ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம் என்றும் அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. …
-
- 1 reply
- 461 views
-
-
யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நல்லூர் பிரதேசசபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார். “யாழ் மாநகரசபை முதல்வருக்கு இ.ஆனல்ட்டை தவிர்ந்த இன்னொருவரையும், நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால், அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்ன…
-
- 4 replies
- 738 views
-
-
20 நாள் குழந்தையின் உடல் தகனம் – வழக்குத் தாக்கல் 59 Views உயிரிழந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் தங்கள் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொட…
-
- 0 replies
- 253 views
-
-
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கீழ் இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். சமூக வலைத்தளங்களினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்குடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகிறார். சமூக வலைத்தள முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,KELIYA RAMBUKWELLA FACEBOOK படக்குறி…
-
- 2 replies
- 497 views
-
-
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'குழந்தைகள் பண்ணை' முறையால், 1980களில் இலங்கையில் தத்து எடுப்பது தற்காலிக தடைக்கு உள்ளானது. (சித்திரிப்புப் படம்) சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர…
-
- 2 replies
- 936 views
-
-
தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு http://static2.tamilmirror.lk/assets/uploads/image_3cce0e60f9.jpg கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்…
-
- 3 replies
- 539 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான பிரதேசங்களாக மாறியுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண நிலப்பரப்புகளாக காணப்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு கண்மூடித்தனமாக இடம்பெற்று வந்துள்ளது. இதனை கண்டித்து அவ்வவ்போது மாவட்டத்தில் போராட்டங்களும் இடம்பெற்றன. இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டத்தை பாதுகாக்கின்றவர்களின் ஒத்துழைப்புடனும், அதிகார மற்றும் அரசியல் தரப்பின் ஆதரவுடனும் சட்டவிரோத மணல் அகழ்வு இன்றும் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத மணல் அகழ…
-
- 1 reply
- 514 views
-
-
(நா.தனுஜா) முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான தீர்மானத்தின் பின்னணியில் பௌத்த தேரர்கள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டில் தமிழர்களுடன் பிரச்சினையொன்றைத் தோற்றுவித்துக்கொண்டதைப் போன்று, மீண்டும் இவ்விவகாரத்தின் ஊடாக பிரச்சினையொன்றைத் தோற்றுவிக்கும் வகையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, முஸ்லிம்களின் உரிமைகளைக் குழிதோண்டிப்புதைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுபலசேனா அமைப்பி…
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஐ.நா. ஆதரவு – பிரதமருடன் பிரதிநிதி பேச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்…
-
- 0 replies
- 449 views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு தொற்று! | NewUthayan
-
- 3 replies
- 985 views
-
-
மதநம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை- அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது- உடல்களை தகனம் செய்யும் விவகாரம் குறித்து ரணில் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 230 views
-
-
பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/02/jaffna-international-airport.jpg பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப்பெற்று ‘ஈழத்து காந்தி’ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் தந்தை செல்வா. 1947ஆம் ஆண்டு …
-
- 5 replies
- 882 views
-
-
இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல முடியும்: பிரவேசிப்பதற்கு மட்டுமே தடை! பிரித்தானியாவில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களுக்கோ பயணிகளுக்கோ இலங்கைக்குள் பிரவேசிக்க இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரித்தானியாவுக்கு-செல்/
-
- 2 replies
- 622 views
-
-
MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.! எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது. கடந்த…
-
- 56 replies
- 4.8k views
-
-
சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – செல்வம் அடைக்கலநாதன் 27 Views “வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப் படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் த…
-
- 1 reply
- 342 views
-
-
அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு “ அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே…
-
- 2 replies
- 445 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் அரசை ஜெனிவாவில் மிரட்டவே முடியாது - அமைச்சர் தினேஷ்.! "கடந்த நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்கள் இரண்டும் செத்துப்போய்விட்டன. அதனைப் புதிய பிரேரணை மூலம் புதுப்பிக்க முடியாது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இவ்வருடம் விலகிவிட்டது. அந்தத் தீர்மானங்களின் கா…
-
- 4 replies
- 803 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) நீதிஅமைச்சர் அலிசப்ரி அடிப்படைவாதத்தை தூண்டும்வகையில் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 546 views
-
-
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா…
-
- 0 replies
- 401 views
-
-
முஸ்லீம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாலைதீவை கோரவில்லை – அமைச்சரவை பேச்சாளர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் எதனையும் அனுப்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் கீழ் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி கையாளப்படுகின்றன என தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பலசுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெ…
-
- 0 replies
- 299 views
-
-
நுவரெலியா மாவட்டம் முழுவதும் சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. பல தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. எனவே அதற்கு உரிய முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து அதனை பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து அங்கு சுற்றுலா தளமாக அதனை மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஜீவ ராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நுவரெலியா அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 234 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான ஷானி அபேசேகர கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/01/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0.jpg குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் த…
-
- 0 replies
- 305 views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் அமெரிக்கா!! அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானியாவுடனும் இணைந்து இதற்கான ஆரம்பக்கட்ட களப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து விலகியதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்…
-
- 1 reply
- 631 views
-
-
சிலரை சுமந்திரன், முட்டாள்கள் ஆக்கலாம்’-க.வி.விக்னேஸ்வரன் கருத்து 103 Views திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரிய…
-
- 2 replies
- 942 views
-
-
சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் – அமெரிக்கா முயற்சி 8 Views எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னர் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகுவதாக அறிவித்த பின்னர், புதிய தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்பட்டிருந்தன. முன்னைய தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 34/1 மற்றும் 40/1 எ…
-
- 2 replies
- 648 views
-