ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
யுரேனியத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் பரபரப்பு – திருப்பி அனுப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்தார். எனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு உரைமியாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஹம்பாந்தோட்டையில்…
-
- 1 reply
- 290 views
-
-
தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டது? - கஜேந்திரகுமார் April 21, 2021 28 ஆண்டுகள் இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்கியமை தமிழர்கள் என்பதற்காகவா நடைபெற்றது. என நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் தொிவித்துள்ளாா். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். மேலும் அங்கு உரையாற்றிய அவா் உள்நாட்டு விவகார அமைச்சு இம்மாதம் 8ம்திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதமூலம் ஒரு அறிவிப்பினைச் செய்துள்ளது. அதாவது கல்முனைவடக்கு பிரதேச செயலாளர் பணியகமத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக கருதுமாறு அக்கடித்தில் கேட்கப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 359 views
-
-
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கு…
-
- 7 replies
- 906 views
-
-
ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர் ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை ஒவ்வொரு வருடமும் மறக்காது நினைவுகூர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை இந்த குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களையம் அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை என்றும் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்ட…
-
- 1 reply
- 465 views
-
-
கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!! கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாளை (வியாழக்கிழமை) கள விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், சீனாவின் தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்வதற்கான சீனா தூதரகத்தின் அதிகாரம்…
-
- 4 replies
- 968 views
-
-
யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவ கூடடத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை புனரமைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அப்போதைய வடக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோரின் முயற்சியினால், நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிய ‘நாளைய இளைஞர்கள்’ அமைப்பின் நிதிப் பங்களி…
-
- 3 replies
- 649 views
- 1 follower
-
-
தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியின் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அரசியல் தலையீடு வெளிப்படையான விசாரணையின் தாமதத்திற்கு வழிவகுத்தது என குறிப்பிட்டார். எனவே ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மை வெளிப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை …
-
- 0 replies
- 326 views
-
-
எவ்வாறு தமிழ் பயங்கரவாதிகள் 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்த நூற்றுக்கனக்கான அப்பாவிகளை கொன்றதை ஏற்க முடியாதோ அதே போன்ற ஈனத்தனமான செயலே இதுவாகும். ஆனாலும் காத்தான்குடி தொழுகையாளிகள் மீது நடந்த கொலைகளுக்காக முஸ்லிம் சமூகம் தமிழ் கிராமங்களை தாக்கி கொள்ளை, கொலைகளில் ஈடுபடாமல் பொறுமை காத்தது. ஈஸ்டர் தாக்குதலை சேர்ந்தோர் முஸ்லிம் சமூகத்தை சேந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் இன்று வரை பாரிய விலைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடத்தில் மல்கம் கார்தினலை பாராட்ட வேண்டும். அவர் இன்று வரை இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளோரை கண்டறியும்படி அரசை வல…
-
- 0 replies
- 241 views
-
-
20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 64 Views நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதித்தின் பொகவான சந்தியிலே 20-04-2021 காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் போது, இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம் ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ கொழுந்து நாளொன்று பரிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம்…
-
- 2 replies
- 471 views
-
-
திருமதி இலங்கை அழகி... கிரீடத்தை, மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை போட்டி நடத்தப்பட்டது. இதன்போது குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறித்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே …
-
- 12 replies
- 1.8k views
-
-
யாழில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தல் ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர். அன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன. யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி …
-
- 0 replies
- 387 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கத்தோலிக்க மக்கள் அமைப்புக்களின் கூட்டணி விடுத்துள்ள கோரிக்கை ( எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பல குறைகள் காணப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவில்லை. ஆகவே, மீண்டும் விசாரணையை நடத்துவதுற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கத்தோலிக்க மக்கள் அமைப்புக்களின் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை முழுமையானதும் பூரணமானதுமான அறிக்கையாக நாம் ஏற்றுக்கொள…
-
- 0 replies
- 234 views
-
-
6 கிராமசேவகர் பிரிவுகளை மகாவலி திட்டத்துக்குள் கொண்டுவர திட்டம் – கஜேந்திரன் April 21, 2021 தமிழ் கிராமங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கி முழுமையாக சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி உத்தரவென பொய்கூறியே இவ்வாறான அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் கூறினார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார…
-
- 0 replies
- 231 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்! இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.அதன்படி, 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று பயங்கரவாதிகளின் இலக்குக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இன்று (புதன்கிழமை) காலை விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.குறித்த தேவாலயத்தில் தாக்குதலுக்கு பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இடம் பெற்ற இந்த விசேட வழிபாட்டில் ஈஸ்டர் தாக்குதலி…
-
- 0 replies
- 233 views
-
-
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 414 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரியின் தகவல் மறைக்கப்பட்டது ஏன்? – எதிர்க்கட்சி ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. உளவுத்துறை அதிகாரி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஐபி முகவரி மூலம் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கண்டுபிடித்தார் என ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட இருந்த நேரத்தில் …
-
- 0 replies
- 225 views
-
-
மே தின கூட்டங்களுக்குத் தடை. மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணியின் தலைவரும் , இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் . கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று ( செவ்வாய்க்கிழமை ) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனியே நடத்த ஆளுங்கட்சியிலுள்ள சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1211215
-
- 0 replies
- 403 views
-
-
விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தல…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவுகூர அனுமதியுங்கள் -யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் கோரிக்கை 26 Views ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல, கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வட பகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. எத்தனையோ மக்கள் இறந்தார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குர…
-
- 1 reply
- 322 views
-
-
மாகாண சபையை பாதுகாக்க தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ரெலோ கோரிக்கை “குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும், விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்” என வலியுறுத்தியுள்ள ரெலோ, “தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” எனவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “தற்போதைய அரசியல் சூழலில் மாகாண…
-
- 0 replies
- 234 views
-
-
இந்திய மீனவர்கள் அத்துமீறல்- கடல் வளம் அழிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு 41 Views இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எதிர் காலத்தில் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமன்னார்,பேசாலை , சிறுத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களி…
-
- 0 replies
- 249 views
-
-
கொரோனா: இந்தியாவைப் போல் இலங்கையும் மாறலாம் – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை 13 Views இலங்கை இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பி.சி.ஆர் மற்றும் துரிதஅன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்படலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஸ்பாலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களிறகு முன்னர் சுகாதார விதிமுறைகளை முற்றாக புறக்கணிக்கப்ப…
-
- 0 replies
- 299 views
-
-
சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் : வியாழேந்திரன் அழைப்பு சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி பிரதமருன் பேசுவோம் என்று நான் பாராளுமன்றத்திலும் தெரிவித்தேன் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், எம்மைப் பொருத்தளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த கட்டமைப்பினூடாக எமது மக்களிற்கான எமது மக்களின் தேவைகளை அபிவிருத்திகளை நிச்சயமாக பெற்றுக்கொடுக்கவேண்டும். ந…
-
- 7 replies
- 809 views
-
-
2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அறிவித்திருந்தார்.ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த நபர்கள் தனக்கு தெரியும் என்ற ரீதியில் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதாவது அரசாங்கம் அறிவித்த இருவரது பெயர்களையும் நிராகரிப்பதகவே அவரது அறிக்கை அமைந்திருந்தது.அதேநேரம் நேற்று அதாவது 18.04.2021 அன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போது “”தங்கள் அரசியல் சக…
-
- 1 reply
- 392 views
-
-
‘அன்னை பூபதி’க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்; மகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை! ‘அன்னை பூபதி’யின் நினைவு தினத்தினை, அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வர் சாந்தி தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் சமாதியில் நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக நினைவேந்தல் அனுஷ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை அங்கு சென்று நினைவேந்தல் அனுஷ்டிக்க வேண்டாம் எனவும்…
-
- 3 replies
- 761 views
-