Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2019 ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு ! by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/sarath-weerasekara-720x450.jpg ஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுல்…

    • 0 replies
    • 287 views
  2. வடக்கிற்கு 11,080 தடுப்பூசிகள் கிடைத்தன: தடுப்பூசித் திட்டம் நாளை ஆரம்பம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/04/Northern-Province-Health-Services-Director-Dr.Ketheeswaran.jpg வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடுகையில், “வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோத…

    • 0 replies
    • 221 views
  3. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களது குடும்பங்களின் சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்த திட்டம் - அங்கஜன் எச்சரிக்கை.! யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினருக்கு சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றிருந்தது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாக யாழ்.மாநகரசபை உறுப…

    • 2 replies
    • 324 views
  4. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/144096/image.jpg ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்ப…

    • 5 replies
    • 883 views
  5. மனித உரிமை பேரவையின் அறிக்கையை நிராகரித்தது கோட்டாபய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக கோட்டாபய தலைமையிலான ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன. போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட முறையில் உள்ளக விசாரணைகளை நடத்த முடியும் என ராஜபக்ஷ அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பெரும்பகுதியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. …

    • 1 reply
    • 699 views
  6. புனானையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ! 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி By கிருசாயிதன் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (29) காலை 6.30 மணிக்கு புனானைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பேருந்…

  7. முள்ளியவளையில் புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட எறிகணைக் குண்டுகள் ராணுவத்தால் மீட்பு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம் முள்ளியவளை பகுதியில் நடத்திய தேடுதல் ஒன்றில் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாகக் கருதப்படும் பயன்படுத்தப்பட முடியாத நிலையிலிருந்த எறிகணைகளை கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு ராணுவத்தால் மீடகப்பட்ட எறிகணைகளில் 152 மி மீ எறிகணைகள் 36, 122 மி மீ எறிகணைகள் 49 மற்றும் உடபட குறைந்தது 110 பாவிக்கப்படாத எறிகணைகளும், அவற்றுடனான வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பெயரில் இத்தேடுதலில் ஈடுபட்ட ராணுவத்தின் 9 ஆவது இயந்திரவியல்ப் பிரிவே இவற்றைக் கண்டுபிடித்துள்ளதாக ராணுவம் கூறுகிறது. பெருமளவான எறிகணைக் இவ்வாறு கண்ட…

  8. அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலில் இராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்டது இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் 5 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. http://athavannews.com/அஸ்ட்ராஜெ…

  9. “பௌத்த விகாரை”யை தீர்மானத்தில் சேர்க்க அங்கயன் மறுப்பு; பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமளி.! யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட புத்த விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக முன்வைத்துள்ள கோரிக்கையால் தெல்லிப்பழை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காணி ஒன்றில் கட்டப்பட்ட புத்தவிகாரையை தொல்லியல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர…

  10. கொக்கட்டிச் சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வ…

  11. கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் - இனிய பாரதி பாறுக் ஷிஹான் கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயமானது கனிந்து வந்த பழத்தை தட்டி எறிந்தவர்கள் சிலர்.இந்த …

  12. (ஆர்.யசி) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழிற்சங்கங்கள், கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்தே தொடக்க தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகிறனர். இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதி…

  13. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர …

  14. ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியீடு – பதிலை வழங்கியது அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை உத்தியோகப்பூர்வமாக முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் அண்மையில் கசிந்திருந்த நிலையில், தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக…

  15. - நேர்கண்டவர் - ரொபட் அன்டனி - *முதலில் சுகாதார துறையினர், முப்படை, பொலிஸாருக்கு தடுப்பூசி போடப்படும். அதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும். தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இடப்படும். வேறு நோய்கள் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் *தடுப்பூசி போடப்படுகின்றவர்கள் 30 நிமிடங்கள் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகின்றதா என அவதானிக்கப்படுவர். *அது ஒரு சிறிய ஊசி. கையில் மேல் பக்கத்தில் போடப்படும். மிக மிக சிறிய ஊசி. கொஞ்சம் மருந்து அதில் இடப்பட்டிருக்கும். பெரிய வலி எதுவும் இருக்காது. *முதலாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னரும் கைகழுவுதல், சமூ…

  16. நான் மேயராகப் பதவியேற்க உதவிய சுமந்திரனுக்கும் மாவைக்கும் நன்றி.! - மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராக வருவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்குத் தமது நன்றியை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இந்த நன்றியைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். மாநகர சபையின் மேயராக நான் வருவதற்கு 6 கட்சியினர் உதவியுள்ளனர். அதாவது தேர்தலிலே சந்தர்ப்பம் வழங்கி சபையின் உறுப்பினராகுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தர்ப்பம் வழங்கியது. …

    • 3 replies
    • 667 views
  17. இந்தியாவின் தடுப்பூசிகளை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்..! இந்தியா அனுப்பி வைத்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன் பெற்றுக்கொண்டார். இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளித்தார். https://www.virakesari.lk/article/99316

  18. வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழுவினர் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்குச் செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்…

  19. ஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மூன்று கடிதங்களை அனுப்புவதாகவே இணக்கம் காணப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது முதலாவது கடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர். இவ்விடயம் தொடர…

    • 7 replies
    • 982 views
  20. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.! இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவ வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46-ஆவது கூட்டத் தொடரில் இந்தியா அழுத்தம் கொழுக்க வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திரவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.கே. ஸ்டாலின் மற்றும் கனிமொழி அக்கட்சி எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான் 13-ஆவது திருத்தத் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ …

  21. மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குமாம் சீனா - தூதரகம் அறிவிப்பு.! இலங்கைக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான 3 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளே, இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் சீனாவின் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நீண்ட கால நற்புறவைப் பேணி வரும் சீனா, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திலும் இலங்கைக்கு ஒத்துழைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 20 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப…

  22. இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை என்றும் தமிழீழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம். அத்தோடு தனிநாடு கோரும…

  23. கொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்! கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டின் (Lowy Institute) புதிய பகுப்பாய்வில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், வியட்நாம், தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. மேலும் அவுஸ்ரேலியா எட்டாம் இடத்திலும் உள்ளது. லோவி இன்ஸ்டிடியூட் கிட்டத்தட்ட 100 நாடுகளின் கொரோனா வைரஸ் நிலைமைகளை கருத்திற்கொண்டே இந்த தரவினை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நோயாளர்களது எண்களையும் உறுதிப்படுத்தப்பட…

  24. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி January 27, 2021 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்…

    • 30 replies
    • 2.8k views
  25. இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். AFP செய்தி சேவையினை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார். அவ்வறிக்கையில், சும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.