ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
தமிழ் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்த பிரச்சினையும் இல்லை - நீதி அமைச்சர் Published by T. Saranya on 2021-09-27 (எம்.ஆர்.எம்.வசீம்) அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருந்தால் தமிழ் கைதிகளை வேறு இடங்களுக்காே அல்லது அதி பாதுகாப்பு பிரதேசங்களுக்கோ மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக அவர்களின் உறவுகள் வந்து பார்ப்பதற்கு வசதிக்காகவே யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறைச்சாலைக்களுக்கு மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் …
-
- 1 reply
- 331 views
-
-
திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா என தவிசாளர் நிரோஷ் கேள்வி தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேச…
-
- 2 replies
- 269 views
-
-
தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க சுட்டிக்காட்டினார். விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியை…
-
- 0 replies
- 254 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. எரிபொருள் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது. எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கோரப்பட்டுள்ளது. அத்துடன் கட்டார் உள்ளி…
-
- 0 replies
- 371 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது. அதற்கான தேவையும் எமக்கு கிடையாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன், அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒரு நாட்டின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தலையிட முடியாது என்பதை சர்வதேச நாடுகளும், சர்வதே அமைப்புக்களும் இம்முறை ஏற்றுக…
-
- 0 replies
- 244 views
-
-
அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை அம்பாறை- உமரி கிராமம் பகுதியிலுள்ள கல்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு, காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கல் பாறைகளுடனான காட்டுபகுதி, அரச காணிகள் ஆகும். களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த காடுகளின் மரங்களை சிலர் வெட்டி, அதனை தீயிட்டு அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 480 views
-
-
எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார். சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் உரத்தின் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளதால் நெல் அறுவடை குறையும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை சந்தையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அத…
-
- 0 replies
- 240 views
-
-
அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் : தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். இதேவேளை பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது சிறைச்சாலை வசதிகள் தொடர்பாகவோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற …
-
- 2 replies
- 493 views
-
-
‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர். September 25, 202 தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு ( லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்…
-
- 2 replies
- 466 views
-
-
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.நாட்டிலே 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் 5, 131 பாடசாலைகள் உள்ளதாகவும், அவற்றில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அந்த வகையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளை திறக்க முடியும் என…
-
- 1 reply
- 260 views
-
-
தழிழர்களின் பிரச்சனைகளை, EUவிடம் தெளிவுபடுத்த ஒன்றிணையுமாறு கோரிக்கை! September 27, 2021 ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டுவர ஒன்றிணையுமாறு தமிழ் தரப்பினருக்கு தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் GSP+ வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு இன்று (27.09.21) இலங்கை செல்லவுள்ளமை உறுதியாகியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால், தமிழர் தரப்போடும் அவர்கள…
-
- 0 replies
- 259 views
-
-
ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி க…
-
- 59 replies
- 5k views
-
-
சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல். இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல். இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வத…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கையில் பரவிவரும், டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ பெயர்கள் இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தனது ருவிட்டர் கணக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார். இதன்படி, 701- S என்ற வைரஸ் திரிபின் உப பிறழ்வுக்கு AY28 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையில் பரவலடைந்து வரும் டெல்டா உப பிறழ்வின் விஞ்ஞான பெயராக B.1 617 2.28 என பெயரிடப்பட்டுள்ளது.. அத்துடன் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்ட 95 சதவீதமான நோயாளர்களுக்…
-
- 0 replies
- 744 views
-
-
இரண்டு தடுப்பூசிகளையும்... வழங்கிய நாடுகளின், பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்து…
-
- 1 reply
- 333 views
-
-
மன்னாரில்... பங்குதந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்! மன்னார்-மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில், வயல் காணியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்றபோதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம், விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இதன் விளைவாக தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விடயத்துக்காக போராடி வருகின்றனர். மேலும், மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பெயரில் விவசாயிகள் குறித்த வயல் …
-
- 2 replies
- 480 views
-
-
ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தயார் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அமைச்சரை கேளுங்கள்' எனும் வளம் சார்ந்த அபிவிருத்திக் கலந்துரையாடலில் நேற்று பங்குபற்றி கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு உள்ளகக்…
-
- 1 reply
- 286 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச(Basil Rajapaksha) உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பபடும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன் ப…
-
- 0 replies
- 265 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று (25) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர். இன்று காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சாணக்கியன் உட்பட முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த…
-
- 1 reply
- 340 views
-
-
மாங்குளத்தில் கஞ்சாவுடன் கைதான காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 24 அன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக மாங்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட காவல்துறையினர் 6 கிலோ கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள். இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தளத்தினை சேர்ந்த 34 அகவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நொச்சிகம பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியி…
-
- 3 replies
- 369 views
-
-
அமெரிக்க நிறுவனதுடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது. அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந…
-
- 1 reply
- 356 views
-
-
பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்! தியாக தீபம் திலீபனுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூவி சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் சூழ்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.meenagam.com/பொலிஸாரின்-கெடுபிடிக…
-
- 0 replies
- 295 views
-
-
ஞானசார தேரருக்கு, எதிராக... நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ், சட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல…
-
- 0 replies
- 317 views
-
-
காணாமல் போனவர்கள்... படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம் காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த …
-
- 0 replies
- 398 views
-
-
கடற்படையினரின்... அராஜகமானது, அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ் மன்னார்- வங்காலைபாடு கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை …
-
- 0 replies
- 343 views
-