ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்ட செய்தி தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுடன் உரையாடினார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சடலத்துடன் வந்த 11 பேரையும் கடத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் வெறும் கட்டுக்கதை என யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கட்டுநாயகா விமான ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 09-01-2007 16:50 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பை அண்டிய பகுதிகளில் 40 தமிழர்கள் கைது இன்று செவ்வாய்கிழமை கொழும்பை அண்டிய புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பை தொடர்ந்தே மிருவாங்கொட, நிகம்பு, வத்தளை, கம்பகா ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு, மற்றும் செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போNது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கலாம்: திஸ்ஸ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும் என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. ஆகவே இரு தரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுக…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழின விரோதக் கூட்டணி: தமிழருவி மணியன் சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த 16 பேருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தமிழருவி மணியன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது, உலகத் தமிழர்களின் தலைவர் என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதியால், 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடிந்த அவரால், தமிழ்நாட்டுக்கு முல்லைப்பெரியாறு, ஒகேனக்கல் காவிரிப் பிரசனையில் தீர்வுகாண முடியவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும். கடைசித் தமிழன் இருக்கும்வரை கொன்று குவித்து சிங்கள நாடக மாற்ற முயலும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். திமுக-காங…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவ உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், துணைப்படை T.M.V.P குழுவின் மாவட்ட பொறுப்பாளருமான இனியபாரதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்தமை தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. இதில் கொலை அச்சுறுத்தலின் மத்தியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கொழும்பில் இருந்து சென்று கலந்துகொண்டிருந்தார். நீதியாளர் மொகைதீன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினருக்காக வாதாட இருந்த முஸ்லீம் சட்டவாளர் ஒருவர் அச்சம் காரணமாக நீதிமன்றுக்கு செல்லாது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக முதல்வர் டாக்டர் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்! கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழகத்தில், ஈழம் பேசு பொரு ளாகியிருக்கிறது. எண்பதுகளில் தொடங்கிய உணர் வலைகள், இடையில் போடப்பட்ட அணையை உடைத்து மீண்டும் கிளர்ந்திருக்கிறது. ஈழத்தில் அன்றாடம் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகும் மக்களின் துயர் பற்றிப் பேசினாலே, அது புலிகளைப் பற்றிய பேச்சாக மாற்றப்பட்டு, ஈழம் குறித்த பேச் சையே தடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் கூட்டணி நண்பர்களான காங்கிரஸ்காரர்களின் கவலை புரிகிறது. ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு இந்தியாவே மௌனசாட்சியாக இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் அறிக்கையின் விளைவாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினீர்கள். 'இரு வார காலத்துக்குள் போர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
போர்வெறி கொண்ட அரசு வடபகுதியில் மேற்கோண்டுவரும் மோதல்கள் விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். இடதுசாரி முன்னணியின் வடமத்திய மாகாணசபைக்கான தேர்தற் பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் ஐம்பது கடைத்தொகுதிப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-கண்டியைக் கைப்பற்ற வெள்ளையர்கள் முயன்றபோது கண்டிய மக்மள் நகரைக் காலி செய்துவிட்டு காட்டுப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டனர். எதிர்ப்பு இல்லையே என எண்ணிய வெள்ளையர்படை கண்டிக்குள் உல்லாசமாகப் பிரவேசித்தது. இரண்டு தினங்கள் கழித்து கண்டிய மக்கள் உக்கிர தாக்குதல் தொடுத்தனர். வெள்ளையர்படை சின்னாபின்னம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையானை உயிருடன் புதைக்க அரசு தயாராகின்றது கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் பிள்ளையான் குழு எனப்படும் துணைஇராணுவக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சலுமான பிள்ளையானை இல்லாது ஒழிக்கும் பணிகளை சிறீலங்கா அரசு திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணசபையின் முதலைமைச்சராக உள்ள பிள்ளையானை அதில் இருந்து துரத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மாகாணசபையின் நிதியை பிள்ளையான் கையாடியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு அரசு உயர் அதிகாரிகளை பணித்துள்ளது. பிள்ளையானின் ஊழல்களை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டுவருமாறு…
-
- 0 replies
- 1.2k views
-
-
களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/20377
-
- 14 replies
- 1.2k views
-
-
தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன? "இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்…
-
- 13 replies
- 1.2k views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள…
-
-
- 21 replies
- 1.2k views
-
-
ராஜபக்சேவின் புதல்வர் விண்வெளிக்கு போகாமல்..! குப்பனின் சுப்பனின் மகன்களா போவது..? ஈழதேசம் செய்தி..! நிமல் ராஜபக்சே இலங்கை அரசியலுக்கு வந்து விட்டார். பிறகு மகிந்தா ராஜபக்சேவின் தகப்பனார் எவ்வாறு அரசியல் கட்சி தொடங்கி, இன்று மகிந்தாவை அரசியல் களத்தில் நுழைத்து,இலங்கையின் அதி உயர் பதவிகளை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் அணைத்து பதவிகளையும் தங்களது குடும்பத்திற்கு ஒதுக்கி உள்ளார்களோ..? அது போன்று மகிந்தாவும் தனது வாரிசுகளை கொண்டு வந்தால் தானே, அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு இலங்கை அரசை ஆள முடியும். தனது தந்தை நடத்திய இன அழிப்பை தொடர்ந்து நடத்திட முடியும்..? எனவே தான் தங்களது குடும்ப வாரிசுகள் இலங்கையை ஆட்சி புரிந்திட, இலங்கை மக்களை அதாவது சிங்கள மக்களை கசக்கி பிழிவதற…
-
- 8 replies
- 1.2k views
-
-
யுத்த முன்னெடுப்பை நிராகரித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் [30 - May - 2007] பி.ரவிவர்மன் யுத்தத்துக்கு எதிராக நாடு பூராவுள்ள அனைத்து மக்களையும் அணிதிரட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள இடதுசாரி முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான வீ.திருநாவுக்கரசு, நீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம். சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு. இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு. கடந்த 30 வருட கால யுத்தத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : Sat Jul 7 5:07:55 EEST 2007 தொப்பிகலவை கைப்பற்றுவதற்கு அது முக்கியத்துவமான பிரதேசம் அல்ல! முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி 1987 ஆம் ஆண்டு ஜூலை முதல் 1990ஆம் ஆண்டு மார்ச் வரை, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படை போரிட்டு வந்துள்ளது. இப் படைகள் தொப்பிகலக் காடுகளி லும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும், அங்கு நிலைகொள்ள முயலவில்லை. அப்படி நிலைகொள் வதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் இருக்க வில்லை. இவ்வாறு இந்திய இராணுவ முன்னாள் பிராந்திய தள பதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளை யுத்தத்தில் தோல்வியுறச் செய்தாலும் இறுதித் தீர்வுகாண அரசியல் தீர்வு தேவை வீரகேசரி நாளேடு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றை முன்வைக்காத நிலையில் பிரச்சினைக்கு ஒருபோதும்தீர்வுகாண முடியாது. புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியுறச்செய்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொழுது இறுதியில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்தில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் மற்றும் வணிகர்கள் இணைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஒரு இலட்சம் பவுண்ஸ் நிதி முதற்கட்டமாக சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட இந்த நிதியை சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் கையளித்துள்ளனர். இந்த நிதி சிறீலங்காப் தரைப்படையினர், கடற்படையினர் மற்றும் வான்படையினரின் வீடமைப்புத் திட்டத்திற்கு பயனபடும் எனக் கூறியே நிதிகேரிப்பு நடத்தப்பட்டுள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய நீலப்புலிகள் கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 3 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் . http://meenakam.com/
-
- 12 replies
- 1.2k views
-
-
தப்பிச் சென்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் அணி திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கக் கூடுமென இந்தியாவின் ஸ்டர்ஜீ பேஜ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 30,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஆயுத போராளிகள் அல்ல எனவும், போராட்டத்தை நடத்தக் கூடிய வல்லமை படைத்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. தப்பிச் சென்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை தேடி அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது. உறுப்பினர்கள் அணி திரண்டு மீண்டும் தாக்குதல்களை நடத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 5, செப்டம்பர் 2010 (22:21 IST) வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்: சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்-காசிஆனந்தன் நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், ‘’2 லட்சம் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்களராணுவம். ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணம் அஷ்ரப் நகரில் சிங்கள இராணுவத்தினரின் அத்துமீறிய படைமுகாம் அமைப்பினை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள தமது குடியிருப்பு மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கை நிலங்களில் சிங்கள இராணுவத்தினர் அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து வருவதைக் கண்டித்து இன்று (2011.11.08) அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . தங்களுக்கு சொந்தமான காணிகளில் தாம் நுளைவதைத் தடுத்துவரும் இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தனர். . ஒலுவில் அஷ்ரப் நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் தற்போது சிறிய மினி முகாம்களை அமைத்துள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கை பிரித்து திருகோணமலையினை மேலும் தனியாக பிரிக்கவும் நடவடிக்கை! வடக்கு, கிழக்கை பிரிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கை மூன்று நிர்வாக அலகாக பிரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலையென நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு வட மாகாணத்துக்கான நிர்வாக மையம் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்துக்கான நிர்வாக மையம் கல்முனையிலும் திருகோணமலை தனியொரு நிர்வாக மையமாகவும் செயற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. திருகோணமலையின் நிர்வாகச் செயற்பாடுகளை ஓய்வு…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர்களுக்கென தனிநாடு அமைப்போம் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக்குழுக்களில் ஒன்று பின்னர் தமது கொள்கைகளை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகக் கூறி அமைச்சுப் பதவிகளை பெற்றதுடன் பிரிக்க முடியாத வட கிழக்கு, மத்தியில் கூட்டாட்சி மாநாலத்தில் கூயாட்சி என மக்களுக்குப் பம்மாத்துக் காட்டி வந்தது. ஆனால் அந்தக் கட்சி இன்று தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று மாநாகர சபையில் கூட தனியாட்சி அமைக்க முடியாது ஆளுங்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் யாழ் மாநாகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி. யாழ்ப்பாணம் பஸ்தியான் கொட்டேலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போ…
-
- 3 replies
- 1.2k views
-
-