Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சஹ்ரானின் மைத்துனர் கைது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக்கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்ட 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர், குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள அவரது மனைவின் பெற்றோரின் வீட்டுக்கு வருகைதந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகார…

  2. விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு - இரு சிங்களவர்கள் கைது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதான இரு சிங்களவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை வைத்திருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரவிட்ட என்ற சிங்களக் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும், இரகசியமாக காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களது உறவினர்கள் தங்களது சட்டத்தரணி ஊடாக விசாரித்தபோது, இருவருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதுடன், விடுதலைப் புலிகளிடம் பல்வேறு உதவிகளையும் இவர்கள் பெற்றிருப்பது தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இருவரும் கிளிநொச்சி சென்ற…

  3. வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சுன்னாகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன…

  4. அபிவிருத்திகள் குறித்த திட்டங்களை குழப்ப இடமளிக்கப்பட மாட்டாது… மாநகரத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களை குழப்பகின்ற வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாதென மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் உறுப்பினர் வி.மணிவண்ணண் தன்னுடைய அபிவிருத்தி வேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழப்புவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு தமது கட்சி உறுப்பினர்களின் ச…

  5. தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக் காற்றை விரைவில் சுவாசிப்போம்: சோ.தங்கன். "தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக்காற்றை விரைவில் சுவாசிப்போம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிக் கிளையின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை அக்கராயன் பிரதேச பொறுப்பாளர் மாறன் ஏற்றி வைத்தார். வங்கியின் பெயர்ப்பலகையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவிப் பணிப்பாளர் ரவிச்சந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் சீசர் தலைமைய…

  6. வியாழக்கிழமை, 5, மே 2011 (18:21 IST) ராஜபக்சேவை கடலில் தூக்கி எறியும் காலம் வரும்: கி.வீரமணி ஈழத் தமழிர் படுகொலைபற்றி ஐ.நா. குழுவின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் என்ற தலைப்பில் 4.5.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேசுகையில், ஈழத்திலே தமிழர்களுடைய இனப்படுகொலையை ராஜபக்சே மிகக் கொடூரமாக அநீதியின் உச்சத்திற்கே சென்று நடத்தியிருக்கிறார். போர் நடைபெற்றிருக்கிறது. போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளே உண்டு. ஐ.நா. அமைப்பு இலங்கையிலே நடைபெற்ற போர் கொடுமைக்குக் காரணமான சிங்கள ராஜபக்சே போர்க் குற்றவா…

  7. ‘சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, …

  8. யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்! யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து…

  9. எது தமிழீழம்? ரீ.சிவக்குமார் ஈழத்தின் மனிதம் மரணித்து ஆயிற்று இரண்டு வருடங்கள். இன்னமும் விலகாத சோகத்துக்கு இடையில், பாவம் படராத புன்னகையுடன் வளைய வருகிறது அதிகார வர்க்கம். உலகில் கொலைத் தொழிலை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளும் ஒரு தீவுத் தலைவனுக்கு, அண்டை நாட்டு அரசாங்கத்தின் ஆரவார ஆதரவு இருக்கும் வரை, விதியை நோவதைத் தவிர என்ன செய்ய முடியும்? வேதனை வார்த்தைகளில் ஈழப் போராட்டம் குறித்த தனது நினைவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். ''1948-ல் எனக்கு 10 வயது இருக்கும். அப்பா என்னைக் கை பிடித்து தந்தை செல்வாவின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தமிழர்களுக்கான உரிமை களை வலியுறுத்தி தந்தை செல்வா எழுப்பிய உணர்ச்…

  10. யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பதவி விலக வேண்டும்… “யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும். அதனூடாக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை யாப்பை திருத்தியமைத்து, திறமையான நிர்வாகத்தை அமைத்து கல்லூரியை சிறந்த நிலைக்குக் கொண்டுவர உதவி செய்யவேண்டும் என பேராயரிடம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் எதிர்ராஜ் வலியுறுத்தினார். “யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்” என வலியுறுத்தி கல்லூரியின் பழைய மாணவர்க…

  11. சீனா குறித்த கவலை வேண்டாம்! - புதுடில்லியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பீரிஸ் பதில்!! இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சீனா மேற்கொள்வதற்கு இடமளிக்கமாட்டோம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தனது பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17.05.11) மாலை கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெ…

    • 2 replies
    • 1.7k views
  12. நாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இந்த நாட்டில் வாழவே ஆசைப் படுகின்றோம். யுத்தம் முடிவடைந்துள்ள வேளையில் இதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். உண்மையில் இந்நாடு பல்லின பல்மத பல் கலாசார நாடாக இருக்குமானால், ஒவ் வொரு இனத்துக்கும் உரித்தான சமூக சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது அரசியலமைப்பின் ஊடாக வலியுறுத் தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளான தங்களது ஆட்புல எல்லைக்குள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது. நிலம் பறிபோகின்றது. இன்னமும் எமது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் முகாம்களில் வாழ்கின்றனர். இது வேதனையளிப்பதாக உள்ளது என்று முள்ளிவாய்க்க…

  13. சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முதலீட்டுச்சபையின் அங்கீகாரத்துடன், சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் 10 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள், சிறிலங்கா துறைமுகத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன. இந்தக் கப்பல்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 10 வீதத்தை, சிறிலங்கா கடற்றொழில் அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்கா துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த்து. எனினும், சீன மீன்பிடிக் கப்பல்கள், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றாலும், வெறும் கையுடன் திரும்புவதாக அ…

    • 0 replies
    • 297 views
  14. மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889

  15. புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை :கோத்தபாய ராஜபக்ஷ - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 12 ஆயசஉh 2007 09:56 விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக படை நடவடிக்கைகளை கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்களை மறுத்திருக்கும் அவர், கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், படை நடவடிக்கைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும…

    • 6 replies
    • 1.9k views
  16. Published on May 27, 2011-7:41 am · No Comments பிரிவினைவாத குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயார் இல்லை என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றிவிழாவில் பேசுகையில் தெரிவித்தார். சர்வதேசத்தை பயன்படுத்தி இந்த பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாக போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை உள்வீட்டு பிரச்சினை என்றும் அதை நாமே தீர்த்து வைப்போம் வெளியார் தலையிடுவதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் மகிந்த ராசபக்ச தெரிவித்தார். பழையகாலங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்த சில கட்சிகள் முயற்சிப்பதாகவும் அதற்கு ஒருபோதும் இடம…

  17. உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று நண்பகல் முக்கிய பேச்சு நடத்துகிறார் மைத்திரி! [Monday 2015-01-12 07:00] தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் அமோக வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந…

  19. தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் வழங்கியிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்டதாக இருக்கின்றது. இந்நிலையில் தாம் வழங்கிய உத்தரவாதம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவு படுத்தவேண்டியது கட்டயாம். என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் கு…

  20. சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விமானங்களில் 40 வீதமானவை வான்புலிகளின் தாக்குதலையடுத்து பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது. Sri Lanka blackout on Air Force losses [TamilNet, Monday, 26 March 2007, 22:24 GMT] Sri Lanka’s President held an emergency meeting of the country’s security leadership Monday as the government imposed a total blackout on the Tamil Tiger bombing raid on Katunayake, the island’s main airbase in the early hours. Whilst the government says only two helicopter gunships were slightly damaged, airmen coming off duty told reporters in Colombo that several SLAF jet bombers were put out of action by fierce fires which …

  21. யுத்த குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் தமது வரவேற்பினை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திவெளியாகியுள்ளது. சர்வதேச நாடுகள் விதித்து வருகின்ற தடையினை போன்று இந்திய அரசும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதித்து சர்வதேச நாடுகளுடன் இணைந்து கொள்ள வேண்டும் என டொரன்டோவை தளமாக கொண்ட கனேடிய தமிழ் காங்கிரஸின் இலங்கைப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளமையானது, அவர் செயற்பாட்டு பெண் என்பதனை உணர்த்துவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்…

  22. ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த JAN 17, 2015 | 1:18by கார்வண்ணன்in செய்திகள் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா. இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கட்டளை பீடத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட படையினர், கொழும்பில் இரண்டு இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் முதலாவதாகவும், தேர்தல் ஆணையாளரின் செயலகத்…

  23. மக­சின் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்பு ஆரம்­பம்!! அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­ யில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் முன்­னெ­டுத்­துள்ள உணவு ஒறுப்­புப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து மக­சின் சிறைச்­சா­லை ­யி­ லுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் இன்று அடை­யாள உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­னர். அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­ யில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராசா நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ளார். 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மையை கர…

  24. திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு இன்று (24) காலை ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது திருகோணமலை நகர சபையும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் தலைவர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, திருகோணமலையில் 20க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயி…

  25. வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…

    • 11 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.