நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 725 views
-
-
-
மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு! கட்டுரை, படங்கள்: கே.குணசீலன் இன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள். ஆனாலும்கூட, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், விறகு அடுப்பில் மண்பானை, மண்சட்டி வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் எல்லையற்ற சுவையுடன் இருப்பதுடன், ஆரோக்கியத் தையும் அள்ளிக்கொடுப்பது தான். தஞ்சாவூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நடுவூர் கிராமம். விவசாயம்தான் முக்கியத் தொழில். ‘`வாங்க வாங்க...’’ என்று கிராமத்து நேசத்துடன் வாய்நிறைய வரவேற்கிறார் அறுபது வயதாகும் மலர்க்கொடி. ‘`எங்க காலத்துல சமைக்கிறதுக்கு ஸ்டவ், காஸ் …
-
- 0 replies
- 1.7k views
-
-
நண்டு ஆம்லெட் செய்வது எப்படி அனைவருக்கும் நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நண்டை வைத்து சூப்பரான எளிய முறையில் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 3 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று சின்னவெங்காயம் - 4 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் ஆம்லெட்க்கு: முட்டை - 4 …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நண்டு கறி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: நண்டு - 6 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி - 3 அரைத்த மிளகு - ஒரு தேக்கரண்டி அரைத்த சீரகம் - அரை தேக்கரண்டி அரைத்த சோம்பு - ஒரு தேக்கரண்டி அரைத்த பூண்டு - 8 பல் அரைத்த இஞ்சி - ஒரு துண்டு அரைத்த மிளகாய் வற்றல் - 4 புளி சாறு - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். அத…
-
- 0 replies
- 2.9k views
-
-
நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 3 (நடுத்தரஅளவு) இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - 1 மேஜைக்கரண்டி கரம்மசாலாதூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையானஅளவு எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி சோம்பு - தாளிக்க அரைக்க : தேங்காய் துருவல் - 1/2 கப் கசகசா - 1 மேஜைக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை : * ந…
-
- 1 reply
- 761 views
-
-
நண்டு சகியூடி (கோவா ஸ்டைல்) தேவையானவை: நண்டு - 5 காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் (துருவவும்) - 4 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 4 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - ஒரு சிட்டிகை கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 6 பல் முழு மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் (நறுக்கவும்) - ஒன்று எள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள நண்டு, உப்பு, வெங்காயம், எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைபோல அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி பெ…
-
- 0 replies
- 630 views
-
-
ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள்:* நண்டு - 1 கிலோ* புளிக்கரைசல் - 1 கப்* பட்டை - 2* பிரியாணி இலை -2* சோம்பு - 1/2 டீஸ்பூன்* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்* வெங்காயம் - 100 கிராம்* தக்காளி - 2* பச்சை மிளகாய் - 2* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்மசாலாவிற்கு:*…
-
- 5 replies
- 3.6k views
-
-
[size=5]நண்டு சூப்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயத் தாள் - 3 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பல் இஞ்சி - ஒரு துண்டு மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி பால் - கால் கப் வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை : நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாள…
-
- 0 replies
- 1.1k views
-
-
நண்டு தக்காளி சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பெரிய நண்டு - 2 தக்காளி விழுது - அரை கப் வெங்காயம் - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு மிளகு - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு முட்டை - 2 சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி செய்முறை : முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொ…
-
- 6 replies
- 1.1k views
-
-
நண்டு தொக்கு மசாலா விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், நன்கு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றையும் ருசித்துப் பாருங்கள். எனவே இந்த வாரம் நீங்கள் நண்டு தொக்கு மசாலாவை செய்து சுவைத்து மகிழுங்கள். இங்கு நண்டு தொக்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நண்டு - 5-6 (பெரியது) வெங்காயம் - 1 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது …
-
- 0 replies
- 2.1k views
-
-
இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்
-
- 8 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணத்தில கிடைக்கிற நீல கால் நண்டு வச்சு உறைப்பான சுவையான ஒரு நண்டு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, இத மாதிரி செய்து வீட்டில இருக்க ஆக்களுக்கு குடுத்தா நீங்க தான் ராசா, ராணி அப்பிடி பாராட்டுவாங்க, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 331 views
-
-
நண்டு பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி -300கிராம் நண்டு -300கிராம் வெங்காயம் -2 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -2ஸ்பூன் தயிர் - 4ஸ்பூன் தேங்காய் பால் - 4ஸ்பூன் எலுமிச்சை -1 பட்டை -2 ஏலக்காய் -5 அன்னாசிப்பூ -2 கல்பாசி -2 சிவப்பு மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் மல்லித்தூள் -1ஸ்பூன் கரம் மசாலா -1/2 ஸ்பூன் புதினா, கொத்தமல்லி, உப்பு, நெய், எண்ணெய் -தேவையான அளவு எப்படி செய்வது? நண்டு பிரியாணி செய்ய முதலில் குக்கரில் அரிசியை போட்டு போதுமான அளவு தண்ணீர் சிறிது எண்ணெய் சேர்க்கவும் (சாதம் உதிரியாக வர) உப்பு கலந்து சாதம் வேகவைத்து அதில் நெய் ஊற்றி எடுத்…
-
- 3 replies
- 1.8k views
-
-
அருமையான சைடிஷ் நண்டு புட்டு நண்டை வைத்து குழம்பு, வறுவல், கிரேவி செய்து இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சூப்பரான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் - அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் - சிறிது, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 2 replies
- 1.3k views
-
-
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....! தேவையான பொருட்கள்: நண்டு - 2 பெரியது தேங்காய் (துருவியது) - 1/2 கப் சின்ன வெங்காயம் - 25 மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: * நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய…
-
- 36 replies
- 7.1k views
-
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 574 views
-
-
நண்டு குழம்பு, நண்டு குருமா என்று வைத்திருப்பீர்கள். இது நண்டு ரசம், புதிதாக இருக்கும். செய்து பார்த்து ருசியுங்கள். நீங்கள் காசு கொடுத்து வாங்கும் நண்டின் கால்களும் வீணாகப்போகாது. எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை நண்டு கால்கள் – 10புளி – எலுமிச்சை அளவுஒரு முழு பூண்டுரசப் பொடி – 3 தேக்கரண்டிமஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 4கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவுகடுகு, எண்ணெய் – தாளிக்க செய்யும் முறை நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்த…
-
- 1 reply
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள்: நண்டு - 10 புளி - எலுமிச்சை அளவு பூண்டு - 1 ரசப் பொடி - 3 தேக்கரண்டி தக்காளி - 1 பெரியது மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5 கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு கடுகு, எண்ணெய் - தாளிக்க செய்முறை: நண்டை நன்கு சுத்தம் செய்து அம்மியில் வைத்து அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனை வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள…
-
- 0 replies
- 730 views
-
-
சமையல் குறிப்பு: நண்டு ரசம் தேவையான பொருட்கள்: கால்கள் – 10 புளி – எலுமிச்சை அளவு முழு பூண்டு – 1 ரசப்பொடி – 3 தேக்கரண்டி மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 கொத்துமல்லி கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு, எண்ணை – தாளிக்க செய்முறை: நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடுங்கள். புளிக்கரைசலில் நண்டுகால்கள், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும் வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்த வுடன் கடுகைப் போடவும…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆறு, குளங்களில் கிடைக்கும் நண்டைவிட கடல் நண்டில் சுவை அதிகம். எடுத்து உடைத்து சாப்பிட சற்று சிரமமான உணவு இது. இதனாலே பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். அதிக மணம் கொண்டது. நண்டில் கால்சியம் அதிகம். அவை பெரும்பாலும் நண்டு ஓட்டில்தான் இருக்கின்றன. நாம் விரும்பி உண்ணக்கூடிய சதைப் பகுதிகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. நண்டினை உடைத்த உடன் சமைத்துவிட வேண்டும். உடைத்து நீண்ட நேரம் வைத்திருந்தால், நீர் விட்டு, வீணாகிவிடும். அமாவாசை காலங்களில் பிடிபடும் நண்டுகளில் சதை இருக்காது என்ற கருத்து உள்ளது. 100 கிராம் நண்டில் அடங்கியுள்ள சத்துக்கள் சக்தி (Energy) 59 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 83.5 கிராம் புரதம் (Protein) 8.9 கிராம் கொழுப்பு (Fat) 1.1 கிர…
-
- 23 replies
- 6.4k views
-
-
தேவையான பொருட்கள் சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம் வெட்டிய வெங்காயம் - 100 கிராம் வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம் கருவேப்பிலை - தேவையான அளவு சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு வெந்தயம் - தேவையான அளவு தேங்காய்ப் பால் - தேவையான அளவு பழப்புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள். 3. பின்னர்தேங்காய…
-
- 11 replies
- 3k views
-
-
தேவையானவை நண்டு – அரை கிலோ வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் – 3 கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி பால் – கால் கப் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு ப…
-
- 4 replies
- 953 views
-
-
நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று! ‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல்காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார். முதல்முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடுவார்கள்? என்று ஒரே அதிசயமாகக் கூட இருந்தது. ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. நத்தை வேண்டுமானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம் ஆனால் அதன் கறியோ தொண்டைக்குள் வழுக்கிக…
-
- 5 replies
- 1.8k views
-