நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மிளகு பூண்டு குழம்பு பூண்டு உடல் நலத்திற்கு ஏற்ற உணவுப் பொருள். பூண்டின் மணத்திற்குக் காரணமான சல்ஃபர் அதில் உள்ள ஈதர் மனிதர்களின் நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். எனவே அடிக்கடி நாம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மிளகு பூண்டு குழம்பு சற்றே காரமான உடலுக்கு ஏற்ற சைவ குழம்பாகும். தேவையான பொருட்கள்: மிளகு – 4 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் மல்லி - 2 டீ ஸ்பூன் பூண்டு - 20 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் பெருங்காயம் - 1 டீ ஸ்பூன் புளி - எலுமிச்சையளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான…
-
- 8 replies
- 10.2k views
-
-
தூதுவளை-ரசம் தூதுவளை இலை காம்புடன் – 1 கப் புளி – எலுமிச்சையளவு மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 4 பல் தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய் சிவப்புஉப்பு – தேவையான அளவு செய்முறை: காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுரைத்து மேலே வரும் போது இறக்கவ…
-
- 5 replies
- 5.8k views
-
-
வெந்தயக் கீரை சாதம் தேவையான பொருட்கள் கீரை 1 கட்டு மிளகாய் வற்றல் 4 கடலை பருப்பு 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் எண்ணெய் 5 ஸ்பூன் கடுகு 1 ஸ்பூன் தேவையானால் சிறிய தேங்காய் கீற்று செய்முறை கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும். சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி,…
-
- 1 reply
- 770 views
-
-
சிக்கன் பக்கோடா சிக்கனில் நாம் இதுவரை சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி என்று தான் நம் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்திருப்போம். இப்ப கொஞ்சம் வித்தியாசமா, டேஸ்டியா சிக்கன் பக்கோடா செஞ்சு அசத்துவோமா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் சாட் மசாலா - 1/4 ஸ்பூன் சீரக தூள் - 1/4 ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன் கடலை மாவு - 5 ஸ்பூன் கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன் சோடா உப்பு - சிறிதளவு கேசரி பவுடர் - சிறிதளவு ஓமம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : முத…
-
- 5 replies
- 911 views
-
-
தயிர் சாதம் ( CURD RICE ) இது மிகவும் இலகுவான கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு பக்குவம் . நான் அடிக்கடி வீட்டில் செயவதும் இதைத்தான் . நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன ? தேவையானவை : பசுமதி அரிசி 500 கிறாம் . கட்டித் தயிர் ( NATURE YOGURT ) 2 - 3 பெட்டி ( ஒவ்வொன்றும் 125 கிறாம் கொள்ளளவு கொண்டது ) . சின்னவெங்காயம் 10 . கடுகு அரை தேக்கறண்டி . வெள்ளை உளுந்து அரை தேக்கறண்டி பச்சை மிளகாய் 7 - 8 . இஞ்சி ஒரு துண்டு ( குறுணியாக வெட்டியது ) . உப்பு தேவையான அளவு . எண்ணை 3 மேசைக்கறண்டி . கருவேப்பமிலை 4 -5 இலை . கொத்தமல்லி இலை தேவையான அளவு . பக்குவம் : பசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி சோறு வடியுங்கள் . சோறு…
-
- 15 replies
- 2.6k views
-
-
தோசைக்கறி . இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் . சின்னவெங்காயம் 200 கிறாம் . பச்சைமிளகாய் 200 கிறாம் . வெந்தயம் 2 மேசைக்கறண்டி . பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு . தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு . உப்பு மஞ்சள் தேவையான அளவு . பக்குவம் : கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை …
-
- 23 replies
- 4.6k views
-
-
வாழைக்காய் வழக்கமாக பொரியல் பால்கறி குழம்பு என்று பலவகையாக சமைப்பார்கள்.அனேகமானவர்கள் வாழைக்காயிலேயே மிகவும் சத்தான தோலை எறிந்துவிடுவார்கள்.ஊர் என்றால் மாட்டுக்கும் கெடாய் ஆட்டுக்கும் போடுவார்கள்.இங்கு ஆடு மாடு இல்லாததால் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள்.சரி அருமையான இந்த சம்பலை எப்படி செய்வதென்று பார்ப்போம். ஒரு தடவை சமைப்பதற்கு அல்லது பெரிப்பதற்கு 3 அல்லது 4 வாழைக்காய் பாவிப்பார்கள். வாழைக்காயை எடுத்து பட்டும் படாமல் மேலால் சுரண்டி வழைமையாக தோல் வெட்டி எடுப்பது போல் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு 20 நிமிடமளவு(மசித்து பார்க்க தெரியும் அவிந்தது காணுமா என்று)அவித்த பின்னர் தண்ணீர் இருந்தால் ஊற்றிவிட்டு சூட்டுடனேயே…
-
- 14 replies
- 3k views
-
-
சுவையான நண்டு உருளைக்கிழங்கு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் தேங்காய் - அரைமூடி சீரகம் - ஒரு ஸ்பூன் மிளகு - ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை : முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண…
-
- 0 replies
- 1.1k views
-
-
அசத்தலான ஆட்டு ரத்த பொரியல் அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி…
-
- 18 replies
- 12.9k views
-
-
வெள்ளை அரிசி நூடில்ஸ் & தந்தூரிக் கோழிப் பொரியல் & குழம்பு வெள்ளை அரிசி நூடில்ஸ் (பல கடைகளில் ஊறவைத்து உடனே சமைப்பதற்குரிய ரைஸ் நூடில்ஸும் விற்பனை செய்கிறார்கள்) 1/4 பச்சை இலைக் கோவா (மெல்லிதாக அரிந்தது) 3-4 தண்டு செலரி(மிகச் சிறிய துண்டுகளாக வெட்டியது) 100 கிராம் பீன்ஸ் முளை 3 கரட் (மெல்லிதாக வெட்டியது சமையல் ஒலிவொயில் (தேவையான அளவு) 3 4 மேசைக் கரண்டி- சோயா சோஸ் உப்பு (தேவையான அளவு) ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். none stick பாத்திரத்தில் சமையல் ஒலிவொயில் தேவையான அளவு விட்டு எண்ணெய் நன்றாகக் சூடேறும் போது வெட்டியா மரக்கறிகளை சட்டியில் போட்டு, மரக் கரண்டியால் கிளறிய படியே பொரியவிட வேண்டும். அரைவாசி பொரிந்து வர…
-
- 13 replies
- 2.5k views
-
-
சுவையான கருவாடு சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு தேவையானப் பொருள்கள்: கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்) வள்ளிக்கிழங்கு_2 புளி_பெரிய நெல்லிக் காய் அளவு சின்ன வெங்காயம்_10 தக்காளி_பாதி முழு பூண்டு_1 மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன் உப்பு_தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய் வடகம் வெந்தயம் கறிவேப்பிலை செய்முறை: புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வை.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வை. கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வை. சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வை.தக்காளியை நறுக்கி வை.பூண்டு உரித்து வை. வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித…
-
- 20 replies
- 7k views
-
-
'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு! நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் த…
-
- 0 replies
- 891 views
-
-
யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா? *** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
- 21 replies
- 14.5k views
-
-
சத்தான காளான் கிரேவி காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!! தேவையான பொருட்கள் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 புதினா,மல்லி - சிறிது தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - 3 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்…
-
- 2 replies
- 880 views
-
-
http://www.sbs.com.au/food/video/2151257408/Jaffna-kool
-
- 5 replies
- 1.9k views
-
-
-
ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகுத்தூள் - 4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக…
-
- 2 replies
- 902 views
-
-
செட்டிநாடு எலும்பு குழம்பு செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன் தேங்காய் பால் — 1 கப் எண்ணைய் — 1 1/2 ஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு கிராம்பு — 4 கறிவேப்பிலை ஒரு கொத்து எலும்பு குழம்பு …
-
- 6 replies
- 1.5k views
-
-
வாழைப்பூ வடை தேவையானவை : வாழைப்பூ - சிறியது ஒன்று கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு இஞ்சி - ஒரு சிறுத் துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரித்தெடுக கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந…
-
- 25 replies
- 4.1k views
-
-
பஜ்ஜி தேவையானப் பொருள்கள்: கடலை மாவு_2 கப் அரிசி மாவு_2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டிஸ்பூன் பெருங்காயம்_சிறிது ஓமம்_சிறிது சோடா உப்பு_ஒரு துளிக்கும் குறைவு உப்பு_தேவையான அளவு கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு அரைக்க: பெருஞ்சீரகம்_சிறிது பூண்டு_2 பற்கள் பஜ்ஜிக்கான காய்கள்: வாழைக்காய்_1 கத்தரிக்காய்_சிறியதாக இருந்தால் 1 பெரிய சிவப்பு வெங்காயம்_1 eggplant ல் செய்வதாக இருந்தால் மாவின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். செய்முறை: கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,சோடா உப்பு,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்.அதில் ஓமம் சேர்த்துக்கொள்.மேலும் பெருஞ்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் மொச்சைப்பயிறு – 1 கையளவு கருவாடு – சிறிதளவு கத்தரிக்காய் – 1/4 கிலோ வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை – 2 கொத்து தனியாத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக்கரண்டி புளி – எலுமிச்சம் பழ அளவு கடுகு – சிறிதளவு செய்முறை * மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும். * கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும். * கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். * ந…
-
- 1 reply
- 795 views
-
-
உள்ளிச் சட்ணி . இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ? தேவையான பொருட்கள் : உள்ளி 10 - 12 பல்லு . செத்தல் மிளகாய் 6 - 7 . **** தக்காளிப்பழம் 2 . கறிவேப்பமிலை 4 - 5 இலை. கல்லு உப்பு ( தேவையான அளவு ) . எண்ணை 5 தேக்கறண்டி . கடுகு கால் தேக்கறண்டி . பக்குவம் : தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்…
-
- 8 replies
- 1.8k views
-
-
சப்பாத்தி மட்டன் ரோல் வீடுகளில் சாதரணமாக சப்பாத்திக்கு காய்கறி குருமாவோ, சிக்கன், மட்டன் கிரேவியோ செய்து கொடுப்பார்கள். கிரேவி தொட்டு சாப்பிட சோம்பேரித்தனம் பட்டுக்கொண்டு குழந்தைகள் வெறும் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். குழந்தைகளை மட்டன், சிக்கன் சாப்பிட வைக்க அதை சப்பாத்தியினுள் வைத்து ரோல் மாதிரி செய்து கொடுக்கலாம். இன்னும் ஒரு சப்பாத்தி ரோல் குடுங்க அம்மா என்று கேட்டு சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப் மட்டன் கொத்துக்கறி – 200 கிராம் சின்னவெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 மட்டன் மசாலா தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீ ஸ்பூன் முட்டை - 1 உப்பு - தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவில் சிறிதளவு உப்பு போட்டு, தண்ணீர…
-
- 5 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சாம்பார் வெங்காயம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 2 (கீறியது) தேங்காய் - 1/2 மூடி துருவியது சீரகம் - 1/2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் லவங்கம் - 2 பட்டை - 2 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும…
-
- 10 replies
- 1.7k views
-
-
பூரி நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது . தேவையான சாமான்கள் : கோதுமை மா 2 சுண்டு ************* . ஆட்டா மா 1 சுண்டு . ரவை கால் சுண்டு . உப்பு ( தேவையான அளவு ) . வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் . எண்ணை 1 லீற்ரர் . பக்குவம் : கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக …
-
- 21 replies
- 5k views
-