நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
என்னென்ன தேவை? எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 முட்டை - 4 உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி அரைக்க: தேங்காய் - 1/2 கப் காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 அல்லது 2 வெங்காயம் - 2 பூண்டு - 1 சீரகம் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் முதலியவற்றை எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது முட்டைகளை உடைத்…
-
- 0 replies
- 763 views
-
-
அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ் மட்டன் புலாவ் பிரியாணியில் இருந்து மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்கள். மட்டன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ்பழம் : கால் கப் …
-
- 0 replies
- 611 views
-
-
நோய்க்கொரு மருந்து மருந்திற்கொரு விருந்து: காளான் சாதம். [Thursday, 2011-08-11 23:24:55] தேவையான பொருட்கள்: உதிராக வடித்த சாதம்-1 கப் பெரிய வெங்காயம்-2 வெங்காய தாள்- சிறிதளவு இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்-5 மிளகுதூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 2 ஸ்பூன் காளான் - 250 கிராம் செய்முறை: * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை சேர்த்து வதக்கவும். * காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். * பின் அதனுடன் மிளகு…
-
- 12 replies
- 1.1k views
-
-
காரசாரமான இறால் மசாலா விடுமுறை நாட்களில் வீட்டில் அசைவ உணவை நன்கு வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் உங்களுக்கு இறால் மிகவும் விருப்பம் என்றால் அதனை நன்கு காரசாரமாக மசாலா செய்து சாப்பிடுங்கள். இங்கு மிகவும் சிம்பிளான மற்றும் காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் …
-
- 2 replies
- 2k views
-
-
[size=4]கடல் உணவுகளில் அதிகமான அளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கடல் உணவுகளை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். அதிலும் இறால் மிகவும் அருமையாக இருக்கும். இதுவரை மஞ்சூரியனை கடைகளில் தான் சாப்பிட்டிருப்போம். அதுவும் கோபி மஞ்சூரியன் தான் அனைவருக்குமே தெரியும். ஆனால் இறால் மஞ்சூரியனை கேள்விப்பட்டதுண்டா? இப்போது அந்த இறால் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...[/size] [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு - 2 பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 2 பல் (நறுக்கியது) தக்காளி கெட்சப் - 1…
-
- 0 replies
- 850 views
-
-
-
நவதானிய தோசை தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு. செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய்…
-
- 8 replies
- 3.5k views
-
-
Posted by சோபிதா on 01/06/2011 in புதினங்கள் | 0 Comment உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில் அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே. நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி மருத்துவர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: கோதுமை மா 03 கப் அரிசிமா 01 கப் வறுத்த உழுத்தம்மா 01 கப் சீனி 03 கப் செய்முறை: கோதுமை மா, அரிசிமா, உழுத்தம்மா இவற்றை 03:01:01 விகிதத்தில் ஒன்று சேர்த்து (இந்த விகிதத்தில் தான் இன்று கலந்தோம்) தேவையான அளவு சுடுநீர் விட்டு, சிறிதளவு உப்பும் விட்டு இடியப்பம் பிழிவதற்கு குழைப்பது போல் மாவை குழைக்க வேண்டும். பின் முறுக்கு உரலில், விருப்பமான வடிவை உடைய அச்சை போட்டு பின் பிழிய வேண்டும். இதை பிழிந்து மேசை ஒன்றின் மீது இட்டபின் (மேசை சுத்தம் இல்லையென்றால் பேப்பர் விரிக்கலாம்) கத்தியால் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு கொதிக்கும் எண்ணைச் சட்டியில் இறக்கி எடுக்க வேண்டும். பிழிந்த மாவை வெட்டும் போது பொறுமையாக அழகாக வெட்ட வேண்…
-
- 20 replies
- 16.2k views
-
-
வத்தக் குழம்பு செய்வது எப்படி...? தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் - 10 பூண்டு - 10 சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிது கடுகு - சிறிதளவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
முட்டைக்கோஸ் மிளகு சூப் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். இத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான முட்டைக்கோஸ் மிளகு சூப்பை தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது) கேரட் - 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 3k views
-
-
இறால் தொக்கு தேவையானவை: இறால் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 6 பல் தேங்காய்ப் பால் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி செய்முறை: வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வ…
-
- 17 replies
- 7.3k views
-
-
முளைகட்டிய பச்சைப் பயறு - பப்பாளி சாலட் தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * பப்பாளியை சிறிய து…
-
- 0 replies
- 522 views
-
-
முட்டைகோசுப் பொரியல் தேவையான பொருட்கள்: முட்டைகோசு - 1 தேங்காய் - 1 தக்காளி - 50 கிராம் வெங்காயம் - 25 கிராம் பூண்டு - 10 கிராம் மிளகு - அரைத்தேக்கரண்டி சீரகம் - அரைத்தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கட்டு மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி புளி - 5 கிராம் சர்க்கரை - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள…
-
- 1 reply
- 1.7k views
-
-
தேங்காய், கத்தரி கார குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன கத்தரிக்காய் - 15 பெரிய வெங்காயம் - 1 தேங்காய் எண்ணெய் - 15 மேசைகரண்டி புளி - 1 தேசிக்காய் அளவு கறிவேப்பிலை - 3 கடுகு - 1/2 தேக்கரண்டி உழுந்து - 1/2 தேக்கரண்டி பெருவெங்காய தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு அரைக்க தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 2 தேக்கரண்டி மல்லி - 1 தேக்கரண்டி செத்தல் - 6 துருவிய தேங்காய் - 1/2 கப் ஏலக்காய் - 2 கறுவா - 1 1. கத்தரிக்காயை 4 துண்டுகளாக கீறி எண்ணெயில் அரைவாசி வதக்கி எடுக்கவும். 2. அரைக்கவேண்டியதை அரைத்து எடுங்கள். (அனைத்து பொருட்களையும் வறுத்த பின்னர்) 3. வெங்காயத்தை சிறிதாக வெட்டி, சிறிதளவு எண்ணெஇயில் போட்டு வதக்கவும். 4…
-
- 32 replies
- 9.7k views
-
-
தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 2 குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள…
-
- 0 replies
- 935 views
-
-
-
வெந்தய கீரை: நீங்களை வீட்டில் முளைக்க வைக்கலாம் சின்ன பொட் இல், ஒர் மாதத்தில் அறுவடைக்கு ரெடி, வெந்தயத்தை ஊற போட்டு விதைத்தால் விரைவில் வளரும். வெந்தய கீரையில் பல கறிகள் செய்யலாம் & நல்ல சத்தான உணவு இது வெந்தயம் மாதிரி கயர்ப்பா இருக்காது, நல்ல ருசி, சிறுவர்கள் & கர்ப்பினி பெண்களுக்கு நல்லது தேவையான பொருட்கள் : கீரை- ஒரு கட்டு மைதா மாவு - ஒரு கோப்பை கோதுமைமாவு- முக்கால் கோப்பை கடலைமாவு- கால் கோப்பை மிளகாய்த்தூள்- அரைத்தேக்கரண்டி சீரகம்- அரைத்தேக்கரண்டி மஞ்சத்துள்- கால்த்தேக்கரண்டி உப்பு- காலத் தேக்கரண்டி எண்ணெய்- கால்க்கோப்பை செய்முறை : கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும். மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகா…
-
- 31 replies
- 7.1k views
- 1 follower
-
-
கத்திரிக்காய் பக்கோடா Posted By: ShanthiniPosted date: January 05, 2016in: தேவையான பொருட்கள் கத்திரிக்காய் – 2 கடலை மாவு – 4 மேசைக்கரண்டி அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மல்லி தூள் – 1/4 தேக்கரண்டி கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கத்திரிக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு கத்திரிக்காயை எடுத்து, …
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=5]நண்டு சூப்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயத் தாள் - 3 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பல் இஞ்சி - ஒரு துண்டு மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி பால் - கால் கப் வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை : நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாள…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]சோளம் வறுவல் தேவையான பொருட்கள் : சோள மணிகள் 500 கிராம் தயிர் 200 கிராம் இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது 2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி 2 தேக்கரண்டி சீரகப் பொடி 2 சிட்டிகை கடுகு எண்ணெய் 2 மேஜைக் கரண்டி ஏலக்காய்ப் பொடி 2 சிட்டிகை மிளகாய்ப் பொடி தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப செய்முறை : 1. தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க வைக்கவும். 2. பிறகு அந்த தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் வற்றல் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, எண்ணெய், உப்பு, சீரகப் பொடி, மிளகாய் ப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். 3. சோள…
-
- 0 replies
- 645 views
-
-
அவல் பர்ஃபி தேவையான பொருட்கள்: அவல் : 250 கிராம் சர்க்கரை : 400 கிராம் முந்திரி பருப்பு : 7 நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி நெய் : 100 கிராம் செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும். அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் க…
-
- 0 replies
- 1k views
-
-
https://youtu.be/3LWD4bT3WB8
-
- 13 replies
- 1.6k views
-
-
சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : வேக வைக்க: சிக்கன் - அரை கிலோ மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி தாளிக்க: கிராம்பு - இரண்டு பட்டை - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி வரமிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - பாதி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - பாதி பொடி வகைகள்: மல்லி பொடி, மிளகாய் பொடி - தலா அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு …
-
- 0 replies
- 2.3k views
-
-
https://youtu.be/IF6Qq4gy570
-
- 4 replies
- 658 views
-