Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மரணப் பிடியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றுங்கள்-குரலற்றவர்களின் குரல் 51 Views இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிறையில் இருக்கும் கைதிகளுக்கே கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகின்றது. எனவே சிறையில் இருக்கும் கைதிகளை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு இன்று மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், தற்போது கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பாக வெலிக்கடை, போகம்பரை, கொழும்பு விளக்கமறியல் சிறை, பூசா, மகசின், குருவிட்ட போன்ற சிறைச்சாலைகளில் பரவ ஆரம்பித்துள்ளது. …

  2. யாசகம் வழங்கினால் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை 33 Views இலங்கையில் யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார். வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் ப…

  3. மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது? மாவை தலைமையில் 10 கட்சிகள் ஆராய்வு November 18, 2020 சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய 10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினமான 27 ஆம் திகதி காலையிலிருந்து மாலை வரையில் இவ்வாறு குழுக்களாகச் சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. …

  4. கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார். குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே அனுமதிக்கப்பட்டது. இறுதியில் 80 மில்லியன் நிதியே எமக்கு கிடைத்தது. அதில் விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்…

  5. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் சுரங்க அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/138803/DSC_2397_new.jpg அண்மையில் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் சுரங்கமானது முக்கிய பகுதிகளில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொது பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில், ஆளுநர், சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டவர்களை, தரத்தை பொருட்படுத்தாமல் கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்படும் …

  6. 2021 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தை நிதியமைச்சரும் பிரதமருமாகிய மஹிந்த ராஜபக் ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், உள்நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ள முடியாது. பூரண சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான கடப்பாடு குறித்து சகல தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன்ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதாணங்களுக்கான நித…

  7. மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை…

  8. மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம் 38 Views “காலைப் பிடிச்சு விடுங்கோ… அப்பா… காலை பிடிச்சு விடுங்கோ…..” என்றான் வைத்தியசாலை கட்டிலில் குறுகிப் படுத்துக் கிடந்த அந்தச் சிறுவன். அருகில் கதிரையொன்றில் அமர்ந்திருந்தவாறே அந்த சிறுவனின் கால்களை அவனது தந்தை பிடித்து அமத்திக் கொண்டிருந்தார். “நல்லா அழுத்திப் பிடிச்சு விடுங்கோ…” குரலில் தாளாத வலி கலந்த கெஞ்சல் இழையோடியது. அந்த தந்தையின் பிடியில் அழுத்தம் கூடியது. காலைப் பிடித்து விடுவது மகன் விநோதனுக்கு இதமாக இருக்கும். ஆனால் அழுத்திப் பிடித்தால் நோ கூடி விடுமே என்ற எண்ணம் குறுக்கிட்டு அவரை அலைக்கழித்தது. காய வலியின் வேதனையைத் …

  9. அடுத்த நான்கு வருடத்தில் இலங்கையின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்- சம்பிக்க ரணவக்க கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக அடுத்த நான்கு வருடங்களில் இலங்கையின் கடன் 28 டிரில்லியனாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதால் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களிடமிருந்து தரவுகளை மறைக்காமல் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும் என சம்பிக்க ரணவக்க வேண்டுகோ…

  10. நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யாதிருக்க மனு எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மேற்கொள்ளவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட வுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்ப டுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி அந்த நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்யக்கூடாதென மனுவின் ஊடாக கோரப்படவுள்ளது. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரியே இந்த மனுக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளன. போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பே…

  11. மட்டக்களப்பை வெள்ள அனர்த்தத்திலிருந்தும் பாதுகாக்க முன் ஆயத்த நடவடிக்கை! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/11/download-1-3.jpg நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏட்படவிருக்கும் வெள்ள அனர்த்தத்திற்கான முன் ஆயத்தங்களை ஆராய்வதுடன் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கரணாகரன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் டெங்கு நோய் பரவலையும் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் வேளையில் மக்…

  12. பிரதேச சபை உறுப்பினர்களை நீக்க இடைக்கால தடை November 18, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர்கள் என கூறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை நீக்கும் காங்கிரஸின் முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.கஜன் மற்றும் ஜெ.நிதர்சன் ஆகிய இருவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சாட்டி இருவரையும…

  13. மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது எனவும், மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை முன்வைத்த கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில். அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது அரசாங்கத்தின் மோசமான நிலைமைகளை வெ…

  14. மன்னாரில் 30 குளங்கள் புனரமைப்பு - மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார். குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே அனுமதிக்கப்பட்டது. இறுதியில் 80 மில்லியன் நிதிய…

  15. வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

  16. வெளியானது விசேட வர்த்தமானி Daya Dharshini November 18, 2020வெளியானது விசேட வர்த்தமானி2020-11-18T07:49:08+05:30 FacebookTwitterMore துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்த மானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்டிப இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

  17. மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக…

  18. வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது 46 Views வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தவிசாளரால் அனுமதியளிக்கப்பட்டது. விவாதத்தில் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் வேலைகள் உரிய காலத்தில் நிறைவுறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதே…

  19. எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் தமிழர்களை அணுகவில்லை – கலையரசன் by : Vithushagan நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்ன…

  20. ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன் November 16, 2020 ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் ‘தினக்குரல்’ இணையத்துக்கு தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லா…

    • 9 replies
    • 1.7k views
  21. மஞ்சள் தூள் இறக்குமதி செய்ய தடை; இந்திய வர்த்தகர்களுக்கு பல கோடி ரூபா நட்டம் November 16, 2020 இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்திய வர்த்தகர்களுக்குப் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகம் ஈரோடில் அதிகளவில் மஞ்சள் வர்த்தகம் இடம் பெறுகின்ற நிலையில், அங்கிருந்து கடந்த காலங்களில் இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டி ருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளி யிட்டுள்ளது. எனினும் இலங்கையில் தற்போது மஞ்சள்…

  22. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் பிரவேசித்த யானைகள் பயன்தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அதேவேளை வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன. வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் தற்போது பகல் நேரங்களிலும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பயன்தரும் மரங்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. இந் நிலையில் கி…

  23. வடக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின் மீன் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்கும் வகையிலான எந்தவகையான தீர்மானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்குகளை வழங்குவற்காக சுமார் 60 மில்லியன் ரூபாய் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி ஒதுக்கப்பட்டமைக்காக நேற்றைய …

  24. உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்டோருக்கு, உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்…. November 17, 2020 உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16.11.20) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்க…

  25. மாவீரர் வாரத்திற்கு தடைவிதிக்க கூடாது என கோரி மனு… November 17, 2020 பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.