ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நேற்றைய தினம் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் மண் மாபியாக்களுக்குள் இடம்பெற்ற கலவரம் காரணமாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் முற்பகல் 11.00 மணியளவில் இரு மண் மாபியாக்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களாக மண் மாபியாக்களுக்கு இடையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த போதிலும் குறிப்பாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு அதிகளவாக ஈடுபடுகின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. ஆகவே இதுபோன்ற வாள் வெட்டு சம்பவம் பதிவாகி உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத…
-
- 0 replies
- 303 views
-
-
சைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு 3 Views சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே…
-
- 0 replies
- 302 views
-
-
பிள்ளைகளைக் காட்டினாலே ஜனாதிபதியுடன் பேசத் தயார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிப்பு 34 Views துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கை எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவோம்-ஐ.நா. மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் என மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா – அல்- நசீவ் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திருத்தம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கரிசனைக…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் உதவவேண்டும்-வடக்குகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் உதவவேண்டும் என வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் சிவில்அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களிற்கு பொறுப்புக்கூறும் செயற்பாடுகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவு அளிக்கவேண்டும் என நீங்கள் வேண்டுகோள் விடுத்த…
-
- 0 replies
- 192 views
-
-
மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்பனிகள் நலுவல் போக்கையே கடைபிடிப்பார்கள். அரசாங்கம் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் தேவை என்பதை நான் உணர்கிறேன் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (26 ) நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியரும், மலையக மக்கள் …
-
- 0 replies
- 209 views
-
-
ஜனாசா விடயத்தில் கிடைத்தது வெற்றியுமல்ல, பரிசுமல்ல: எமது உரிமையையே பெற்றுள்ளோம் – சாணக்கியன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/Sanakkiyan-1.jpg கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இது எமது உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இதனை நாங்கள் வெற்றி…
-
- 0 replies
- 182 views
-
-
தமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது! தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கட்டமைப்பு உருவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. இதன்பின்னர…
-
- 0 replies
- 199 views
-
-
ஐ.நாவில் சிறீலங்காவை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு 14 Views ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது. சிறீலங்காவின் அரசியல் ஸ்தீரதன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை சிறீலங்கா வலுவாக பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது. மேலும் தேசிய அபிவிருத்தி ம்றும் வளர்ச்சிக்கான சாதனைகளுக்காக வாழ்த்துக் கூறுகின்றோம்.மனித உரிமைகளை தீவிரமாக ஊக்கிவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்த…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை! ஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு எந்த நாடுமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிவித்தது இல்லை என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிவுரிமை அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலங்கா அரசு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது தொடர்பிலான விரிவான தகவல்களை ஐபிசி தமிழுக்கு வழங்குகிறார் அரசியல் ஆய்…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண ம…
-
- 5 replies
- 561 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் சில பக்கங்களை எதிர்க்கட்சி நாடாமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இவ்வாறு வெளியிட்ட பதிவில், ஆணைக்குழுவால் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்ன…
-
- 1 reply
- 213 views
-
-
மீறப்படும் மனித உரிமை மீறல்கள்" - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,OHCHR இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட். "எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சும…
-
- 4 replies
- 511 views
-
-
சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா 44 Views சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 5 replies
- 556 views
-
-
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியது- நினைவுபடுத்தினார் இம்ரான் கான் இலங்கையில் 30 வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்துவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றானது உலகில் நிலவும் சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், இணை ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகையில், “நான் பல்கலைக்கழகத்தில…
-
- 3 replies
- 493 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆ…
-
- 14 replies
- 973 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இலங்கையி…
-
- 3 replies
- 608 views
-
-
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24.02.21 தொடக்கம் இரண்டாவது நாளாக இன்று(25) வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள். சுகாதார அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும்…
-
- 1 reply
- 294 views
-
-
வடக்கில் அபிவிருத்திக்காக 1146 ஏக்கர் காட்டை அழிக்க இணக்கம்..! முதற்கட்ட கலந்துரையாடலும் நிறைவு.. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1146 ஏக்கர் காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வனஜீவராசிகள், வனவள பரிபாலன அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (23) மு.ப 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றாடல், வன ஜீவராசிகள் வளங்கள் மற்றும் காடுகள் என்பவற…
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை ம…
-
- 10 replies
- 811 views
-
-
சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்.பல்கலையில் சாதனை! சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோரே இன்று பட்டத்தினைப் பெறிறுள்ளனர். சபேசன் கட்சனி அரசறிவியல் துறையிலும் விஜயகுமார் விஜயலாதன் சமூகவியல் துறையிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளனர். சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியில் இயங்கி வரும் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகமானது கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள…
-
- 1 reply
- 462 views
-
-
சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதலாவது இலக்கு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகும். அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக திட்டமிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெரு…
-
- 2 replies
- 442 views
-
-
"பேரினவாத பூமராங்" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹ்ரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹ்ரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இன்றைய அரசாங்க கட்சி பதவிக்கு வந்தது. ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த ஆட்சிக்கு மறைமுகமாக பாரிய உதவியாக அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கை குறித்த பிரேரணைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/Protest-Colombo-5.jpg பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரனை நாடுகளின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. இம்முறை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்…
-
- 0 replies
- 250 views
-
-
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு! வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார். இதன…
-
- 0 replies
- 334 views
-