Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். நெடுந்தீவு கடல் பகுதியில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் கடந்த நவம்பர் மாதம் மூன்று நாட்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக இரண்டு கோடியே 49 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/117893/fisherman.jpg நெடுந்தீவு பகுதியில் 689 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலாக கடற் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம், 18 ஆம், 21 ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் தொழில் நடவடிக்கைகளால் 174 கடற் தொழிலாளர்கள் தங்களுடைய கடற்தொழில் உபகரணங…

  2. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது By கிருசாயிதன் இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயத்தை அவர் நினைவு கூர்ந்தார்.அத்துடன், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார். அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எ…

  3. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பதற்கு இலங்கை முடிவு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் உதயகம்மன்பில் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை ஏற்கனவே இலங்கை அனுப்பிவைத்துள்ளது மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றும்போது அது பகிரங்கப்படுத்தப்படும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஆiணாயாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வி…

    • 0 replies
    • 380 views
  4. பொத்துவில் – பொலிகண்டி போராட்டம் பொத்துவில் இராணுவ வலயமாக மாற்றம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று ஆரம்பிக்கவுள்ளது. இதையடுத்து, பொத்துவில் முழுவதும் இராணுவ வலயமாக மாற்றப்பட்டுள்ளது. பொத்துவில் நகரில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்கும் தமிழர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இதேவேளை, பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனைச்சாவடியை கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் செல்கிறார்களா என விசாரிக்கப்படுகிறார்கள். செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் வழ…

  5. கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்! by : Litharsan வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புத் துணிகளால் முகத்தை மறைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்! | Athavan News

    • 0 replies
    • 305 views
  6. நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்க…

  7. கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – சம்பந்தன் பகிரங்க அழைப்பு 4 Views “தமிழ்பேசும் மக்களை இலக்கு வைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கோரியும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளும் ஓரணியில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டும்.” இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ…

  8. ராஜபக்ஸக்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் அவசர சந்திப்பு – February 3, 2021 இலங்கையின் அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக சந்தித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். …

  9. இன்றைய போராட்டத்திற்கு சாணக்கியன் எம்.பி மீண்டும் மக்கள், இளைஞர்களுக்கு அழைப்பு SAVITHFebruary 3, 2021 இன்று இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் மக்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள், ஏன் அரசின் நிகழ்வுகள் கூட கொரோனாவின் மத்தியில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் …

  10. ஆங் சான் சூகீயின் நிலமை நாளை இலங்கையிலும் வரலாம் - மனோ கணேசன் எதிர்கூறல்.! ஆங் சான் சூகியின் நிலமை இலங்கையில் உள்ளவர்களுக்கும் வரலாம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முகநூலில் கூறியுள்ளதாவது, “முன்னாளில் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மார் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகீ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளி விட்டதாம். கடந்த காலத்தில் இந்த ஆங் சான் சூகீயை பல்லாண்டுகள் பர்மிய இராணுவம் வீட்டுக்காவலில் வைத்த போது உலகமே அவருக்காக பரிந்து பேசியது. இப்போது அத்தகைய பரிவை ஆங் சான் சூகீ எதிர்பார்க்க முடியாது. காரணம், பெளத்த நாடான மியான்மரில் வாழும் ரோஹிங்யா முஸ…

  11. போராட்டத்தில் பங்கேற்க 32 பேருக்குத் தடை – மட்டக்களப்பு, கல்முனை நீதிமன்றங்கள் உத்தரவு 2 Views தமிழ்பேசும் மக்களுக்கு நீதி வேண்டி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 32 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும் கல்முனை நீதிவான் நீதிமன்றங்களால் இந்தத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்த…

    • 2 replies
    • 337 views
  12. (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் நிபந்தனைகளற்ற வகையில் நிராகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை மனித உரிமை பேரவைக்கு கிடையாது. ஆகவே உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உபாயங்களை கொண்டு இம்முறை தீர்வு காண்பது அவசியமாகும் என சுட்டிக்காட்டி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐ…

    • 1 reply
    • 573 views
  13. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களுடன் பதில் – ரம்புக்வெல எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரத்துடன் பதிலளிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விஞ்ஞானரீதியான ஆதாரங்களுடன் முழுமையான பதில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஏற்கனவே மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதிலிருந்து இலங்கை பல பிரச்சினைகளை சந்தித்துள்ள…

    • 1 reply
    • 350 views
  14. இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள். எனவே, இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'திறந்த காயங்கள் மற்றும் பெருகி வரும் பேராபத்துக்கள்: கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை' என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித …

    • 1 reply
    • 386 views
  15. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த காணொளியில் போ…

  16. மியான்மரைப் போன்று இலங்கையிலும் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்’-பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை 29 Views மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை, இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விழித்துக்கொள்ளாவிடில் மியான்மரைப் போன்று இலங்கையிலும் விரைவில் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை வ…

  17. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த 31ம் திகதி மதியம் குறித்த மூவரும் கடற்றொழிலுக்குச் சென்தாக இன்று (2) அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களின் உறவினர்களால், மன்னார் பொலிஸ், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படை ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தூண்டில் மூலம் மீன் பிடிக்கப் படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கொண்ணையன் குட…

  18. சிங்களத்தில் முக்கிய இதிகாசமான குருந்தி இதிகாசம் குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டது : மெதகொட அபயதிஸ்ஸ தேரர் சிங்களத்திலுள்ள முக்கிய இதிகாசங்களில் ஒன்றான குருந்தி இதிகாசம், முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பௌத்தபீட விரிவுரையாளர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அபயதிஸ்ஸ தேரர், மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட…

  19. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இச்சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கோ அல்லது சர்வதேச நிறுவனத்திற்கோ வழங்கப்போவதில்லை என தெரிவித்தார். அதற்கமைய நேற்று (01) முற்பகல் அலரி மாளிகையில் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. உள்ளூர் வளங்களை விற்பனை…

  20. ஒரு நாட்டில் சுதந்திரமும் சமத்துவஉரிமையும் மிக முக்கியமானது – ‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பு 27 Views இலங்கையின் சுதந்திர தினத்தை நாட்டு மக்களாகிய நாம் சந்திக்க இருக்கின்றோம். இன்னெருபுறம் யுத்தத்தின் பெயரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நீதி நிவாரணத்திற்கான கோரிக்கைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என ‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் சுதந்திர தின ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வரும் 4ம் திகதி இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்,குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “பல்லினமக்கள் சமூகத்…

  21. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு தொற்று எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், காத்தான்குடி, கல்முனை, மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே, இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் இவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞானச் சுகாதாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் எனவும் கூறினார். இந்த ஐந்து மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையி…

    • 0 replies
    • 296 views
  22. பொத்துவில் தொடங்கி - பொலிகண்டி வரை போராட்டத்துக்கு முதலாவது தடை.! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரியவருகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளாலும் சிவில் சமூகப் பிரதிநிதிகளாலும் குறித்த போராட்டம் முன்னெடுப்பதாகத் தெரிவித்தும் தற்போதைய சமகால தொற்று நோய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் தடை உத்தரவு வழங்கவேண்டும் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்திருக்கின்றார். இதனை அடுத்தே குறித்த தடை உத்தரவினை நீதிமன்றம் வழங்கியிருப்பதாக முதல் கட்டத் த…

  23. Madawala News February 02, 2021 எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசாங்கத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி, இதை ஒரு சுதந்திர நாடாக காட்ட முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. 65 வருடங்களுக்கு பிறகு, கடந்த எமது …

    • 0 replies
    • 388 views
  24. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்…

  25. சைவர்களின் கோரிக்கைக்கு எதிராக பண்டிவிரிச்சான் கிராம கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(1) காலை கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மடு உதவி பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர். மடு பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக கடந்த மாதம் 25 ஆம் திகதி குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராக குறித்த ஊர்வலம் இடம் பெற்றுள்ளது. கடந்த 30 வருடமாக மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கோவில் மோட்டை’ பகுதியில் 27 குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னோக்கி வந்த நிலையில் குறித்த மக்களின் பராமரிப்பில் இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.