Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீது உண்மையான கரிசனை பிரித்தானியாவுக்கு உள்ளது! – துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:12:54] இலங்கை தொடர்பாக, தாம் உண்மையான கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானிய துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரியளவிலான குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் சொற்ப அளவிலேயே இடம்பெற்றுள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. சிவில் யுத்தம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் பதிவாகவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேசய சுயாதீன விசாரணைகள…

  2. வடக்கு இளைஞர்களுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து முக்கிய அறிவித்தல்! யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக பயணித்த வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. அத்தோடு வீதிகள், சந்திகளில் ஒன்றுகூடி நின்ற இளைஞர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்…

  3. நாட்டில்... குறைந்த வருமானம் பெறும், குடும்பங்களுக்கு.. நிதியுதவி! உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரையான நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1287030

  4. ‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’ -எஸ். நிதர்ஷன் தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏ…

  5. அடுத்த வருடம்... கடும் மின் நெருக்கடியை, எதிர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை! அடுத்த வருடம் கடும் மின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15 – 20ஆம் திகதிக்குள் இலங்கையின் நிலக்கரி இருப்புக்கள் குறைவடையும் எனவும் எதிர்காலத்தில் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் இந்த நிலை ஏற்படுமென அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட …

  6. தன்மீது... முன் வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுக்கள்... பொய்யானவை – நாமல் எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். …

    • 6 replies
    • 387 views
  7. பொதுத் தேர்தல் முடிவடைந்த உடனேயே அடுத்தாக இடம்பெறப்போவது வடமாகாண சபைக்கான தேர்தல்தான் என அரசாங்கத் தரப்பினர் தெரிவித்திருந்த போதிலும், இப்போதுதான் அதற்கான தயாரிப்புக்களில் பிரதான கட்சிகள் இறங்கியிருக்கின்றன. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான தமது பிரதான வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அதேவேளையில், ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கவிருக்கின்றார். தனியாகக் களம் இறங்குவதிலுள்ள நெருக்கடிகளை உணர்ந்திரக்கும் டக்ளஸ், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு களம் இறங்குவதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றார்…

  8. மனைவி மீது தீவைத்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்…

  9. குடியிருப்பாளர்களை வெளியேற ஸ்ரீலங்கா அறிவிப்பு ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font வடதமிழீழமான யாழ்ப்பாணத்தில் முன்னர் புகையிரத பாதைகளாக இருந்த இடங்களில் குடியிருப்போர் உடனடியான அங்கிருந்து வெளியேறுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் புகையிரத பாதையை மீண்டும் செப்பனிடும் நோக்கில் இந்த அறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிபபிட்டார். இதன்காரணமாக, குடியேறியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்காவின் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பின்னர் இவர்கள் புகையிரத பாத…

  10. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த தடையுத்தரவினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி லண்டனில் 'இலங்கையை நிராகரிப்போம்' என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடை விதிக்குமாறும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கண்காட்சியொன்றையும் நடத்தி வருகின்றது. தமிழ் மக்கள் இனச்சுத்திகரி…

    • 2 replies
    • 544 views
  11. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை – OHCHR 21 மே 2014 சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மே;றகொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயலகள் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை நியமிக்க உள்ளார். இந்த விசாரணைகை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதும், உத்தியோகபூர்…

    • 1 reply
    • 481 views
  12. பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!

    • 12 replies
    • 562 views
  13. 04.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று

  14. நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த ஆனந்தராஜா என்ற கைதி பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு விடுதலைப்புலி சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். தந்தை இறந்து பல வருடங்களாகின்றது. தற்போது உறவினர்களும் எங்குள்ளனர் …

    • 0 replies
    • 764 views
  15. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும் இலங்கை இனப்பிரச்சினையினைத் தீர்க்கக்கோரியும் நடைபவனி ஒன்று இன்று (01) காலை யாழில் இடம்பெற்றது. இலங்கை இந்திய நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து நடத்திய இந்த நடைபவனியானது, நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பலாலி வீதியில் அமைந்துள்ள இந்து சமயப் பேரவையினைச் சென்றடைந்தது. http://tamil.dailymirror.lk/--main/112610-2014-06-01-05-50-09.html

    • 0 replies
    • 233 views
  16. சரி பார்க்கலாம். வைகோஇ இது எம்மைப்பொறுத்தவரை இலட்சியம்இ உறுதிஇ தெளிவுஇ கொள்கைஇ மனம்தளராமை இன்னும் பல. இவரைப்போலதான் நான் என்றும் சொல்லுமளவிற்கு பல இளைஞர்களை தன்வசம் ஆக்கியவர் மட்டுமல்லஇ அவர் வசம் சாய்ந்தவர்கள் ஏராளம். குரலில் உறுதிஇ தெளிவுஇ பிடிவாதத்தன்மை. இது அவருக்கு பிடித்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு அவரைப்பிடிக்க வைத்தன. தற்போதைய தமிழகத்தைப்பொறுத்தவரையில் கொள்ளைஇ உறுதிஇ தெளிவு என்பனவற்றில் இருவர் பெயர்கள் சாடைமாடையாக வெளித்தெரிந்தது. அதில் ஒருவர் வெளிப்படையாக சொல்லக்கூடிய வைகோ. மற்றொருவர் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே இலட்சியவாதிகளின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. என்னடா வை…

    • 0 replies
    • 1.1k views
  17. போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது புலிகள் அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கியே சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற…

  18. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழுவால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படும் என சிரேஸ்ட ராஜதந்திரியும், பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவர் பதவியை சர்வதேசத்தில் நன்மதிப்பை பெற்ற ஒருவருக்கு வழங்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானை அதற்காக தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கொபி அனான் அதனை நிராகரித்துள்ளார் எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இராஜதந்திர ரீதியில் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக அவரை தலைவர் பதவிக்கு தெரிவுசெய்ததாக கூறப்படுகிறது. இது அமெரி…

  19. நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை கையளிக்குமாறு மா.இளஞ்செழியன் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதி நீதிபதியுடன் கலந்துரையாடி இருந்தார். பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உள்ளது. அந்த காணியில் முன்னர…

  20. குட்டிமணி, தங்கதுரையின்... 39 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு! 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பி…

  21. லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் மு…

    • 0 replies
    • 1.3k views
  22. தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பிரேரணையினை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=564713164626462266#sthash.45GCgFM3.dpuf

    • 5 replies
    • 938 views
  23. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போது பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர் William Hague வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாளை William Hague ஐ சந்தித்து உரையாட உள்ளார். இந்நிலையிலேயே மன்னிப்புச் சபையின் பிரித்தானிய கிளையின் பணிப்பாளர் Kate Allen இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் இது குற்த்துத் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கையில் மோதலில் இடம்பெற்ற பயங்கரங்கள் குறித்து முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய நேரம்…

  24. சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! - ஐ.நா சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் [Thursday 2014-07-03 08:00] இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று கூ…

  25. முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்! வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும், சிகப்பு முட்டை 45 ரூபாயாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1295484

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.