நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கத்தரிக்காய் டிக்கா தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 4 எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் நெல்லிக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் கரம் மசால– - 1/2 டீஸ்பூன் வெங்காய - 1 உப்பு தேவையான அளவு செய்முறை கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மே…
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், நான் கடந்த இரு வருடங்களாக சமையல் வலைப்பூ ஒன்றை எழுதி வருவது நீங்கள் அறிந்த விடயம். வலைப்பூ உலகில் என்னை போல் பலரும் எழுதி வருகின்றனர். எங்கள் யாழை எடுத்தால் குளக்காட்டான் அண்ணாவும் சமையல் குறிப்புகளை எழுதி வருகின்றார். தமிழ்வலைப்பூக்களில் பல நல்ல சமையல் பதிவுகள் எழுதப்படுகின்றன. இருப்பினும் பலருக்கு பலரை தெரியவில்லை. கருத்தாடல்கள் நடப்பது குறைவாக உள்ளது. இந்த குறையை பற்றி என்னுடைய சமையல்கட்டில் விவாதித்ததின் பலனாக இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றோம். இது ஒரு திரட்டியாகவும், சமையல்கட்டுக்களை இணைக்கும் பாலமாகவும் இருந்து தமிழ் சமையலை வளர்க்கும் என நம்புகின்றோம். நம்மண்ணின் சமையல்குறிப்புகள் அப்படியே மறைந்துவிடாமல் இணையத்தின…
-
- 0 replies
- 2.1k views
-
-
செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பட்டை - 2 பூண்டு - ஒன்று துவரம் பருப்பு - ஒரு கப் நறுக்கிய பீன்ஸ் - கால் கப் அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி நறுக்கிய தக்காளி - கால் கப் சோம்பு - ஒரு தேக்கரண்டி வெந்தயம் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித் தழை - சிறிதளவு செய்முறை நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து உப்பு போட்டு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல…
-
- 0 replies
- 2.1k views
-
-
வேப்பம் பூ ரசம் தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சங்காய் அளவு உப்பு -தேவைக்கேற்ப மிளகாய்-8 ( கிள்ளி வைத்துக் கொள்ளவும் ) மஞ்சள் பொடி-2 சிட்டிகை பெருங்காயம்-தேவையான அளவு நெய்-1 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் செய்முறை வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், வேப்பம்பூ முதலியவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு, புளியை நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வறுத்த பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சுண்ட ஆரம்பித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவி இறக்கவும். http://tamil.webdunia.com/miscellaneous/cookery/ve…
-
- 6 replies
- 2.1k views
-
-
திருமண பந்தி சாப்பாடு - அன்றும் இன்றும்.! குமரி மாவட்டத்திற்கு என்றே சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள், காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாக கண்டறியப்பட்டும், கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட ஒரு திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப் பந்தல் என்னும் சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தை ஏற்பாடு செய்யும் பெண் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார். பந்திமுறைகள் அறிந்தவரும் நிர்வாக தோரணை க…
-
- 1 reply
- 2.1k views
-
-
நண்டு தொக்கு மசாலா விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், நன்கு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றையும் ருசித்துப் பாருங்கள். எனவே இந்த வாரம் நீங்கள் நண்டு தொக்கு மசாலாவை செய்து சுவைத்து மகிழுங்கள். இங்கு நண்டு தொக்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நண்டு - 5-6 (பெரியது) வெங்காயம் - 1 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது …
-
- 0 replies
- 2.1k views
-
-
சுட்டி சுட்ட சமையல் இலக்கம் 2 பசி இல்லாதவர்களுக்கும், உடல் நலமில்லாதவர்களுக்கும் பொரித்த குழம்பு ஒரு அருமையான உணவு. குறிப்பாக பிள்ளை பெற்ற தாய்மார்களின் உனவில் பொரித்த குழம்பு தவறது இடம்பெறும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இதை அடிக்கடி சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது. தேங்காய்ப் பால் பொரித்த குழம்பு தேவையான பொருட்கள்: பிஞ்சு புடலங்காய் - 1 பயத்தம் பருப்பு - 150 கிராம் மிளகு - 1 கரண்டி உப்பு - தேவியான அளவு தேங்காய்- 1 கைல் நெய் - 2 கரண்டி உழுத்தம் பருப்பு - 1 கரண்டுஇ சீரகம் - அரைக் கரண்டி செய்முறை: புடலங்காயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகை நைசாக தூளாக்கி வைத்துக் கொள்ளவேண்டும். ப.பருப்பை நன்றக தண்ணீர்விட்டு வேக வைத்துக் கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் புளி - நெல்லிக்காய் அளவு மிளகாய் வற்றல் - 6 வெல்லம் - 10 கிராம் உருளைக்கிழங்கு - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தனியா - ஒரு தேக்கரண்டி சீரகம் - அரைத் தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி புதினா - சிறிது எண்ணெய் - 250 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக…
-
- 7 replies
- 2.1k views
-
-
நாட்டுக் கோழி குழம்பு தேவையான பொருட்கள் : நாட்டு கோழி – 1 கிலோ சிறிய வெங்காயம் – 250 கிராம் தேங்காய் – 1 மூடி தக்காளி – 250 கிராம் யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி பெ.சீரகம் – 1 கரண்டி சீரகத்தூள்- 2 கரண்டி கடுகு – 1/2 கரண்டி பெ.சீரகத்தூள் – 1 கரண்டி ஏலக்காய் – 2மஞ்சள்தூள்- 1/2 கரண்டிபட்டை,கிராம்பு – 2கறிவேப்பிலை-1 கொத்துஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 250 கிராம் செய்முறை தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
சிம்பிளான... கோவைக்காய் ப்ரை பலருக்கும் கோவைக்காய் பிடிக்காது. இதற்கு காரணம் அதனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பது தான். ஆனால் உண்மையில் கோவைக்காய் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒருமுறை சமைத்து சாப்பிட்டால், அடிக்கடி சமைத்து சாப்பிடத் தோன்றும். அதிலும் கோவைக்காயை சிம்பிளாக ப்ரை செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இந்த கோவைக்காய் ப்ரை, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த கோவைக்காய் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோவைக்காய் - 250 கிராம் சீரகம் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1/2 டேபிள…
-
- 2 replies
- 2.1k views
-
-
ƒùÅú¢ ¦¿öÂôÀõ §¾¨ÅÂ¡É ¦À¡Õû¸û ƒùÅ⺢--100 ¸¢Ã¡õ §¾í¸¡ö ¦ÀâÂÐ--1 ¦¿ö--400 ¸¢Ã¡õ «Ã¢º¢ Á¡×--100 ¸¢Ã¡õ Á¢ÇÌ, º£Ã¸ô¦À¡Ê-- 2 §Á¨ºì¸ÃñÊ ¾Â¢÷--100 ¸¢Ã¡õ ¸È¢§ÅôÀ¢¨Ä-- 1 ¬÷ìÌ ¯ôÒ--§¾¨ÅÂ¡É «Ç× ¦ÀÕí¸¡Âõ--º¢È¢¾Ç× ¦ºöÓ¨È ´Õ §¾í¸¡¨Â ¯¨¼òÐò ÐÕÅ¢ì ¦¸¡ûÇ×õ. º¢È¢Ð ¾ñ½£÷ Å¢ðÎ Á¢ì…¢Â¢ø §À¡ðÎ «¨ÃòÐì ¦¸ðÊ¡¸ô À¡ø ±ÎòÐ, ¦ÁøÄ¢Â н¢Â¡ø ÅʸðÊ ±ÎòÐì ¦¸¡ûÇ×õ. ƒùÅ⺢¨Â ¦¿ö Å¢ðÎ, ÅÚòÐ §¾í¸¡öô À¡Ä¢ø §À¡ðÎ °È ¨Åì¸×õ. ƒùÅ⺢ ¿ýÈ¡¸ °È¢ÂÐõ Á¢ì…¢Â¢ø §À¡ðΠŢؾ¡¸ «¨ÃòÐì ¦¸¡ûÇ×õ. «Ã¢º¢ Á¡¨ÅÔõ, ¯ôÒ, Á¢ÇÌ º£Ã¸òàû, ¾Â¢÷, ¸È¢§ÅôÀ¢¨Ä ±øÄ¡Åü¨ÈÔõ ƒùÅ⺢ Á¡Å¢ø §À¡ðÎ, þðÄ¢ Á¡¨Åô §À¡ø ¸¨ÃòÐì ¦¸¡ñÎ, º¢È¢Ð ¦ÀÕí¸¡Âò¨¾Ôõ «¾¢ø §º÷òÐì ¸Ä츢 ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ. Å…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிவபெருமானே விரும்பி சாப்பிட்டுறாரு என்று சொல்கிறார்கள்.. அதாவது கத்திரிக்காய் கொச்சு இதான் கோயிலில் சிவபெருமானுக்கு படைக்கபடுத்தாம் ... கடவுள் ஏத்துக்கிட்டாறா...யாம் அறியோம் பரபரமே... ங்கொய்யால..! நாம சாப்பிடுவம் !!
-
- 4 replies
- 2.1k views
-
-
சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…
-
- 17 replies
- 2.1k views
-
-
மலாய் பேடா ----------------- காளான் - 2 கப் தேங்காய் துருவல் - 1 கப் வெங்காயம் - 2 மிளகாய் - 5 மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு. செய்முறை --------------- முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக க…
-
- 2 replies
- 2.1k views
-
-
கிச்சடி தேவையான பொருட்கள்: பொன்னி அரிசி 3 கப் . மைசூர் பருப்பு 1 கப் . தக்காளிப் பழம் 3 அல்லது 4 . செத்தல் மிளகாய் 8 அல்லது 9 . உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு . கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு . மிளகாய்தூள் 1 1/2 கறண்டி . மஞ்சள் சிறிதளவு . செய்முறை: பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 …
-
- 11 replies
- 2.1k views
-
-
வெஜ் கேசடீயா - மெக்சிகன் முறை (Veg quesadilla - Mexican Style) இது ஒரு மெக்சிகன் உணவு. தேவையானப் பொருட்கள் வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla) ஃபுரோஸன் சோளம் - 1/4 கப் கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் உள்ளி- 3 பல்லு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு எலுமிச்சை - பாதி சீஸ் கலவை - 1 கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்) ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப் எண்ணெய் செய்முறை கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும். வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும். ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்த…
-
- 1 reply
- 2.1k views
-
-
கத்தரிக்காய் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 200 கிராம் கத்தரிக்காய் - கால் கிலோ மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன் லவங்கம் - 4 நெய் - 3 டீஸ்பூன் பட்டை - சிறு துண்டு ஏலக்காய் - 3 பிரியாணி இலை - 1 வெங்காயம் - 1 தக்காளி - 2 தயிர் - 1 கரண்டி நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கத்தரிக்காயில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் குழைத்துப் பூசி அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதம் வேகவிட்டு, வடித்துக் கொள்ளவும். குக்கரில் நெய்ய…
-
- 2 replies
- 2.1k views
-
-
சுண்டலை நம்பி செய்தது.....யாருக்கு வேணும் என்று சொல்லுங்க...அனுப்பிவிடலாம்
-
- 6 replies
- 2.1k views
-
-
பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…
-
- 5 replies
- 2.1k views
-
-
எங்க வீட்டு மாமரத்திற்கு ஒரு விவஸ்தையே இல்லைங்க. பின்ன, கொஞ்சம் கொஞ்சமா காய்த்தால்…அளவோடு சாப்பிடலாம். ஆனால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் பழம் வந்தால் அதை என்ன தான் செய்வது? மாம்பழ ரைஸ், மாம்பழ குழம்பு, மாங்காய் சொதி, மாம்பழ அல்வா, மாம்பழ ஜூஸ் என அனைத்துவிதமான போர் யுக்திகளையும் கையாண்டாச்சு. அதில ஒன்று தான் இது: உடனடி மாம்பழ கூழ் தேவையாவனை: மாம்பழம் 1 தயிர் 1 மே.க சீனி 1 மே.க ஐஸ்கட்டிகள் 4 நீர் ¼ கப் செய்முறை: 1.மாம்பழத்தை தோல் சீவி,துண்டுகளாக்கி கொள்ளுங்கள். 2.அனைத்தையும் உங்க மிக்ஸில போடு 1 நிமிடத்துக்கு அடித்து எடுங்கள். 3.ஒரு குவளையில் விட்டு குடியுங்கள். - http://thooyaskitchen.blogspot.com
-
- 3 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…
-
- 3 replies
- 2.1k views
-
-
புதினா வடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறம…
-
- 11 replies
- 2k views
-
-
‘பன்னீர் கலந்து மிக்சர் செய்வது எப்படி?’- செஃப் வெங்கடேஷ் பட் ஜல்லிக்கட்டு பரபபரப்புக்கு நடுவில் பேசப்படும் ஹாட் ரெசிப்பி மிக்சர். மிக்சர் சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது எப்படி தான் தயாராகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோமா தோழமைகளே! ‘’கடலை மாவுடன் மற்ற மசாலாப் பொருட்கள் சேராமல் மிக்சர் இல்லை. அப்படிதான் ஜல்லிக்கட்டும். மாணவர்களின் எழுச்சி, வேகம், சக்தி... இதெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் எழுச்சியாக மாறி இருக்கு. இந்த நேரத்துல வெறுமனே மிக்சர் சாப்பிடாம, கேள்விகளை எழுப்பும் அந்த குறியீட்டு உணவு எப்படி தயாராகுதுனு பாப்போம்’’ என சரசரவென மிக்சர் செய்முறையை தருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். இதெல்லாம் தேவைங்க! கடலை மாவு - 500 கிராம் …
-
- 1 reply
- 2k views
-
-
திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…
-
- 3 replies
- 2k views
-
-
அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா? சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! நேற்று கடையில் அதலைக்காயைக் கண்டதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்! கெட்டிப் பருப்புச் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து உருட்டி அதன் நடுவில் லட்டுக்கு நடுவில் முந்திரிப்பருப்பு போல பொரித்த அதலைக்காயை கையோடு அதக்கி எடுத்து உண்டிருந்தால் தானே தெரியக்கூடும் அதன் அருமை. பாகற்காய் கசப்புத்தான், காஃபீ கூட கசப்புத்தான் தான் ஆனால் சாப்பிடாமலோ அருந்தாமலோ இ…
-
- 0 replies
- 2k views
-