Wednesday, 2014-01-15 09:22:17] News Service உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்…

  23. ஜனாதிபதியுடனான... கூட்டமைப்பின், கலந்துரையாடல் இரத்து ? உறுதிப் படுத்துவதில் சிக்கல் ! ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் ஒருசில காரணங்களினால் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவு தொடர்புகளை மேற்கொண்டது. இருப்பினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் தொலைபேச…

  24. புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு புலம்பெயர் தமிழர்கள் பரந்து வாழும் தேசம் எங்கும் ஒரு நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை எடுத்து ரைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக் களிப்பே அந்த நடவடிக்கையாகும். இந்த வரிசையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் னர் டென்மார்க்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்களிப்பில் பங்குகொண்ட இலங்கையரில் 98 வீதத் துக்கும் அதிகமானோர், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அங்கீகரித்துத் தமது முடிவை ஒப்புவித்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகு தியில் உள்ள பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடு தலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாந…

    • 3 replies
    • 1.1k views
  25. ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1272909

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.