Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம் பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. பொருத்தமான இடங்கள் த…

  2. வடக்கு, கிழக்கில்... பிரதேச செயலாளராக சிங்களவரை நியமிக்க அரசாங்கம் திட்டம் வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி நிர்வாக சேவையில் உள்ளவர்கள் வடக்கு கிழக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்ற விரும்பினால் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இன விகிதாசாரத்தை குறைக்கும் வகையிலும் சிங்கள குடியேற்றங்களை அதிகரிக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே தெற்கில் உள்ள சிங்கள அதிகாரிகளை தம…

  3. வெலிக்கடை சிறைப்படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்து ரெலோ வடக்குக் கிழக்கு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன் தொற்றுக் கால…

    • 1 reply
    • 483 views
  4. யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்கத் திட்டம்; நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் July 26, 2021 தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட அரச அதிபராக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்குத் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நியமனத்தை நிறுத்துமாறு கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:- …

    • 5 replies
    • 489 views
  5. அமெரிக்காவினால்... பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட, நாடுகளின் பட்டியலில்... இலங்கை!! அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து …

    • 2 replies
    • 308 views
  6. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் …

    • 8 replies
    • 380 views
  7. கிளிநொச்சி மாவட்டத்தில் இரு கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினைத் தடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் கிராமங்கள் உவர் ஆபத்தினால் முழுமையாக அழிவுகளை எதிர்கொள்கின்ற ஆபத்தில் உள்ளன. மண்டைக்கல்லாறு வழியாக உவர் நீர் உட்புகுந்ததன் காரணமாக வன்னேரிக்குளம் கிராமத்தின் குஞ்சுக்குளம் கிராமம் முழுமையாக உவரடைந்து 1,000 ஏக்கருக்கு மேலான வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி உள்ளன. குஞ்சுக்குளத்தின் அணைக்கட்டு காரணமாக வன்னேரிக்குளம் மகா வித்தியாலய சூழலுக்கு உவர்ப் பரம்பல் ஏற்படவில்லை. ஆனாலும் மண்டைக்கல்லாறு வழ…

  8. யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண குடாநாட்டில் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்பட்டுள்ள அனுமதியை மக்கள் பின்பற்றவில்லை. சுகாதார நடைமுறையினை பின்பற்றாது இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்ப…

    • 1 reply
    • 374 views
  9. (நா.தனுஜா) நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவைநோக்கித் தற்போதைய அரசாங்கம் நகர்த்திச்செல்கின்றது. இப்போது அமெரிக்கர்களே நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். எனவே பொதுமக்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை வீதிகளில் இறங்கிப்போராடச் செய்வதுடன் மறுபுறம் இனவாதத்தைத்தூண்டி கடந்த காலத்தில் ஏற்பட்டதைப்போன்ற கலவரத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதுபோல் தோன்றுகின்றது. அதன்மூலம் ஹெய்ட்டியைப் போன்று இங்கும் பிறநாட்டு அமைதிப்படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கான அடித்தளம் இடப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி காலிமுகத்திடலில் 20 ஏக்கர் நிலப்பரப்பு, பெல்வ…

  10. சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை வரலாற்றில் டொலரின் இருப்பு மிகக்குறைந்த மட்டத்தில் வீழ்ச்சியடைகிறது. இலங்கை கண்ணுக்கு தெரியாத படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இன்று (25) கொழும்பில் உண்மையான தேசபக்தர்கள் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் இருண்ட யுகமாகக் கருதப்படும் கறுப்பு ஜூலையின் 38 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இந்த ஊடக மாநாட்டை நடத்த முடிவு செய்தோம். கருப்பு ஜூலை ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் பேரழிவின் மற்றொரு மைல்கல்லாக விவரிக்கப்படலாம். 1948 இல் நாங்கள் சுதந்த…

  11. கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை ! ....................... பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக இன்று(26.07.2021) ஆரம்பிக்கப்பட்டன. இதற்…

    • 2 replies
    • 574 views
  12. கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலய திருவிழாவில் பங்கேற்ற 179 பேரிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், 49 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லையென கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கரவெட்டி தெற்கு க…

  13. எக்ஸ் பிரஸ் பேர்ள்... கப்பல் விபத்து: 307 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் சம்பந்தப்பட்ட கடல் பேரழிவைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 307 கடல் வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன. அதன்படி 258 ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கவுள்ளது. இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களின் நெக்ரோஸ்கோபிகளின் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துதில் உள்ளூர் அதிகாரிகள் தாமதங்களை ஏற்படுத்துகின்றனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. த…

  14. பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து CID விசாரணை! பொது இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார். இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு எதிராக நோய் பரவும் வகையில் செயற்படுபவர்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/202…

  15. சுமார் இரண்டரை மணி நேர கலந்துரையாடல்: தேர்தல் முறையில் திருத்தம் தொடர்பாகவும் பேச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் சுமார் இரண்டரை மணி நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது தேர்தல் முறையில் திருத்தம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை அரசியலமைப்பு திருத்தம் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசியதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1230817

  16. வீடுகளில்... பணிக்காக, அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் இணைந்து இந்த சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்…

  17. (நா.தனுஜா) நாடு தற்போது மிகவும் மோசமானதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சிபெறவேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான தேசப்பற்று என்றால் என்னவென்பதை சாதாரண பொதுமக்களுக்கு உணரவைக்கவேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனவே இனியும் தாமதிக்காமல் இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும். 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பு அதனை இலக்காகக்கொண்டு செயற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழ…

    • 2 replies
    • 347 views
  18. ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!! ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது என அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதேவேளை சுற்றுலாத்…

    • 89 replies
    • 4.6k views
  19. அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர் July 22, 2021 அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பி…

  20. வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறை July 22, 2021 தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்கு முறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால்…

  21. மலையகத்து அரசியல், சட்ட, சிவில், வர்த்தக செயற்பாட்டாளர்கள் கூட்டிணைந்து சவால்களை சந்திக்க வேண்டும் – மனோ கணேசன் மலையக தமிழ் சமூகம் இன்று சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், சமூகம் எழுச்சி பெறவும் மலையகத்தின் முக்கிய நான்கு சமூக கூறுகளான அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருவம் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். மலையக சட்டத்துறை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது, “முழு இந்திய வம்சாவளி மலையக…

  22. கிழக்குப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணமும் சாதனை! மருத்துவ பீடங்களுக்கிடையிலான முதலாவது “அகில இலங்கை நரம்பியல் வினாவிடைப் போட்டி”யில் கிழக்குப்மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்கள் மூன்றாம் மற்றும் முதலாம் இடங்களை சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளன.இம்மாதம் 20ஆம் திகதி இலங்கை நரம்பியல் சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் zoom வழிப்போட்டியாக இந்நிகழ்வு நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு இருந்தது. பின்னணியிலிருந்த யாழ்ப்பாண, கொழும்பு பல்கலைக்கழகங்கள் போட்டியின் இறுதிக் கட்டத்தில் மிகச்சிறப்பாக பதிலளித்து முன்னிலை வகித்தமை பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது . …

    • 5 replies
    • 524 views
  23. இனவாதத்தின் பெயரால் தமிழ் சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம். இனவாதத்தின் பெயரால் தமிழ் சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம் என அம்பாறை மாவட்டத்திலிருக்கும் ஏனைய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி நேற்று முக்கியஸ்தர்களுடன் காரைதீவு பிரதேசத்தில் நூலக வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது. கொரோணாவை காரணம் காட்டி செய்வதொன்று மற்றது காலாகாலமாக மாற்று சமூகத்தினர் செய்கின்ற அடாவடிகள் வீரியம் பெறுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் மாற்…

  24. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் தினம் அறிவிப்பு இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பரீட்சையை எதிர்வரும் ஜனாவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி பெப்ரவரி மாதத்தில் அந்தப் பரீட்சை நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை க.பொ.த…

  25. உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின், அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலைகளை மாவட்ட அளவில் மாற்றலாம் எனவும் அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் ஒரு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 158 எனவும் காலி மாவட்டத்தில் ஆயிரத்து 181 எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையான ஆயிரத்து 259 ரூபாய் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனவும் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.