ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142680 topics in this forum
-
’உணவு பஞ்சம் ஏற்படாது’ பா.நிரோஸ் அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார். வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதி…
-
- 6 replies
- 509 views
-
-
’உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சோர்வடைந்துள்ளனர்’ "உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள் வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் ராசதுரை திருவருள், மதியரசன் துலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கடந்த 25-09-2017 தொடக்கம் உண…
-
- 0 replies
- 237 views
-
-
தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132
-
- 3 replies
- 608 views
-
-
’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில்,…
-
- 0 replies
- 601 views
-
-
’உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு’ -எஸ்.நிதர்ஷன் 'சர்வதேச சட்டத்தின் பிரகாரம், எமது உரித்து, எமது உரிமை, சிவில் - அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தம் மற்றும் பொருளாதார சமூக கலாசார விடயங்கள் சம்மந்தமான சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அவ்விதமான உள்ளக சுயநிர்ணய உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இதைத் தான் சர்வதேசத்திடம் கேட்டு நிற்கிறோமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுழி…
-
- 0 replies
- 456 views
-
-
’ஊழலை மறைக்கவே சுமந்திரன் உழத் தொடங்கினார்’ -க. அகரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.…
-
- 1 reply
- 470 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை -எஸ்.நிதர்ஷன் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…
-
- 0 replies
- 539 views
-
-
’எடுத்தேன் - கவிழ்த்தேன் அரசியல் விமோசனம் அளிக்காது’ 'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என்று உசார் மடையர்களாகி அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராதென, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி, இன்று (21) அவர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு, ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்…
-
- 0 replies
- 350 views
-
-
’எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்’ -எஸ்.நிதர்ஷன் 'மக்கள் எதிர்பார்க்கின்ற பெரிய அளவிலான திட்டங்களை, முழுமையாக செயற்படுத்துவதற்கு உரிய அளவு நிதி, பெண்கள் விவகார அமைச்சில் இல்லை. எனினும், மக்களுடைய எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்' என்று, வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரனும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய கல்வி அமைச்சின் பொறுப்புகள் சர்வேஸ்வரனுக்கும் பெண்கள் விவ…
-
- 0 replies
- 431 views
-
-
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளி…
-
- 1 reply
- 214 views
-
-
கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலைங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தியாவில்; 600க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மே மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவிட்டுள்ளனர். அதேப்போல் விசேட வைத்திய பயிற்சிக்காக பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள 85 இலங்கையைச் சேர…
-
- 6 replies
- 599 views
-
-
வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் ஒரே குரலாகவே தமிழ் மக்கள் பேரவையினால் 'எழுக தமிழ்' பேரணி நடாத்தப்படவுள்ளது. இந்த பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கான விசாரணைகள், காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்காக தமிழர் தாயக பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்…
-
- 0 replies
- 417 views
-
-
-பா.நிரோஸ் யுத்தம் செய்து, நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்பதற்காக, எவரையும் கொலை செய்வதற்கு, இராணுவத்தினருக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொலைக்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறெனவும் விமர்சித்தார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி இருப்பதாகவும் 'ஹோர்ன்' அடித்த குற்றத்துக்காக நபரொருவர் கைது செய்யப்படும் நிலைமைக்கு, இந்நாடு சென்றுள்ளதென்றும் இவை அனைத்தும், ஜனநாயக விரோதச…
-
- 4 replies
- 1.1k views
-
-
’ஏனைய மதத்தவருக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்’ ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் அது, தமது மதத்துக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மன்னார், திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைந்துள்ள மாதொட்ட ரஜமகா விகாரையில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், "வழிபாட்டுத் தலங்கள், தனி மனிதனுக்கு உரித்தானவை அல்ல. இவை சகலருக்கும் பொதுவானவையாகவே கருதப்படல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் என்ற வகையில் தூய்மையான எண்ணத்துடன் அன்பை வ…
-
- 0 replies
- 236 views
-
-
’ஐக்கிய தேசியக் கட்சி தன்னை பயமுறுத்த முயற்சிக்கின்றது’ Editorial / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் அலைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் பதிவிட்டுள்ள அவர் தான் மட்டகளப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் யார் கருணா அம்மான் என்பதை கேட்டுத் தெரிந்துக்கொள்ளுமாறும் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐக்கிய-தேசி…
-
- 1 reply
- 602 views
-
-
முல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணப் பிரதிநிதிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபா குகதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நீராவிடியப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூ…
-
- 0 replies
- 395 views
-
-
“கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமைய…
-
- 0 replies
- 310 views
-
-
’ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். “மாகாண சபையின் முதலமைச்சர், ச…
-
- 0 replies
- 170 views
-
-
’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’ தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில், தொ…
-
- 0 replies
- 232 views
-
-
நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார். விவசாயிகள் செய்தவறியாது தவிக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகம் கொடுத்திருந்தாலும் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பல நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தை காட்டியுள்ளதால், நாமும் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். எனவே, அரசாங்கத்துக்கு கடமையொன்று உள்ளது உடனடியாக சர்வதேச நாணய நிதியத…
-
- 2 replies
- 413 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்.. ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார். இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொட…
-
- 0 replies
- 426 views
-
-
’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார். ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள்…
-
- 0 replies
- 506 views
-
-
Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - 88 FacebookTwitterWhatsApp வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் த…
-
- 0 replies
- 238 views
-
-
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த 26ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு, பதிலளித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கலககபப…
-
- 3 replies
- 593 views
-
-
-என்.ராஜ் யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 'தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை' எனவும், அவர் கூறினார். யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ப…
-
- 0 replies
- 326 views
-