நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கரட் சட்ணி இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன்பேர்வழி என்று சுட்டது தேவையான சாமான்கள் : கரட் கால் கிலோ . செத்தல் மிளகாய் 6 . பழப் புளி (தேவையான அளவு ). கறிவேப்பமிலை 1 நெட்டு . வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி . கொத்த மல்லி 2 கரண்டி . தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) . கடுகு , உளுந்து அரைக் கரண்டி . எண்ணை கால் ரம்ளர் . ** கரண்டி = தேக்கரண்டி . செய்மறை: ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் . கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை …
-
- 30 replies
- 4.2k views
-
-
உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 (1/4 கிலோ) கத்தரிக்காய் சிறியது - 5 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 தேங்காய்த் துறுவல் - 1 கோப்பை பட்டை - 2 (1 இஞ்ச் அளவு) கிராம்பு - 5 ஏலக்காய் - 1 அன்னாசிப்பூ - 1 சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி கசகச - 1/2 தேக்கரண்டி நிலக்கடலை - 15 கறிவேப்பிலை - 2 கொத்து கொத்துமல்லித்தழை - 1 தேக்கரண்டி (நறுக்கியது) மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 5 உப்பு - தேவையான அளவு செய்முறை 1. பெரிய வ…
-
- 4 replies
- 2.7k views
-
-
கல்லு றொட்டி . தேவையான பொருட்கள் : கோதுமை மா 1 கிலோ . தேங்காய் 1 . பச்சை மிளகாய் 7 அல்லது 8 . சின்னவெங்கயம் 250 கிறாம் . உப்பு தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியால…
-
- 37 replies
- 4.5k views
-
-
பால் றொட்டி மற்றும் சீனி அரியதரம் செய்முறை இருந்தால் தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
Crème brûlée ( எரியூட்டிய கறமல் புடிங் ) . நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் . 4 பேருக்குச் செய்ய , தேவையானவை: மஞ்சள் முட்டைக் கரு 5. சீனி 100 கிறாம் . 100 வீதம் கிறீம் பால் 50 cl. வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி . பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு . பக்குவம் : ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் . பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங…
-
- 11 replies
- 2.4k views
-
-
கீரை பொரியல் (கீரை வறை) தேவையான பொருட்கள் அரைக் கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1 வரமிளகாய் - 5 கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கீரையை களை நீக்கி கொய்து, நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். 4. அதனுடன் நறுக்கிய வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 5. வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வ…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
கிட்னி கூட்டு தேவையான பொருட்கள் ஆட்டு கிட்னி - கால் கிலோ வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு) பச்ச மிளகாய் - ஒன்று கொத்து மல்லி தழை - சிறிது எண்ணை - நான்கு தேக்கரண்டி பட்டை - ஒரு சிறிய துண்டு செய்முறை 1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். 2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. ஓர…
-
- 2 replies
- 771 views
-
-
சிக்கன் - 65 தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் இஞ்சி - 25 கிராம் பூண்டு -4 பல் மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்- தேவையான அளவு. மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி மசாலா பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு (மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்). செய்முறை: 1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும். 3. மிளகுத்தூள், மிளகாய்த்…
-
- 26 replies
- 11.5k views
-
-
TUNA (டூனா) சமோசா தேவையான பொருட்கள்: • மைதா - ஒரு கோப்பை • டூனா பிஷ் கேன்கள் - 2 (75கிராம்) • வெங்காயம் - 2 • புதினா - 1/4 கட்டு • இஞ்சி - ஒரு துண்டு • பூண்டு - 5 பற்கள் • எலுமிச்சை - அரை மூடி • தனியா தூள் - கால் தேக்கரண்டி • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி • கரம் மசாலா - கால் தேக்கரண்டி • கடுகு - கால் தேக்கரண்டி • உப்பு - தேவையான அளவு • எண்ணெய் - பொரித்தெடுக்க வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதா…
-
- 3 replies
- 822 views
-
-
சங்கரா மீன் குழம்பு சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் – 5 கனிந்த தக்காளி சிறியது – 3 புளி - சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன் மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை …
-
- 4 replies
- 4.1k views
-
-
http://tamiltaste.co...mg/kanavaai.JPG
-
- 44 replies
- 17.6k views
-
-
இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி இராசவள்ளிக் கிழங்கு - 1 தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப் சீனி - 1 - 11/2 கப் உப்பு - 1 சிட்டிகை இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல…
-
- 25 replies
- 11.1k views
-
-
கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும் யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?
-
- 24 replies
- 10.8k views
-
-
பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது. கொண்டைக் கடலைச் சுண்டல் தேவையான பொருட்கள்: கொண்டைக் கடலை- 500g வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1 பச்சை/ செத்தல் மிகளாய்-2 கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10 கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி கடுகு- 1/2 தேக்கரண்டி சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி உப்பு- தேவைகேற்ப தேசிக்காய்ப…
-
- 18 replies
- 8.1k views
-
-
http://tamiltaste.co.../koonsundal.png டின்களில் கிடைக்கும், இரண்டுமுறை குளிர்ந்த நீரில் கழுவி வடித்தபின் சற்று உலரவிட்டு செய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிடின் இப்போது சில இடங்களில் இதுபோன்றும் கிடைக்கும் வாங்கி சுண்டல் செய்து சாப்பிட்டுப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். *காரம் உங்களுக்கு ஏற்றவாறு கூட்டிக்கொள்ளுங்கள் *
-
- 10 replies
- 1.5k views
-
-
சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…
-
- 14 replies
- 3.8k views
-
-
பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகிவிடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும். உடம்பெல்லாம் வலிக்கிறதா ? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
கீரையும், வெந்தயமும் இன்றியமையாதவை! Posted on admin on February 18, 2012 // Leave Your Comment நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்து, நாம் அதிகம் சிந்திப்பதில்லை. திருப்பூரைச் சேர்ந்த கபீர் என்பவர், கீரை மற்றும் வெந்தயம் குறித்த விவரங்களை தொகுத்தளிக்கிறார்:கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்: கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரக்கீரை, பாலக்கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன…
-
- 1 reply
- 1.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம். நான் அழகாக இருக்கிறேனா? என் உடல் ஸ்லிம்மாக இருக்கிறதா? உடற் கட்டமைப்பு சிக்ஸ்பேக் போல இருக்கா என்றெல்லாம் அடிக்கடி செக் பண்ணிக் கொள்வோம். ஆனால் இடை விடாது வாய்க்கு வஞ்சகம் பண்ணாத வம்சமாக …
-
- 1 reply
- 1.9k views
-
-
மீன் சொதி தேவையான பொருட்கள்: மீன் -500கிராம் பச்சைமிளகாய் -5எண்ணம் பெரியவெங்காயம் -50 கிராம் கறிவேப்பிலை -சிறிது வெந்தயம் -1 மேஜைக்கரண்டி பெரும்சீரகம் -2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி தேங்காய்பால் -1 கப் உப்பு -தேவையான அளவு செய்முறை: 1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும். 4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்…
-
- 39 replies
- 6.2k views
-
-
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் 250கிராம் சோயா 100கிராம் க்ரட் 1 பெரியது பீன்ஸ் 100கிராம் கோவா/முட்டைக்கோஸ் 100கிராம் லீக்ஸ் 100கிராம் வெங்காயம் 1 அரைத்த பூண்டு விழுது 1/2 மேசைக்கரண்டி அரைத்த காய்ந்தமிளகாய் / செத்தல் தூள் - 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 மேசைக்கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணெய் சிறிதளவு செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். நீர் கொதித்து வரும் போது நூடுல்ஸ், சிறிதளவு உப்பு மற்றும் 1/2 மேசைக்கரண்டி எண்ணெயை போடுங்கள். நூடுல்ஸ் வெந்ததும், கொதி நீரை வடித்து, பின்னர் மீண்டும் சாதாரண நீர் சேர்த்து மறுபடியும் நீரை வடித்து எடுங்கள். (இப்படி செய்தால் நூடுல்ஸ் குளையாமல் வரும்) 2. தேவையான பொ…
-
- 18 replies
- 4.5k views
-
-
குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும். இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும். இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ…
-
- 0 replies
- 975 views
-
-
இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே. தேவையானவை: பச்சரிசி_2 கப் தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள் சர்க்கரை_தேவைக்கு உப்பு_சிறிது அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும். மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டு…
-
- 1 reply
- 867 views
-