Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) குடிபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். சிறைச்சாலை தலைமையக தகவல்கள் இதனை கேசரியிடம் வெளிப்படுத்தின. கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது கூட்டாலிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர். சிறைச்சாலையை காண்பிக்கவே நண்பர்களுடன் இராஜாங்க அமைச்சர் அங்கு வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந…

  2. நாட்டுக்கு அவசியமான புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது – கல்வி அமைச்சர் நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் பணியிடத் தெரிவு தொடர்பான வேலைத்திட்…

  3. கொக்குத் தொடுவாய், பூமடுகண்டல் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டது! September 13, 2021 முல்லைத்தீவு – கரைதுறைபபற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாண்மை இனத்தவர்களின் குறித்த அபகரிப்பு முயற்சியை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று (12.09.21) தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்தோடு குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் பிறிதொருநாளில் கலந்துரையாடல் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்ட…

  4. இலங்கையின் பதில் குறித்து அம்பிகா சற்குணநாதன் கடும் விசனம் September 13, 2021 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரிற்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள பதிலளிப்பு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் முற்றிலும் முரணானதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மூலமான அறிக்கையை இன்று ஆரம்பமாகும் ஐ.ந.கூட்டத்தொடரில் வெளியிடவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த 27ஆம் திகதி அ…

  5. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரை 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் குறித்த பாடசாலைகளை ஒரு முறையான திட்டத்தின் கீழ் திறக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சருக்கு வழங்கிய பரிந்துரையில் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 12-18 வயதுடைய மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந…

  6. ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்கவேண்டும் ; தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்தசில நாட்களிற்கு மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 2000 ரூபா…

  7. மனிதவள அபிவிருத்தியில்... சீரான அணுகுமுறையை இலங்கை பின்பற்றும்- மஹிந்த மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதலாவது அமர்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் நாம் முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றோம். மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது. வேகமாக வளர்ச்சியடையும் மக்கள் தொக…

  8. பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க, இலாகாவை மாற்றுவது தீர்வாகாது – மைத்திரிபால ஒருவரை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் நியமிக்கப்படுவதன் காரணமாக அந்த நியமனம் குறித்து மாற்று கருத்துகளை குற…

  9. தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே சிதைத்து விட்டனர் - வி.எஸ்.சிவகரன் தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு சிதைத்து சின்னாபின்னமாகி விட்டனர்.ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மாற்றம் வேண்டும் இல்லையேல் தமிழ்மக்கள் வேறு வழி நாடவேண்டும் எனதமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதும் தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். தமிழ் மக்கள் தேர்தல் திருவிழா வணிகத்தை மூலத…

  10. கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற போது மங்கல நிகழ்வாக இருந்த போதும் தற்போது அமங்கல நிலை காணப்படுவதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சௌபாக்கிய நோக்கு என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் செயல்பட்டாலும் வாக்களித்த மக்கள் திருப்தி அடையவில்லை. சிலர் வந்து எங்களிடம் கேட்கின்றனர், தேரர் அவர்களே! இது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா என்று. அன்று கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற போது மங்கல நிகழ்வாக இருந்தப…

  11. இலங்கைக்கான... ஆப்கான் தூதுவர், தலிபான்களை அங்கீகரிக்க மறுப்பு தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். இந்த வாரம் இடைக்கால அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிப்பதாக தலிபான் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதுவர்கள் யாரும், தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை வரவேற்கவில்லை என்றும் தூதுவர் ஹைதாரி இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.…

  12. முகநூல் பதிவு: தடுப்பு காவலிலுள்ள இளைஞர்களின் பெற்றோர்கள்... ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை! திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது அதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் 27.11.2020 திகதியன்று, எனத…

  13. நாட்டில்... சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடிவை,சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ht…

  14. உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின் விடுதலைக்காக இடம் பெறும் போராட்டம் தாராளம். தமிழ் இளைஞர்கள் மாத்திரமின்றி எல்லோராலும் அறியப்பட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகளும் அண்மைகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றையும் கடந்து மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பொற்கேணி பகுதியில் 'நவரசம்' எனும் கவிதை நூல் மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தது எனும் சந்தேகத்தின் பெயரில் கடந்த 2020 மே மாதம் 16 கைது செய்யப்பட்டு ஒன…

    • 7 replies
    • 756 views
  15. ‘இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது’ – ஐநாவுக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம் – September 11, 2021 முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் இன்று (10 செப்டெம்பர் 2021) ஐநா மனித உரிமை ஆணையருக்கு அனுப்பியுள்ள அவசர மேலதிக கடிதம் ஒன்றில், ‘இலங்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதையையும் பாலியல் வல்லுறவையும் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஐநா சித்திரவதைக்குள்ளானவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதுடன், அவர்களை கெளரவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடி…

  16. கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது. இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு …

  17. எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா! வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற காரணத்தினால் எம்.கே.சிவாஜிலிங்கம், அம்புலன்ஸில் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ht…

  18. ஐ. நா மனித உரிமைகள் ஆணைகுழு விவகாரம் மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடயங்கள் குறித்து எம். ஏ சுமந்திரன் கலந்துரையாடியிருந்தார்.

  19. மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷ்மன், செப்டெம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார். தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தனது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்பட்டார். பேராசிரியர் லக்ஷ்மன் நன்கறியப்பட்ட பொருளியலாளர் ஆவார். இவர் 1994 இலிருந்து 1999 வரையான காலப்பகுதி…

  20. சாணக்கியனின் பாராளுமன்ற உரையால் ஆளுநரின் அதிரடி உத்தரவு சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (09) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டார். கிழக்கு மாகாணத்தின் இது தொடர்பில் . டிஐஜி விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்ட அறிக்கையை மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசாங்கம், அரசாங்க அமைச்சர்கள், ஆளும் தரப்பு கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தனக்கான தனிப்…

    • 4 replies
    • 652 views
  21. கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா - மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 73 வயதான செபமாலை இராசதுரை என்ற தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் மகன் இராசதுரை விஜி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்து சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே மரணமடைந்தார். வவுனியாவில் 1668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் "காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ந…

  22. இலங்கையின், மோசமான மனித உரிமைகள் நிலைமையை... கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும், மக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது குறித்து தங்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் க…

  23. (ஆர்.யசி) தமிழருக்கான நியாயம், நீதி கேட்டு சர்வதேசத்திடம் செல்பவர்கள் ஒருபோதும் பக்கச்சார்பாக செயற்பட முடியாது. நாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம். ஆனால் பக்கசார்பாக செயற்பட முடியாது. இதுவே எமக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருக்கும் வேறுபாடு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தொடர்பான பிரேரணையை அவசரப்பட்டு பாதுகாப்பு சபைக்கு கொண்டுபோய் பிரேரணையை தோற்கடிப்பது எமது நோக்கமல்ல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இதனை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்ற நிலையில் தான் எம்மால் பிரேரணையை பாதுகாப்பு சபைக்கு நகர்த்த முடியும் எனவும் …

    • 3 replies
    • 652 views
  24. பேராயருக்கு பின்னால் அரசியல் உள் நோக்கம்! சிங்கள ராவயவின் கண்டுபிடிப்பு! ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரலை உடன் மீளப் பெறவும். ஜனாதிபதி பேராயரை சந்திப்புக்கு அழைத்துள்ளார். எனினும் அவரது அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பது தெளிவாகின்றது. இவ்வாறு நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கும், மாநாடுகளில் உரையாற்றுவதற்கும் பேராயரின் அனுமதி தேவையா? 21/4 தாக்குதல் …

  25. யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனோ நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனோ தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.