Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாநகர சபையை குழப்புவதும் அதன் மூலம் அபிவிருத்திகளை தடுப்பதுமாக ஆணையாளர் செயற்படுகிறார் By Battinews தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மட்டக்களப்பு மாநகர சபையினை குழப்புவதும் அதன் மூலமாக அபிவிருத்திகளை தடுப்பதற்குமான நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தெரிவித்தார். நேற்று (10) மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகர சபையில் 150 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். இவர்களது நியமனங்களை புதுப்பிக்கும் போது எந்த நியமனமும் எதிர்வரும் காலங்களில் …

  2. அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு; தேர்தல் முறையும் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி October 11, 2021 “நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமை ஒன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். 72ஆவது இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்தார். அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: “இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக, அரசியல்வாதி அல்லாத ஒருவர், நாட்ட…

  3. மட்டக்களப்பு: கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை -கே.கருணாகரன் தகவல் October 10, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். சர்வதேச உளநல தினம் இன்றாகும்.சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் https://www.ilakku.org/in-202…

  4. நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவர் நடேசனின் வெளிப்படுத்தப்படாத செல்வம் பெண்டோரா பத்திரிகையில் இருந்ததால் இலங்கையில் உள்ள மக்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இந்த வெளிப்பாடுகளில் எமது நாட்டைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் நடேசனின் பெயர்கள் மட்டும் தானா இருந்தது வேறு பெயர்கள் இல்லையா அல்லது பெண்டோரா பத்திரைகைக்கும் புலப்படாத விதத்தில் ஏனையோர் கலவாடிய செல்வங்களை அவர்கள் மறைத்து வைத்துள்ளனரா என்பதுதான் எனக்கு இதில் உள்ள ஆச்சரியமான கேள்வி? இலங்கையைச் சேர்ந்த 93 பேர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் இந்த பெண்டொரா பத்திரிகையில் உள்ளனர் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது. நிரூபமா ராஜபக்ஷவும், நடேசனும் வெளிப்படு…

    • 0 replies
    • 282 views
  5. நீதிமன்றினால்... நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அம்பாறை- அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து நேற்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, உறவுகளுடன் இணைந்துள்ளதாக குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்…

  6. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு... தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை அன்றி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்க சர்வதேச வர்த்தகங்களை மேற்கொண்டதன் விளைவாகவே, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நினைவு நாளை முன்னிட்டு, இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. …

  7. மக்கள் எதிர்பார்த்ததைப் போன்று... அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று தாமும் தமது அரசாங்கமும் செயற்படவில்லை என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் வாக்குறுதி அளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கையூட்டல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார். …

  8. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து, பிரித்தானியாவுடன் பேச்சு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது குறித்து பிரித்தானியாவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, சட்ட அமுலாக்க நிறுவ…

  9. 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை... அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி தனக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அனுபவம் இருப்பதை ஒப்புக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 20 வது திருத்ததின் ஊடாக அமைச்சரவை ஆட்சி முறை இரத்து செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். எனவே, பிரதமர் முன்வந்து அனுபவம் உள்ள மற்ற அனைத்து அமைச்சர்க…

  10. 3 ஆயிரத்தை அண்மிக்கும்... சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்! சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ஆயிரத்து 101 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாயினாலும் அதிகரிக்…

  11. வடமாகாணத்தின்... புதிய ஆளுநராக, ஜீவன் தியாகராஜா நியமனம்? வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய அவர் தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243607

    • 4 replies
    • 986 views
  12. இராணுவ வீரர்கள் 10 ஆயிரத்து 369 பேருக்கு தரமுயர்வு இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10 ஆயிரத்து 369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1243922

  13. வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும்-பா.அரியநேத்திரன் October 9, 2021 வடக்கு கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு ப…

    • 3 replies
    • 390 views
  14. மோடி திறக்கவிருக்கும் உத்தரப்பிரதேச விமான நிலையத்திற்கு இலங்கையிலிருந்து முதல் விமானம் : ஜனாதிபதி உள்ளிட்ட பௌத்த தேரர்கள் பங்கேற்பு ஆர்.ராம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து குறித்த விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக இந்தியா ருடே மற்றும் த டைம்ஸ் ஒப் இண்டியா ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்…

  15. அராலி பகுதியில்... சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய, இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கார் ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், தாம் இயக்கச்சி இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும் தற்போது விடுமுறை…

  16. புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தல் இல்லை நாடாளுமன்றில் புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனினும், இந்த சட்ட நிலைமை ஒரு தடையாக இருப்பதை தினேஷ் குணவர்தன, குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2021/1243872

  17. மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த யோசனையை முன்வைத்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண கோரியுள்ளார். இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடி…

  18. ரிஷாத்தின் பிணை கோரிக்கை : 14 ஆம் திகதியன்று வாதங்கள், சட்ட மா அதிபரும் இணக்கம் எம்.எப்.எம்.பஸீர் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் ரிஷாத் தரப்பின் சட்டத்தரணிகளின் இணக்கத்துடன் இந்த திகதி குறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய…

  19. சரத் பொன்சேகா... நரி, போல செயற்படுகின்றார்- சீ.பீ.ரத்னாயக்க முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்டார். இவர்களின் ஆதரவு இருந்தமையினால்தான், அன்று சிங்கம்போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்தார். ஆனால், நாடாளுமன்றம் வந்தபின்னர் நரிபோல் செயற்படுகின்றார். பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்த…

  20. நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து, மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன் நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறித்த தெரிவுக்குழுவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இவ்…

  21. இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஜெனீவாவில் கனேடிய ஆதரவு : கவலை தெரிவித்தார் பீரிஸ் (எம்.மனோசித்ரா) ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் கனேடிய ஆதரவு குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் கவலை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஜெனீவா மற்றும் நியூயோர்க்கிலான இலங்கையின் அண்மைய பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்தும் உயர்ஸ்தானிகருக…

    • 1 reply
    • 376 views
  22. Ebay எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம், உலக அளவிலான ஆயுதக் குழுக்களில் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் கடைபிடித்த ஒன்று என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அமெரிக்கா மீதான இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அடியோடு மாறிப் போயின. தேசிய இனத்துக்கான விடுதலைப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதனா…

  23. மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபை தேர்தல்; பஸில் ராஜபக்‌ஷ அறிவிப்பு October 9, 2021 நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் நேற்று அறிவித்தார். இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுகளின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் முறைமைகள்…

  24. காடுமண்டி தூர்ந்து கிடக்கும் புராதன ஆலயத்தை பார்க்க படையெடுக்கும் பக்தர்கள். பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புராதன ஆலயமே இவ்வாறு காடுமண்டி புதர்பிடித்து சிதைந்து அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட வயற் பிரதேசத்தில் இப்பழம் பெரும் ஆலயம் காணப்படுகிறது.அருகில் தற்போதைய ஆலயம் மரங்களால் நிறைந்த சோலையில் உள்ளது. பூரணை தினங்களில் அங்கு கூடும் பக்தர்களுக்கு அளவேயில்லை.அதனருகே புதிதாக கட்டப்பட்ட ஆலயம் விரைவில் குடுமுழுக்கு காணவிருக்கிறது. இந்நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கடந்தவாரம் அங்கு விஜயம் செய்து இப்புராதன ஆலயத்தைப் பார்…

  25. வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன. இரா.சாணக்கியன் வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும். உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.