ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ரம்ஸான் நோன்பை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் கடந்தவாரம் இப்தார் விருந்து, அளித்தார். இந்த விருந்துக்கு இம்முறை, முஸ்லிம் வணிகர்களுக்கு மாத்திரமன்றி, மேற்காசிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த இப்தார் விருந்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியர் - பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குருநாகலை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற வந்த பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் உள்ள இந்த வைத்திய அதிகாரி நோய்களை பரிசோதிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டிற்கமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத் த…
-
- 0 replies
- 534 views
- 1 follower
-
-
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதைத் தடுக்க புதிய திட்டம் அமுல்! சனி, 05 மார்ச் 2011 10:37 இந்திய மீனவர்கள் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் முகமாக கடற்கரையோர பாதுகாப்புப் படையுடன் கடற்படையும் இணைந்து கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக வடபகுதி கடற்பிராந்தியத்தில் பெருமளவு கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிப்பதிருப்பதாக கடற்கரையோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பணியில் கடற்படையினால் உருவாக்கப்பட்டுள்ள படகொன்றும், கடற்கரையோர பாதுகாப்புப் படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் தற்போது பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலதிகமாக அதிவேக கப்பல்கள் இரண்டும், தகவல் தொடர்பாடல் உபகரணங்களைக் கொண்ட கப்பல்கள் இரண்…
-
- 0 replies
- 495 views
-
-
ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com
-
- 1 reply
- 1.5k views
-
-
மகிந்தவின் ஆட்சியில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சியில் இல்லை! வேலையற்ற பட்டதாரிகள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்று வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியல் தேர்வு குறித்தும் பல்வேறு அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். 5ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது…
-
- 0 replies
- 463 views
-
-
சிறிலங்காவிற்கு தரக்குறைவான ஆயுதங்களை பாகிஸ்தான் விற்பனை செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் ஆயுதங்கள் மிகச்சிறந்த தரம் வாய்ந்தவை, சிக்கனமானவை, இலகுவாக பயன்படுத்தக்கூடியவை. எமது ஆயுதப்படைகளின் தேவையையும் பாகிஸ்தான் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த அறிக்கையை வெளியிட்டவர்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளாமல் மூன்றாவது நாட்டுடன் கருத்துக்களை பகிர்ந்தது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் எமக்கும் சிறிலாங்காவிற்கும் இடையில் ஆழமான நட்புறவு உள்ளது. …
-
- 0 replies
- 711 views
-
-
யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் இரவுவேளைகளில் வாகனங்களில் நடமாடும் பெண்கள்!! யாழ்ப்பாணம், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் பெண்கள் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸாரும் கண்டும் காணாதது போன்று உள்ளனர் என்று மாநகர சபையின் பெண் உறுப்பினர் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெண்கள் தொடர்பான நிலையியல் குழுவின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போதே அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினர். அவர்கள் தெரிவித்…
-
- 0 replies
- 548 views
-
-
6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 06:39 PM கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
திட்டமிட்டபடி கட்சி மறுசீரமைக்கப்படும்: ரணில். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் அரச பக்கம் தாவலாம் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், திட்டமிட்டபடி தனது கட்சி 100 நாட்களுக்குள் மீள ஒழுங்குபடுத்தப்படும் இது தொடர்பான முடிவு எதிர்வரும் வாரம் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் வாரம் கட்சியின் செயற்குழு கூடி முன்னைய கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கிய பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். செயற்குழுவில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, செயற்குழு தலைவர் ருக்மன் சேனநாயக்கா, கரு ஜெயசூரியா உட்பட மற்று…
-
- 2 replies
- 798 views
-
-
14 பொதுநலவாய நாடுகளில் சேவையாற்றுகின்ற சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர்களில், இரண்டு பேர் மாத்திரமே தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைதினம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்ற இலங்கையர்களின் தகுதி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா சமர்பித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. உயர்ஸ்தானிகருக்கான சிறந்த தகுதிகளை கொண்ட கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.அன்சார் ஆகிய இரண்டு பேரும் கென்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்றனர். ஏனைய 12…
-
- 0 replies
- 200 views
-
-
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு …
-
- 1 reply
- 787 views
-
-
டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்! கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது. அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு…
-
- 3 replies
- 2.8k views
-
-
லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை’ கண்டித்து இலங்கையில் கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு ஏறாரில் இன்று வெள்ளிக் கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்பு மீரா ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய முஸ்லிம்கள் பிரதேச செயலகம் வரை பேரணியொன்றை நடத்தினார்கள. மேற்குலக நாடுகள் லிபியாவில் தொடுத்துள்ள வான் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த தாக்குதல்களை நிறுத்தக் கோரி மகஜரொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பிரதேச செயலாளரிடம் கையளித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் இலங்கை இராணுவத்தினரால் இன்று திங்கட்கிழமை மீண்டும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் வசித்து வரும் வலி.வடக்கு மக்களிற்கு நலன்புரி முகாம் அமைந்துள்ள காணிகளை சொந்த காணிகளாக்கும் நோக்கில் இந்த அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 40 பரப்பு நில அளவுள்ள மதவடி நலன்புரி முகாமில் 17 குடும்பங்கள் வசித்து வருவதுடன், 120 பரப்பு நில அளவுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 270 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நலன்புரி நிலைய காணிகளில் வசிப்பவர்களில், சொந்த காணிகள் வேண்டும் என கோரிய குடும்பங்களுக்கு தலா 1½ பரப்பு காணிகள் வீதம் பகிர்ந்…
-
- 0 replies
- 546 views
-
-
அவசரகால நிலைமை நீடிப்பு அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க., ஜனநாயக தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19404-2011-04-07-14-25-31.html
-
- 2 replies
- 964 views
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
மேற்கத்தைய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்பட எம்மால் ஒருபோது முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இணக்க சபை உறுப்பினர்களுக்கான சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டை அடிமைப்படுத்த எந்த சக்திகளுக்கும் இடமளிக்க முடியாது. இப்போது மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் நிலைமைகள் நாம் அறிந்ததே. ஈராக் எகிப்து லிபியா போன்ற நாடுகளில் இப்போது இடம்பெறும் செயற்பாடுகள் நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது சீர்குலைக்கவே உதவும். நாம் எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் யுத்தம் செய்யவில்லை. மாறாக பயங்கரவாதத்தை ஒழிக்கவே யுத்தம் செய்தோம்.அந்த நிலையை மீண்டும் நாட்டில் ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டை வீழ்ச்சியுறச் செய்ய இடமளிக்க முடியாது. …
-
- 0 replies
- 234 views
-
-
யாழில் இருப்பது காவற்துறையா காடையர் துறையா? அச்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை – காவற்துறையினரின் செயற்பாடு குறித்தும் அதிருப்தி… யாழ்ப்பாணத்தில் இருந்து – பாலன் – சுப்பிரமணியன்…. கடந்த 19.07.2018 அன்று இரவு 9.30 மணியளவில் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதிக்கு வரும் பருத்தித்துறை வாயிலூடாக குருநகரைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலை 30 ஆம் இலக்க விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டார். எனினும் நால்வரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இவ்விடயத்தை 24 ஆம் விடுதியில் காவலில் இருந்த சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நால்…
-
- 0 replies
- 334 views
-
-
விசுவமடு. மக்கள் குடியிருப்புகள் மீது கிபீர் தாக்குதல் - பண்டார வன்னியன் Monday, 12 February 2007 12:02 முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் அன்டிய பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்க்கொண்டுள்ளது.இத் தாக்குதலின் போது மக்கள் பாதுகாப்hன இடங்களை நாடியமையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. இத் தாக்குதலில் போது கிபீர் விமானங்களுக்கு உருதுனையாக வேவு விமானங்களும் சுற்றிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://sankathi.org/news
-
- 4 replies
- 1.4k views
-
-
http://news.lankasri.com/view.php?22GpXbc3BI34eM29303jQgdd3Qjl20X922e4cLLcb3pG02
-
- 1 reply
- 717 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண! ஏகாதிபத்தியசக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முழு அளவில் உதவினர். தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினை எழுந்ததாலேயே ஐ.நா. இலங்கை விவகாரத்தில் தலையிட முழுக்காரணமாக இருந்தது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை விமானத்தில் மீண்டும் கோளாறு துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி 06 நிமிடங்களின் பின்னர் விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்துஇ விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அ…
-
- 1 reply
- 285 views
-
-
ஜனநாயகமும் சமாதானமும் இல்லாத எமது நாட்டில் அரசாங்கம் நல்லாட்சி தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றது. நல்லாட்சியின் அர்த்தம் புரியாத அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும். நல்லாட்சி என்றால் என்ன என்பதை அறிந்து புரிந்து கொள்வதற்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டுமென்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். பலப்பிட்டியவில் நேற்று மாலை பொது எதிரணியின் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேனா இவ்வாறு சவால் விடுத்திருந்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தினையும் பறித்து விட்ட…
-
- 2 replies
- 285 views
-
-
எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/251604
-
- 13 replies
- 863 views
- 1 follower
-
-
நிபுணர் குழு அறிக்கை நாட்டின் கலாசாரத்தை பாதித்துள்ளதாம் – ஜனாதிபதி! Posted by uknews On May 13th, 2011 at 2:47 am புத்தாண்டு காலத்தின்போது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், நிபுணர் குழு அறிக்கை திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசாரத்தைக் கருத்தில் கொள்ளாது ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் செயற்பட்டுள்ளர் என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மனிதாபிமான நடவடிக்கைகளின்போத…
-
- 0 replies
- 656 views
-