நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
“என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. ‘வாணி' என்ற என் பெயருக்கு ‘குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம். ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' …
-
- 3 replies
- 583 views
-
-
பருப்பு முள்ளங்கி வறுவல் தேவையானப் பொருள்கள் முள்ளங்கி - 2 கடலைப்பருப்பு - அரை கப் கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது மிளகாய், தனியா, மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி புளி - தேவையான அளவு எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையாள அளவு செய்முறை 1.முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும். 3.த…
-
- 1 reply
- 1.9k views
-
-
மெக்சிகன் ரைஸ் தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 50 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி நெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரிசி - ஒரு கப் செய்முறை: முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும். சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம…
-
- 2 replies
- 939 views
-
-
மட்டன் சமோசா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மைதா மாவு -- 350 கிராம் பேக்கிங் பவுடர் -- 1 1/2 டீஸ்பூன் நெய் -- 2 டேபிள்ஸ்பூன் தயிர் -- 1 டீஸ்பூன் கொத்துக்கறி -- 250 கிராம் பெரிய வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது) புதினா இலை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது) இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது) தக்காளி -- 1 என்னம் கரம் மசாலா -- 1 டீஸ்பூன் உப்பு -- ருசிக்கேற்ப எண்ணைய் -- பொரிக்க செய்முறை : மைதாமாவுடன் பேக்கிங் ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க. அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொத…
-
- 37 replies
- 9.9k views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ பூண்டு – 1 முழு பூண்டு இஞ்சி – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 4 – 5 சோம்பு – 2 தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 100 கிராம் கறிவேப்பிலை – 2 கொத்து கடலை மாவு – 1 /2 கப் தேங்காய் – 1/4 மூடி எண்ணெய் உப்பு – தேவையான அளவு செய்முறை 1.சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும். 2.மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும். 3.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்…
-
- 0 replies
- 967 views
-
-
-
- 0 replies
- 792 views
-
-
https://youtu.be/hO_PBuf7iCs video வை திரும்பவும் என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
-
- 11 replies
- 1.4k views
-
-
-
வயல் அறுப்புகள் முடிந்து விட்டது நண்பர்களுடன் சிறிய வாய்க்காலில் குளிக்க சென்ற வேளை வாய்க்கால் ஓரம் சில கெழுத்தி மீன்கள் விளையாடி எங்களை அழைத்து கொண்டது ஆகா அருகில் சென்று பார்த்தால் நல்ல களி கெழுத்தி என்பார்கள் கிழக்கில் மீன் களை பார்த்ததும் குளிப்பதை நிறுத்தி விட்டு கைகளால் அனைத்தையும் பிடித்து கொண்டோம் நல்ல நெல்லு தின்ற கெழுத்திகள் கொழுத்து இருந்தது இதை என்ன சமையல் செய்யலாம் என்று யோசித்து இருக்க நண்பன் ஒருத்தன் சொன்னான் அவித்து கடைவோம் என்று பிறகென்ன அவித்து கடைந்து உருவிவிட்டோம் தேவையான பொருட் கள் மீன் ஆத்து மீன் ( கெழுத்தி, பனையான் , ஆற்று சிறு மீன் கள் ) மாங்காய் நல்ல புளி மாங்காய் உப்பு கொச்சி சீரக் கொச்சி…
-
- 0 replies
- 697 views
-
-
https://youtu.be/a_sXImh0ilg
-
- 6 replies
- 825 views
-
-
அவல் லட்டு செய்யும்முறை தேவையான பொருட்கள் அவல் - 1 கப் தேங்காய் துருவல் - 1/4 கப் சக்கரை -1 கப் ஏலப்பொடி -1 சிட்டிகை அவலை சுத்தம் செய்து ரவைபோல் உடைக்கவும் .இதனுடன் சக்கரை சேர்த்து அரைக்கவும் .பின்பு தேங்காய் துருவல் , ஏலப்பொடி சேர்த்து மெதுவாக அரைத்து எடுக்கவும் .சட்டியில் சிறிது நெய் விட்டு சூடாகியதும் இந்த கலவையை அதில் கொட்டி கிளறி பின் உருண்டை பிடிக்கவும . அவல் லட்டு தயார் .
-
- 8 replies
- 3.4k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 714 views
-
-
பொங்கல் + பாசிபருப்பு சாம்பார் பச்சரிசி - 400 கிராம் பாசிபருப்பு- 100 கிராம் மிளகு - 1 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் முந்திரிபருப்பு- 10 நெய் அல்லது டால்டா - 25 கிராம் உப்பு - தேவையான அளவு செய் முறை அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக…
-
- 15 replies
- 43.1k views
-
-
பேரிச்சம் பழம் - 10 வாழைப்பழம் - 4 - 5 வெல்லம் - அரை கப் கல்கண்டு - கால் கப் உலர்ந்த திராட்சை - 10 சூடம் - சிறிய துண்டு தேன் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி…
-
- 3 replies
- 2.3k views
-
-
சுவையான பஞ்சு போன்ற மெதுவடை வீட்டிலேயே செய்வது எப்படி??
-
- 0 replies
- 513 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் ருசியாக இருக்கும். அந்த பன்னீருடன், குடைமிளகாயை சேர்த்து, ஒரு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வ…
-
- 1 reply
- 1k views
-
-
மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) தேவையான பொருட்கள்: செய்முறை: * சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும். * பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும். * அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி..) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும். * சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும். * சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும…
-
- 56 replies
- 5.4k views
-
-
தே.பொருட்கள்: சுறாமீன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 பெரியது பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லித்தழை -சிறிது மஞ்சள்தூள் – 1சிட்டிகை மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு பூண்டுப்பல் -5 இஞ்சி – சிறுத்துண்டு தாளிக்க: கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : *சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும். *வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் ) *பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். *வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும். *கடாயில் எண்ணெய் …
-
- 4 replies
- 1.1k views
-
-
வெஜிடபிள் புரோட்டா குருமா தேவையானப் பொருட்கள் காரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பச்சைப்பட்டாணி - 100 கிராம் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 பெரியது தக்காளி - ஒன்று நறுக்கியது கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - ஒரு மூடி கிராம்பு - 2 பட்டை - சிறிதளவு மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை * காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். * துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும். …
-
- 0 replies
- 5.4k views
-
-
சிக்கன் சால்னா: பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு தான் சிக்கன். இந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா. சால்னா என்பது வேறு ஒன்றும் இல்லை,குழம்பைத் தான் அப்படி சொல்வார்கள். இங்கு மிகவும் ருசியாக இருக்கும் சிக்கன் சால்னாவை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான…
-
- 0 replies
- 1.4k views
-
-
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …
-
- 12 replies
- 7.3k views
-