நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை
-
- 14 replies
- 2.5k views
-
-
ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஆட்டுக்கால் குழம்பு தேவையானவை: ஆட்டுக்கால் - 4 கால்கள் பெரிய வெங்காயம் - ஒன்று தேங்காய் - ஒன்று (சிறியது) தக்காளி - 2 இஞ்சி - 2 இன்ச் நீள துண்டு பூண்டு - 5 பல் கறிவேப்பில்லை - சிறிதளவு சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் அன்னாசிப் பூ - 2 மிளகாய்த்தூள் …
-
- 9 replies
- 3.3k views
-
-
-
- 1 reply
- 3.9k views
-
-
-
- 0 replies
- 949 views
-
-
வான்கோழி குழம்பு வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேப…
-
- 1 reply
- 455 views
-
-
காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.தேவையான பொருட்கள்* காலிஃபிளவர் - 300 கிராம்* முட்டை - 2* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்* உப்பு - தேவையான அளவுதாளிக்க தேவையானவை* எண்ணெய் - தேவையான அளவு* கடுகு - சிறிது* கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அ…
-
- 12 replies
- 2.5k views
-
-
கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்! சமையல் சமைக்கும்போதே அந்த வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைத்து, `உணவு வரப்போகிறது’ என்று வயிற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்; சாப்பிட் டவுடன் வயிறு நிறைவதுடன், உடலுக்கும் சத்து சேர வேண்டும்... இதுதான் முழு மையான உணவு அனுபவம்! இந்த அனுபவத்தை அள்ளித்தரவல்லவை நாட்டுப்புற உணவுகள்தான். பிரெட் - ஜாம், `2 மினிட்ஸ் நூடுல்ஸ்’, ஃபாஸ்ட் ஃபுட் என நகர வாழ்க்கைக்கு பழகிவிட்ட வர்கூட, ``எங்க ஊர்ல பாட்டி/அத்தை/பெரியம்மா ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... அந்த டேஸ்ட்டே அலாதி!’’ என்று சிலசமயம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்... சேம்பு கடைசல், கூட்டாஞ்சோறு, பனங்கிழங்கு பாயசம் உட…
-
- 2 replies
- 3k views
-
-
இங்கு மழையும் நின்றபாடில்லை, நான் சூப் சமைப்பதும் நின்றபாடில்லை என்றாகிவிட்டது. பாவம் வீட்டில் உள்ளவர்கள் நிலமை கவலைக்கிடம் தான். ஆனாலும் எனக்கு கடமைன்னு வந்தால் பாசமெல்லாம் இரண்டாம் பச்சம் தான். சைவ சூப் என்பதால் அனைவயும் முயற்சித்துப்பார்க்கலாம். தேவையானவை: கரட் 1 பீன்ஸ் 5 மிளகு 5 சோளம் 1/2 கப் சோளமா 2 மே.க வினிகர் 1 தே.க சோய்சோஸ் 1 தே.க பச்சைமிளகாய் 2 உப்பு முதலில் செய்ய வேண்டியவை: 1. பச்சை மிளகாயை சின்னதாக அரிந்து எடுங்க. 2. கரட், பீன்ஸை சுத்தம் செய்து சின்னதா அரிந்து எடுங்க. 3. சோள மாவை 1/2 கப் நீரில் கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. 4. மிளகை தூளாக்கி வைக்கவும். செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை சுட வை…
-
- 14 replies
- 3.6k views
-
-
-
- 1 reply
- 565 views
-
-
மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் போது பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் மாலை நேரமானது வெயில் இல்லாமல், குளிர்ச்சியுடன் இருப்பதால், அப்போது சூடாகவும், சுவையுடனும் பக்கோடாவை செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸில் ஒன்றான முந்திரியை வைத்தும் பக்கோடா செய்யலாம். இப்போது அந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முந்திரி (கஜு)- 1 கப் கடலை மாவு - 3/4 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் புத…
-
- 0 replies
- 1k views
-
-
இது மிகவும் ருசியான செட்டிநாடு சைட் டிஷ்ஷாக அமைகிறது. சாம்பார் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் உகந்தது. தேவையான பொருட்கள்; புடலங்காய்-2 சுமாரானன சைஸில்; துவரம்பருப்பு-100 கிராம்; மிளகாய்த்தூள்-3 டீ ஸ்பூன்; மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்; மல்லித்தூள்-1 டீ ஸ்பூன்; உடைத்த உளுத்தம்பருப்பு-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை; பெருங்காயத்தூள் மற்றும் உப்பு. செய்முறை: புடலங்காயை கழுவி சுத்தம் செய்து, உள்ளே உள்ள விதைக்ளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடம் ஊற வைக்கவும். அதிலுள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு கழுவி நீரைப் பிழிந்தெடுக்கவும். இதுபோல மீண்டும் ஒ…
-
- 23 replies
- 2.3k views
- 1 follower
-
-
உங்கள் வீட்டு சமையல் அடுப்பு + குசினி பால் போல பளிச்சிட.. செயன்முறை: 1. வசதி, தேவைக்கு தகுந்தபடி பாலை கவனமாக சுடவைக்கும் பாத்திரத்தில் ஊற்றவேண்டும். 2. பால் நிரம்பியுள்ள பாத்திரத்தை ஓர் மூடியினால் மூடிவிடவேண்டும். 3. அடுப்பை பற்றவைக்கவேண்டும். 4. இனி உங்களுக்கு விருப்பமான ஓர் வேலையில் ஈடுபடவேண்டும் (பராக்கு பார்த்தல், பத்திரிகை வாசித்தல்) 5. புகை எச்சரிக்கை மணி (smoke alarm) அடிக்கும்போது அல்லது நிலத்தில் தடாங்க் என்று பால் பாத்திரத்தின் மூடி விழும் சத்தம் கேட்கும்போது ஓடிச்சென்று அடுப்பை அணைக்கவேண்டும். 6. இப்போது பால் பாத்திரத்தை சுற்றி அடுப்பிலும், மற்றும் நிலத்திலும் பால் பொங்கி வழிந்து இருப்பதை காண்பீர்கள். 7. ஓர் துணியை கவனமாக பால் ஊற்றுப்பட…
-
- 14 replies
- 3.3k views
-
-
சூப்பரான சைடிஷ் மஷ்ரூம் தொக்கு இந்த மஷ்ரூம் தொக்கு புலாவ் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த மஷ்ரூம் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மஷ்ரூம் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 2 (நடுத்தரமான அளவு) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி, புதினா இலை - சிறிது பச்சை மிளகாய் - 5 மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப நெய் - 2 தேக்கரண்டி சீரகம் …
-
- 0 replies
- 673 views
-
-
மாங்காய் சம்பல் எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்... தேவையானது: மாங்காய் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை) மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்) 1. மாங்காயை சின்னனா வெட்டுங்க. 2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க 3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும். 4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும். பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம். நன்றி சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
-
- 45 replies
- 9k views
-
-
-
- 1 reply
- 3k views
-
-
'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு! நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் த…
-
- 0 replies
- 899 views
-
-
மட்டன் சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு - 150 கிராம் சீரகம் - அரை மேசைக்கரண்டி மிளகு - அரை மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - முக்கால் தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். குக்கரில் மட்டனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். சூடாகப்…
-
- 4 replies
- 1.4k views
-
-
கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அந்த குழம்புடன் தேங்காயை அரைத்து சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? இங்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நீளமான கத்திரிக்காய் - 2 (நறுக்கியது) தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை
-
- 34 replies
- 3.4k views
- 1 follower
-
-
https://youtu.be/QSrir2WydSI
-
- 8 replies
- 1.5k views
-
-
தேவை: 1 1/2 கி. இளசான ஆட்டுக்கால் துண்டுகளாக்கியது; 500 மிலி. தேங்காய்ப் பால்; 150 கிராம் பொடிக்கப்பட்ட முந்திரி பருப்பு; 4 பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்; ; 4 சிவப்பு மிளகாய்; 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது; 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது; 3 லவங்கப் பட்டை; 8 கிராம்பு; 2 ஏலக்காய்; உப்பு; 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்; 3 உருளைக் கிழங்கு பெரிய துண்டுகளாக்கி பொறித்தது. செய்முறை: முதல் நாள் இரவு 3 மணி நேரம் ஆட்டுக் காலில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் விழுது, ஆகியவற்றைத் தடவி வைக்கவும். தேங்காய்ப் பாலில் முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, லேசான தீயில் வெங்காயம், ஏலக்காய், லவங்கப்பட்டை மற்றும் கிரா…
-
- 1 reply
- 797 views
-
-
பழந்தமிழர் பாரம்பரிய பதார்த்தங்கள் பனங்காய் பணியாரம் தேவையானவை: பனம்பழம்-2 கோதுமை மாவு-அரை கிலோ சர்க்கரை-400 கிராம் உப்பு-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-பொரிக்க செய்முறை: பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
This is the spicy Sri Lankan chickpea curry served in the cafeteria at St. Joseph's Health Centre. Chef Bala Thangarajah’s chickpea curry is so popular in the St. Joseph’s Health Centre cafeteria, people revolt if it’s not on the menu once a week. They used to complain that it was too hot. Now they complain if it’s not spicy enough. Thangarajah uses Niru brand Curry Flavour, a powdered spice blend of cinnamon, cardamom, curry leaves and fennel. He also uses Niru’s roasted hot Jaffna curry powder, which is red and includes chili, coriander, fenugreek, pepper, cumin, turmeric and fennel. I bought both at Sri Lankan supermarket New Spiceland (5790 Sheppard Ave. E., 6…
-
- 0 replies
- 769 views
-
-
மதுரை அயிரை மீன் குழம்பு மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியாக ஸ்பெஷான ஒன்று என்றால் அது அயிரை மீன் குழம்பு தான். இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். உங்களுங்கு இந்த மீன் குழம்பை சுவைக்க ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அந்த மதுரை அயிரை மீன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விடுமுறை நாளில் செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: அயிரை மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 250 கிராம் (தோலுரித்தது) தக்காளி- 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீ…
-
- 0 replies
- 1.9k views
-