ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் – DR.சத்தியமூர்த்தி by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/11/20201105_142227-720x450.jpg கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அகருத்து தெரிவித்த அவர் “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கீழ் யாழ் கோப்பாயில் கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 899 views
-
-
தனிமைப் படுத்தல் நிலையத்தில் மது போதையில் இருந்த பொலிஸ் உறுப்பினர்கள்! 25 Views கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உறுப்பினர்கள் இருவர் மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை…
-
- 0 replies
- 424 views
-
-
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – மாவை சேனாதிராஜா. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா புதிய வடிவத்திலான தொற்று இரண்டாவது அலையாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருகின்றது. இத்தொற்றானது சமூக பரவலை எட்டிவிட்டது என்றும் கருதப்படுகின்றது. தேசியப் பேரழிவை ஏற்படுத்தப் போகிறதென்றும் எச்சரிக்கப்படுகின்றது. இந்த நோய் தொற்றின் தீவிரம் உலகம் முழுவதும் சமூக, பொருளாதாரப் பாதிப்புக்களையும் அனைத்துத் துறைகளும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் அவற்றுக்கு அப்பால்…
-
- 2 replies
- 557 views
-
-
( எம்.நியூட்டன்) யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக யாழ் வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வட மாகாணத்திலும் இந்த கொரோனாத் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காரணத்தினால் நகரத்திற்கு வரும் பொதுமக்களை இயன்ற அளவு குறைக்குமாறு சகல தரப்பினரும் கேட்டுக்கொள்கிறார்கள். குறிப்பாக பஸ் போக்குவரத்து தற்போது மட்டுப்பட…
-
- 2 replies
- 532 views
-
-
நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் நிகழும் மரணங்கள் தொடர்பில் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அறியமுடிவதாக வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137920/asdsa.jpg இவ்வாறு மரணித்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றமை பி.சி.ஆர். பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு வீதம் அதிகளவில் நேரிடலாமென குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 539 views
-
-
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸாரின் உதவியுடன் அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்துள்ள தொற்றா நோயாளர்களுக்கான மருந்து வகைக…
-
- 0 replies
- 373 views
-
-
கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு மாதகாலமாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் என குறித்த ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், தமது பாரிய படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி கனரக இயந்திரத்திற்கு ஆயிரக்கணக்கான பணங்களை செலவிட்டு கடற்கரையோரங்களில் இழுத்து நிறுத்தி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையு…
-
- 0 replies
- 365 views
-
-
கொரோனா பரவலையடுத்து சந்தை வாய்ப்பை இழந்திருக்கும் யாழ். மீனவர்கள் போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ்.மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் – “குடாக்கடலில் கடற்தொழிலுக்குச் செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கொரோனாத் தொற்றுக் காரணமாகத் தென்பகுதிக்குக் கடலுணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பிடிபடும் கடலுணவுகள் போதிய சந்தை வாய்ப்பின்றித் தேங்கிக் காணப்படுகின்றன. அதனால் உள்ளூர் சந்தைகளில் நண்டு, இறால், கணவாய் போன்றவை கிலோ 400 ரூபாக…
-
- 0 replies
- 524 views
-
-
மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து 23 Views இடைநடுவில் கைவிடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் கைவிடப்பட்ட விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை பூர்த்தி செய்வதற்கான தேசிய கொள்கை திட்டமிடல் அதிகாரசபை, திரைசேரி மற்றும் அமைச்சரவை என்பவற்றின் அனுமதிகள் பெறப்பட்டு தற்போது மீள கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 465 views
-
-
யாழ். மாவட்டத்திலும் 5000 ரூபா நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு – டக்ளஸ் கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என எனக்கு தெரியப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் நேற்றைய பாராளுமன்ற அமர்…
-
- 0 replies
- 372 views
-
-
கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - வடமாகாண ஆளுநர் பணிப்பு அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (04-11-2020) காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஆளுநர் நாம் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல…
-
- 0 replies
- 337 views
-
-
கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 30 Views இலங்கையில் மூன்றாவது அலையாக கோவிட்-19 தொற்று தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. 24 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இருந்து நாடு மீண்டு வருமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சின் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதனுடன் ‘இலக்கு’ மேற்கொண்ட நேர்காணலில் அவர் கூறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம். 2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த கோவிட்-19 தொற்று உலகம் முழு…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழ வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும். இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR பரிசோதனைக்கமைய எதிர்வரும…
-
- 2 replies
- 477 views
-
-
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…
-
- 7 replies
- 1.2k views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவினை சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்குமாறு கோரிக்கை November 4, 2020 இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பியுள்ளார் என அவரது ஊடகப்பிாவு தொிவித்துள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தினை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு (ஜூலை 17 2021) முன்னதாக தெரிவிக்கும்படியும் தேவைப்பட்டால் நாடளுமன்ற விவாதமொன்றையும் இதுதொடர்பில் ஒழுங்கு செய்யுமாறும் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கையினை மு…
-
- 0 replies
- 473 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) என் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய். நாட்டில் நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் நான் விடுதலையாகுவேன் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைருமாள ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எந்த ஒரு குற்றமும் செய்யாமல் புலம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க சென்றார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து அதற்கு பொறு…
-
- 7 replies
- 820 views
- 1 follower
-
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம் கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதா…
-
- 18 replies
- 2.1k views
-
-
கொரோனா தொற்று அச்சம் : யாழில் மூடப்பட்டிருந்த கடைகள் இன்று திறப்பு யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து சென்று கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. யாழ் மாநக…
-
- 0 replies
- 417 views
-
-
மாவையை செயலாளராக அங்கீகரித்தமை கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி : செல்வம் எம்.பி . (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜாவை நியமிப்பதற்கு ரெலோ அங்கீகரித்தமையானது கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி என்று அதன் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய விபரங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன. ஆகவே அதுபற்றிய கவனத்தினை பங்காளிக்கட்சியகள் என்ற அடிப்படையில் தமிழ…
-
- 0 replies
- 699 views
-
-
கூட்டு முயற்சிக்கு நாம் உடன்படவில்லை: சுமந்திரன் அணி மாவையிடம் நேரில் ஒப்பாரி! November 3, 2020 தமிழ் தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்களில் தமக்கு உடன்பாடில்லை, அவை தமக்கு தெரியாமல் நடக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது. எம்.ஏ.சுமந்திரனும், அவர் தரப்பு எம்.பிக்களான சி.சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் நேற்று, மாவை சேனாதிராசாவிடம் நேரில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நேற்று (2) நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தனர். தமிழ் அரசியலில் அண்மையில் சடுதியான மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற…
-
- 6 replies
- 1.3k views
-
-
மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்! இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் …
-
- 8 replies
- 821 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,…
-
- 1 reply
- 502 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை சபையில் முன்வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கவிதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நா…
-
- 0 replies
- 579 views
-
-
பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநி தியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில், பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பரிந் துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீ கரித்துள்ளார் என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப் படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்…
-
- 2 replies
- 676 views
-
-
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (02.11.2020) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த தொழிற்சாலையில் கொரோனா தொற்று நீக்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் ஊடாக ஐந்து மணித்தியாலங்களில் சுமார் 400 கிலோ கருவாடுகள் வரை உற்பத்தி செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 607 views
-