நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தயிர் உருளைகிழங்கு தேவையான பொருட்கள்: சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 சற்று புளித்த தயிர் – 1/2 கப் இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள். * வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். * எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். * பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். * பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 ந…
-
- 0 replies
- 879 views
-
-
யாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், நான் கடந்த இரு வருடங்களாக சமையல் வலைப்பூ ஒன்றை எழுதி வருவது நீங்கள் அறிந்த விடயம். வலைப்பூ உலகில் என்னை போல் பலரும் எழுதி வருகின்றனர். எங்கள் யாழை எடுத்தால் குளக்காட்டான் அண்ணாவும் சமையல் குறிப்புகளை எழுதி வருகின்றார். தமிழ்வலைப்பூக்களில் பல நல்ல சமையல் பதிவுகள் எழுதப்படுகின்றன. இருப்பினும் பலருக்கு பலரை தெரியவில்லை. கருத்தாடல்கள் நடப்பது குறைவாக உள்ளது. இந்த குறையை பற்றி என்னுடைய சமையல்கட்டில் விவாதித்ததின் பலனாக இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றோம். இது ஒரு திரட்டியாகவும், சமையல்கட்டுக்களை இணைக்கும் பாலமாகவும் இருந்து தமிழ் சமையலை வளர்க்கும் என நம்புகின்றோம். நம்மண்ணின் சமையல்குறிப்புகள் அப்படியே மறைந்துவிடாமல் இணையத்தின…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 781 views
-
-
-
சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி - 1 கப், சிக்கன் துண்டுகள் - 200 கிராம், குடைமிளகாய் - 1, கேரட் - 1, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, அஜினோமோட்டோ, உப்பு - 1 சிட்டிகை, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெங்காயத்தாள் - 5. எப்படிச் செய்வது? பாஸ்மதி அரிசியை முக்கால் பதத்திற்கு வேகவைத்து வடித்து ஆறவிடவும். சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தாளின் வெள்ளை பகுதியை நறுக்கி போட்டு வதக்கி, நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகா…
-
- 0 replies
- 619 views
-
-
குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும். இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும். இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ…
-
- 0 replies
- 978 views
-
-
அவல் தேங்காய் சாதம் Posted By: ShanthiniPosted date: December 23, 2015in: தேவையான பொருட்கள் அவல் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) வேர்க்கடலைப் பருப்பு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – சிறிது செய்முறை முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்த…
-
- 1 reply
- 798 views
-
-
வெஜ் குருமா சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி. இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காய்கறிகள் - 1 1/4 கப் (நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 …
-
- 2 replies
- 1k views
-
-
காளான் சிக்கன் தொக்கு தேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ குடை மிளகாய் – 150 கிராம் காளான் – 100 கிராம் சாம்பார் வெங்காயம் – 150 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் இடித்தது – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – ஒரு குழிக்கரண்டி இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பற்கள் செய்முறை * சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். * பின் நறுக்கிய குடைமிளகாய், காளான், சிக்கன் இவற்ற…
-
- 0 replies
- 992 views
-
-
மட்டன் மிளகு கிரேவி தேவையான பொருட்கள் : மட்டன் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி சோம்பு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - பாதி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி கல் உப்பு - சுவைக்கு தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி செய்முறை : * வெங்காயம், தக்காளியை …
-
- 2 replies
- 1.2k views
-
-
தூங்கா நகரம் ஸ்பெசல் :முட்டைகறி தோசை; ஜிகர்தண்டா; நண்டு ஆம்ப்ளேட் ; அல்வா; அயிரை மீன் குழம்பு.. நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : திரு ராகேஸ் நல்லதான் புரொகரம நடத்திறாரு. ஆனால் சில இடங்கள் தொழில் ரகசியங்களை சொல்ல முடியாது என்று பல்ப்பும் வாங்கி இருக்காரு. அடிப்படையில் அயிரை மீன் குழம்புக்கு பேமஸ் மதுரை தல்லா குளம் சந்திரன் மெஸ்!! அங்கட பணி செய்கிற ஊழியரின்ட மூலமாக தகவல் பெற்று செய்வது போலகிடக்கு.. எது எப்படி இருந்தாலும் நம் பணி நிறைவேறட்டும் .!! .!!
-
- 1 reply
- 1.1k views
-
-
பொறுமைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் . அதிகமாச்சத்து உடலுக்கு தீங்கு
-
- 0 replies
- 785 views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 500 கிராம் * நல்லெண்ணெய் - 200 மி.லி * பல்லாரி வெங்காயம் - 600 கிராம் * சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி * மிளகாய் - 25 கிராம் * உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்டவும். 2.கடலை மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றுடன் வெட்டி வைத்திருக்கும் பல்லாரி வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து பிசைந்து வைத்த மாவை உதிர்த்துப் போடவும். 4.நன்றாக சிவந்த பின்பு எடுக்கவும். http://www.muthukamalam.com/muthukamalam_sa…
-
- 1 reply
- 2.2k views
-
-
விவசாயத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன நஞ்சுகளால், விளைபொருள்கள் விஷமாகிக் கிடக்கின்றன. இதனால் மனிதர்கள் நடமாடும் நோய் தொழிற்சாலைகளாக மாறியிருக்கிறார்கள். விதவிதமான நோய்கள், வீதிக்கு வீதி மருத்துவமனைகள் என மருந்து, மாத்திரைகளை உண்டே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இப்படி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, சில நாள்களில் மருந்தே பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆக, நோய்க்கு உண்ணும் மருந்தும் விஷமாகும் காலகட்டத்தில் மனித இனம் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது பலரும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருத்துவ முறைகளில் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இயற்கையாக காட்டில் மலரும் பூக்களிலிருந்து தேனீக…
-
- 0 replies
- 588 views
-
-
தேவையானவை: மீன்_1 kg புளி_சிறு எலுமிச்சை அளவு... சின்ன வெங்காயம்_7 தக்காளி_பாதி பூண்டு_பாதி வறுத்து அரைக்க: கொத்துமல்லி விதை_2 கைப்பிடி காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்) மிளகு_15 சீரகம்_1/2 டீஸ்பூன் மஞ்சள்_சிறு துண்டு வெந்தயம்_சிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
காலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். இங்கு அந்த சிம்பிளான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: தக்காளி - 3 இஞ்சி - 1 இன்ச் மிளகு - 1/2 டீஸ்பூன் கிராம்பு - 2 வரமிளகாய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்…
-
- 0 replies
- 899 views
-
-
சாமைக் காரப் புட்டு (தினம் ஒரு சிறுதானியம்-13) சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது. பலன்கள் சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும். சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு …
-
- 0 replies
- 778 views
-
-
இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி இராசவள்ளிக் கிழங்கு - 1 தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப் சீனி - 1 - 11/2 கப் உப்பு - 1 சிட்டிகை இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல…
-
- 25 replies
- 11.1k views
-
-
மீன் வடை அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு எப்படி செய்வது? மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்............. https://www.facebook.com/%E0%AE%A4%E0%AE…
-
- 1 reply
- 666 views
-
-
எலுமிச்சை சாதம் பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி செ.மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 கடலை பருப்பு - 1 மே.கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 1 நெட்டு உப்பு - தேவைக்கேற்ப வறுத்த கச்சான் - 1மே .கரண்டி எலுமிச்சம்பழம் - பாதி செய்முறை:- * பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும். * அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும். * எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். * கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
அதிசய உணவுகள் - 20: 'ஸ்டாம்பிட்' உணவு விழா! "வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பை நல்ல உணவு வெளிப்படுத்திவிடும்" - அலன் டி.உல்பெல்ட் உலக பாரம்பரிய களமாகப் போற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் ராக்கி மலைத் தொடர்களைப் பார்த்து மகிழ கனடா நாட்டுக்குப் பயணபட்டிருந்தோம். பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்டா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத் தொடர்களின் அழகை வருணிப்பதற்கு வார்த்தைகள் போதாது. வியக்கத்தகு வனப் பகுதிகள், பல்வேறு வன விலங்குகள், சுற்றியிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் தெள்ளத் தெளிந்த தண்ணீரைக் கொண்ட அல்பைன் ஏரிகள் என்று கண்ட கண்கள் உள்வாங்கிய காட்சிகளே அவற்றின் அழகுக…
-
- 0 replies
- 771 views
-
-
கடல் உணவுகள் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும். அதிலும் கடல் உணவுகளுக்கு பிரியர்கள் அதிகம். குறிப்பாக நண்டு பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய நண்டை எப்போது பார்த்தாலும், வறுவல் செய்து சாப்பிட்டு அழுத்துப் போயிருந்தால், பெங்காலி ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிடலாம். ஏனெனில் பெங்காலி ஸ்டைல் உணவுகள் அனைத்தும் மிகவும் ருசியுடன் இருக்கும். எனவே பெங்காலி ஸ்டைலில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட, இது ஒரு சூப்பர் டிஷ். சரி, அந்த பெங்காலி ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: நண்டு - 2 வெங்காய பேஸ்ட் -…
-
- 0 replies
- 730 views
-
-
செ.தே.பொருட்கள் :- கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு அவித்த வெள்ளை மா – 1 சுண்டு அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு வெந்தயம் – 1 தே. கரண்டி சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி மிளகு – 1/2 தே. கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி தாளிப்பதற்கு :- சின்ன வெங்காயம் – 8 (வெட்டி) செத்தல் மிளகாய் – 3 கடுகு – 1/2 தே. கரண்டி பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி கறிவேப்பிலை – 1 நெட்டு செய்முறை :- * உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். * சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். * உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். * அரைத்த மா…
-
- 44 replies
- 4.7k views
-
-
சூப் செய்ய தேவையானவை இறைச்சி - கோழி சிக்கன் சீசனிங் சிக்கன் சூப் கியூப் மரவள்ளி கிழங்;கு உருளைக்கிழங்கு கரட் போஞ்சி தக்காளிப்பழம் சோளம் மல்லி இலை உப்பு செய்முறை:- இறைச்சி சிக்கன் சீசனிங்கில் பிரட்டி 30 - 1 மணித்தியாலங்களுக்கு ஊறவிடவும் மரவள்ளி கிழங்கை வெட்டி துண்டுகளாக தண்ணீர்விட்டு பாத்திரத்தில் அவியவிடவும் ஓரளவு அரை வேக்காட்டில் சோளம், கரட், உருளைக்கிழங்கையும் போட்டு அவியவிடவும். சொற்ப வேளையில் போஞ்சியையும் போட்டு அவியவிடவும். இறைச்சியை வேறு பாத்திரததில் எண்ணெய் விட்டு நன்கு பிரட்டி பதப்படுத்தி மரக்கறிகள் அவியும் பாத்திரத்தில் போட்டு மூடி விடவும், பின்னர் உப்பு சிறிதளவு, சிக்கன் கியூப் சிறிதளவு, மல்லி இலை சிறுதுண்டு வெட்டிய தக்காள…
-
- 0 replies
- 2.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம கேரளத்துல மிகவும் பிரபலமான நூல் பரோட்டா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதோட அதுக்கு ஏத்த ஒரு ஆட்டிறைச்சி குழம்பும் சேர்த்து செய்வம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்து உங்க பிள்ளைகளுக்கு குடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க , அடிக்கடி இல்ல எப்பயாச்சும் இருந்துட்டு செய்து குடுங்கோ.
-
- 0 replies
- 380 views
-