ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
அரசியல் சலசலப்புகள் இடையே கூடும் நாடாளுமன்றம் நான்கு நாட்கள் தொடரும்! April 20, 2021 இலங்கையின் ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடேயே தொடரும் பனிப் போரிடையே, நாடாளுமன்ற அமர்வுகளை இன்று (20.04.21) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19.04.21) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்க…
-
- 0 replies
- 514 views
-
-
உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கே தற்போது அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்க…
-
- 0 replies
- 441 views
-
-
மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்போது தொழிலாளர் தினத்தை குறிக்கும் வகையில் மே தின கொண்டாட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜ…
-
- 0 replies
- 257 views
-
-
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையிலேயே சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள், சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போ…
-
- 0 replies
- 214 views
-
-
நெருக்கடியை தீர்க்க மஹிந்த அழைத்த கூட்டத்தில் சலசலப்பு – வாசு, விமல், கம்பன்பில வெளிநடப்பு 36 Views மொட்டுக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டம் பிசுபிசுத்துப் போனது. பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல டசின் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு பஸில் ராஜபக்ஷ கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் விமல் வீரவன்ஸ, உதய கம்பன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் வெளியேறியமையால் கூட்டம் பிசுபிசுத்துப் போனது. இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புக…
-
- 1 reply
- 843 views
-
-
இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது- சார்ள்ஸ் வடக்கு- கிழக்கில் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு, வற்றாப்பளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “ வடக்கு- கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு கல்வி மற்றும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வில்லை. அதற்கு மாறாக இங்குள்ள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு…
-
- 5 replies
- 540 views
-
-
சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம், இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த …
-
- 11 replies
- 850 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – அதற்கு எதிராக மாநகரசபைக்குள் ஆர்ப்பாட்டம் 13 Views ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை வழங்கி வருகின்ற இவ்அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப் படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ் அமரர் ஊர்தி சே…
-
- 1 reply
- 501 views
-
-
(எம்.மனோசித்ரா) தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார். பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு …
-
- 1 reply
- 282 views
-
-
தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்கு 1 Views நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நிலாவரை கிணற்றுப் ப…
-
- 0 replies
- 516 views
-
-
பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான், தனது தந்தை சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார். “இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்- ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா …
-
- 0 replies
- 584 views
-
-
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு கரையாக்கன் தீவு செக்கரியா குளம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது! By கிருசாயிதன் April 18, 2021 (கல்லடி நிருபர்)மட்டக்களப்பு கரையாக்கன்தீவு செக்கரியா குளம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.கரையாக்கன்தீவு துர்க்கா இளைஞர் கழகத்தின் தலைமையில் ஏ.யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "இளைஞர் தலைமையில் நீர் முகாமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன்சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் கைலிமடு கிழல் கமநல அமைப்பினால் கமநல அபிவிருத்தித் திணைக்களம், மண்முனை மேற்குப் பிரதேச செயலகம், மண்முனை மேற்குப் பிரதேச சபை, மாவட்ட அனர்த்த முகா…
-
- 0 replies
- 442 views
-
-
யாழ். மற்றும் கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு- மூவர் கைது! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஒன்பது பாடசாலைகளில் திருட்டுக்களில் ஈடுப்பட்டதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையின்போது, ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிக்கணினிகள் உள்ளிட்ட 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வட்டுக்கோட்டை, முழங்காவில் மற்றும் குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி.லியனக…
-
- 0 replies
- 298 views
-
-
கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பு முற்றிலும் இலங்கையின் சட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று ஒரு ஊடக மாநாட்டில் பேசிய நீதியமைச்சர் அலி சப்ரி,ஒரு சட்ட சிக்கல் ஏற்பட்டு, ஒரு தீர்வு செயல்முறை முதலில் தோல்வியுற்றால், கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றார். தண்டனைச் சட்டம் உட்பட இலங்கையின் சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று அமைச்சர் கூறினார், மேலும் 1995 ஆம் ஆண்டு எண் 11 நடுவர் சட்டம் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் கூறினார். வணிக அடிப்படையில் இரு தரப்புகளும் ஒரு ஒப்பந்தத்தில் நுழையும்போது, ஒரு சர்ச்சை எழுகிறது, அது நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்க்கப்ப…
-
- 0 replies
- 420 views
-
-
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்கள் “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் – மனோ கணேசன் 5 Views 20 ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்கள…
-
- 0 replies
- 223 views
-
-
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில், திட்டமிட்டபடி பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் தொல்லியல் திணைக்களங்களால் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அத் திணைக்களங்களின் கீழ் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மையின மக்களாகிய சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என பல்வேறு தமிழ் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இதன் காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பூர்விக நிலங்களை இழந்து, அகதிகளாக்கப்படும் சூழலை எதிர்கொண…
-
- 0 replies
- 371 views
-
-
ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் எனக் கோரியும் அட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. அட்டன் மல்லியப்பு சந்தியில் மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி பேசிய சமயம் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பரிமாறியதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் பல்வேறு மலையக அமைப்புகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வர…
-
- 1 reply
- 497 views
-
-
இடிக்கப்பட்டு மீளக்கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறக்கப்படுகிறது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ம் திகதி இடித்தழிக்கப்பட்டது. எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. இதன்படி பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவ…
-
- 0 replies
- 217 views
-
-
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம். அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்ட…
-
- 39 replies
- 3k views
-
-
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவும் ஆபத்து இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது, “இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் B.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, B1617 வம்சத்தை சேர்ந்தது. இந்த வைரஸ், E484Q, L452R என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் ம…
-
- 0 replies
- 282 views
-
-
அரசியலுக்கு வரவே மாட்டேன் - வேலன் சுவாமிகள் April 16, 2021 நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரமாட்டேன் என்று வேலன் சுவாமிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு அமைய அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கலாம் என்ற கருத்து முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பிலேயே வேலன் சுவாமிகள் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். “பொத்துவில் …
-
- 3 replies
- 992 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை ஸ்தாபிப்பதற்காக மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். இந்த சட்டமூலம் நகரசப…
-
- 4 replies
- 743 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனால் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக க…
-
- 0 replies
- 371 views
-
-
(எம்.மனோசித்ரா) நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது , அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆவார். அவ்வாறான நபருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்தார். செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்ஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாமல் , தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவதாகவும் மேர்வின் சில்வா …
-
- 0 replies
- 320 views
-
-
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – சரத் வீரசேகர தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்படுவதாகவும் கூறினார். பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொதுப் பாத…
-
- 1 reply
- 409 views
-