ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
யாழ்.மாநகர முதல்வர் விவகாரம்; மாவைக்கு சுமந்திரன் காட்டமான கடிதம்.! தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ். மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன் இவ்வாறு காட்டமாகத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இன்று காலை யாழ். மாநகர சபை மேயர் தெரிவு நடந்த கையோடு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பிவைத்திருக்க…
-
- 5 replies
- 955 views
-
-
ஆனோல்டை விரும்பியது உறுப்பினர்களே; தன்னிச்சையாக செயற்படவில்லை – சேனாதிராஜா! December 31, 202000 யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் நேற்று ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்து இந்த உண்மைத்தன்மையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். எனவே, சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே ஆனோல்ட்டை பரிந்துரைத்தேன். நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இவ்வாறு இலங்கைத் தமிழர…
-
- 1 reply
- 438 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/
-
- 30 replies
- 2.5k views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி FacebookTwitterMore ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் …
-
- 161 replies
- 11.9k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையை அறிந்துகொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்
-
- 0 replies
- 599 views
-
-
இலங்கை | நீதி அமைச்சர் அலி சப்றி பதவி விலகல் கடிதத்தை நிராகரித்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டங்கள் ஆளும் கட்சியின் நாடகம் - பிரதான எதிர்க்கட்சி கோவிட் தொற்றினால் இறந்த முஸ்லிம் மக்களின் உடல்களைத் தகனம் செய்யும் விடயத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்ததாகவும் ஜனாதிபதி ராஜபக்ச அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பது அவர்களின் மதச் சடங்குகளில் ஒன்றாகவிருந்தும் அதை அனுமதிக்காமல் அவர்களது உடல்களைத் தகனம் செய்யவேண்டுமென அரசாங்கம் சட்டமியற்றியுள்ளது. இதனால் முஸ்லிம் சமூகம் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறது. இவ…
-
- 0 replies
- 347 views
-
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – 8 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது 18 Views மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் மருத்துவ பரிசோதனையில் 18பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகையை தொடர்ந்து இன்று காலை முதல் மட்டக்ளப்பு காந்திபூங்காவில் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பரிசோதனைகளுக்குட்படுத்தப் பட்டனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் கிரிசுதன…
-
- 1 reply
- 324 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில் சுமார் 10 வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து 80 வீதமான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரிய …
-
- 0 replies
- 354 views
-
-
‘மொத்தமாக கொன்று விடுங்கள்’ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! December 30, 202000 காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நல்லூர் நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “இதன்போது “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவ…
-
- 2 replies
- 460 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரே’-பரிசிலிருந்து உதயன் 16 Views தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பரிசிலிருந்து உதயன் என்பவரால் இலக்கு மின்னிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கட்டுரைஇது, இலக்கு வாசகர்களுக்காக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல் வேளைகளில் மட்டும் பேசு பொருளாக பிரதான இடம் பிடிப்பதோடு சரி, மற்றபடி மாறி மாறி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடந்து வருகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்வு என்பது பல வருடங்களை தாண்டி இன்று இரண்டு மூன்று தசாப்ங…
-
- 0 replies
- 427 views
-
-
கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என கூறப்படும் இந்த மருந்தை தம்மிக்க பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அண்மையில் பரிசோதனை முயற்சியாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தி பரிசோதித்து இருந்தார். இந்நிலையிலேயே இன்று இதனை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், 5 ஆயிரம் பேர் இந்த மருந்தை பெற்று சென்றுள்ளனர். குறித்த மருந்தினை பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் சென்று பெற்றதை அவதானிக்க முடிந்தது…
-
- 9 replies
- 1.7k views
-
-
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.! கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக…
-
- 5 replies
- 1.2k views
-
-
திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம் மன்னார் நிருபர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெ…
-
- 8 replies
- 1.4k views
-
-
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நீதி கோரி யாழ்.நகரில் போராட்டம்.! கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தக்கோரி நாடளாவிய ரீதியில் முனைப்புப் பெற்றுவரும் போராட்டத்தின் தொடராக யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அரசே உனது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் சிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.சமூகம் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
சுமந்திரன் கொடுத்தது கூட்டமைப்பின் யோசனை அல்ல; அதனை நாம் பார்க்கவும் இல்லை – ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனீவா குறித்த ஆவணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதல்ல” எனத் தெரிவித்திருக்கும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி, “இந்த ஆவணத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எவையும் பார்வையிடவும் இல்லை. அது குறித்து கலந்துரையாடப்படவும் இல்லை” எனவும் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தினக்குரலுக்கு இன்று கால…
-
- 7 replies
- 1.1k views
-
-
புலிகளின் தமிழீழக் கனவுடன் கூட்டமைப்பு: வடக்கு - கிழக்கு தனிப்பிராந்திய யோசனையைத் தூக்கி வீசுங்கள்.! இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்துடன் கூட்டமைப்பின் யோசனைகளில் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக…
-
- 0 replies
- 468 views
-
-
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது என்ற முடிவில் எந்த சூழ்நிலையிலும் இதுவரை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சடலங்களை-அடக்கம்-செய்வது/
-
- 0 replies
- 282 views
-
-
இந்தியாவில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்கள…
-
- 4 replies
- 898 views
- 1 follower
-
-
போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன் போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவை தொடர்பாக தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை. கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றமு…
-
- 7 replies
- 871 views
-
-
ஒருபோதும் தளர்வடையேன்! சாணக்கியன் சபதம் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடித்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போய் உள்ளதனை ஆவணப்படுத்தி, அதனை கையளிக்கும் வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கையேட்டு நிகழ்வில…
-
- 1 reply
- 539 views
-
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்.! மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப…
-
- 0 replies
- 636 views
-
-
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னமு…
-
- 1 reply
- 814 views
- 1 follower
-
-
பொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது 34 Views பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின் போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற…
-
- 0 replies
- 311 views
-
-
அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.! மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் ம…
-
- 26 replies
- 2k views
-
-
ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் December 29, 2020 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #…
-
- 0 replies
- 575 views
-