நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சீலா மீன் வடை தேவையான பொருட்கள்: சீலா மீன் - 600 கிராம் ( சீலா மீன் கிடைக்காத போது முள் இல்லாத மீன் எதையும் தேர்வு செய்து கொள்ளவும்) உளுந்து - 300 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் முட்டை - 3 எண்ணம் மிளகாய் - 25 கிராம் மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 8 பல் மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறிது மல்லித்தழை - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. மீனை ஆவியில் வேகவைத்து முள்ளை அகற்றி உதிர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். 2. இந்த மீனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். 3. இதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளக…
-
- 8 replies
- 1.5k views
-
-
தேவையான பொருட்கள்: அவித்த மீன் அல்லது மக்கரேல் டின் மீன் 1 வேக வைத்து மசித்த உருளை கிழங்கு 400 கிராம் சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 கப் சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 2 மே.க சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 2 மே.க மிளகு தூள் 2 தே.க பெரிய சீரகம் 1 தே.க பாண்தூள் Bread Crumbs முட்டை 2 பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டியவை: 1. முட்டையை உடைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக அடித்து கொள்ளுங்கள். 2. பாண் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்று வையுங்கள். செய்முறை: 1. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்கி …
-
- 16 replies
- 2.9k views
-
-
சிக்கன் மஞ்சூரியன் தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 500 கிராம் (எலும்பு நீக்கியது) மேல் மாவுக்கு மைதா மாவு - 125 கிராம். கார்ன்ப்ளவர் - 50 கிராம் பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி முட்டை - 1 எண்ணம் உப்பு - தேவையான அளவு பிற தேவைகள் நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி வெங்காயம் - 50 கிராம் மிளகாய் - 75 கிராம் இஞ்சி - 50 கிராம் பூண்டு - 50 கிராம் குடை மிளகாய் - 25 கிராம் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி வினிகர் - 1/2 தேக்கரண்டி அஜினோமோட்டா - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. மைதா, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், கார்ன்ப்ளவர், முட்டை ஆகியவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி…
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம். மிக முக்கியமான தேவையான பொருட்கள்: (1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்) (2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திர…
-
- 32 replies
- 5.9k views
-
-
நெருப்புக்கோழி முட்டைக்கு இங்கிலாந்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. பறவைகளிலேயே நெருப்புக் கோழியின் முட்டைதான் மிகவும் பெரியது. ஒரு கோழி முட்டையைக் காட்டிலும் 24 மடங்கு பெரியது நெருப்புக் கோழி முட்டை. அரை அடி உயரம், ஒன்றரை அடி சுற்றளவு கொண்ட இந்த முட்டை சுமார் 2 கிலோ எடை கொண்டது. இதன் விலை 19.95 பவுண்டுகள்; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய். இந்த முட்டையின் ஆம்லெட் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். ஒரு நெருப்புக் கோழி முட்டையில் 15 பேருக்கு ஆம்லெட் தயாரிக்கலாம். கோழி, வாத்து முட்டையைக் காட்டிலும் இதற்கு ருசி அதிகம் என்பதால், குழந்தைகள் இதனை ஒரு பிடி பிடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முட்டையை அவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். இதனை டிரில்லிங் மிஷினால் துளைத்…
-
- 5 replies
- 4.2k views
-
-
சுவையான வெஜிபிரியாணி செய்யும் முறை (கானொளியில்) http://youtu.be/OhEcjC4eI0w
-
- 6 replies
- 1.8k views
-
-
சுவையான மங்களூர் போண்டா தேவையானவை: மைதாமாவு 2 கப் அரிசிமாவு 1/2 கப் தயிர் 1 1/2 கப் சீரகம் 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் 5 இஞ்சி 1 துண்டு சமையல் சோடா ஒரு சிட்டிகை உப்பு,எண்ணைய் தேவையானது செய்முறை: இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயிர்,நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம்,ஆப்பசோடா,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.பிறகு மைதாமாவை போட்டு கிளறவும். மைதாமாவு சேர்த்த கலவை கெட்டியாக வரும் போது அரிசிமாவை சேர்க்கவேண்டும்.இப்பொழுது மாவு இன்னும் கெட்டியாக வரும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலி…
-
- 3 replies
- 2.6k views
-
-
தண்ணீர் குடிப்பது எப்படி ........ தேவையான பொருட்கள்: டம்ளர் 1, தண்ணீர் தேவையான அளவு, கை, வாய் *முதலில் டம்ளரை கழுவவும். *சிந்தாமல் சிதறாமல் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். *வானத்தைபார்த்தபடி டம்ள்ரை மெல்ல வாய்வரை உயர்த்தி குடிக்கவும். *சந்தேகம் இருப்பின் 0 00 000 இந்த எண்ணுக்கு டயல் செய்யவும் http://tamilnanbargal.com/node/30842
-
- 12 replies
- 2.3k views
-
-
சமையல்:கத்திரிக்காய் பிரியாணி எஸ். மேனகா - Friday, August 19, 2011 கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்! தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் - 1 பாஸ்மதி - 2 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 6 பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப் இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
உருளைக் கிழங்கு – 1/2 கிலோ வெங்காயம் (பெரியது) – 4 பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்) பச்சை மிளகாய் – 6 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லித் தழை – சிறிது தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை: உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கட…
-
- 1 reply
- 5.6k views
-
-
தேவையான பொருட்கள்அரிசி – 1 கப் o புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு o காய்ந்த மிளகாய் – 6 o பச்சை மிளகாய் – 4 o பெருங்காயம் – ஒரு சிட்டிகை o சிறிய வெங்காயம் உரித்தது – 10 o எண்ணெய் – 3 1 /2 மேசைக்கரண்டி o வறுத்த வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி o எள் – 1 மேசைக்கரண்டி எண்ணெயில் வறுத்து பொடியாக்கவும் o காய்ந்த மிளகாய் – 8 o மல்லி – 1 1 /2 தேக்கரண்டி o உளுத்தம்பருப்பு – 3 /4 தேக்கரண்டி o கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி o வெந்தயம் – 1 சிட்டிகை o மிளகு – 1 /4 தேக்கரண்டி (விரும்பினால்) மேலே சொன்ன பொருட்களை 1 /2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். தாளிக்க o கடுகு – 1 /2 தேக்கரண்டி o உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி o கடலைப்பருப்பு – 1 தேக்கர…
-
- 3 replies
- 16.3k views
-
-
செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது. தேவையான பொருட்கள் அரிசி – 1 /2 கிலோ சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ கொத்தமல்லி – 1 /2 கட்டு புதினா – 1 கட்டு பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 250 கிராம் தக்காளி – 250 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம் தயிர் – 1 /2 ஆழாக்கு எண்ணெய் – 1 குழிக்கரண்டி ஏலக்காய் – 2 கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2 மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி தனியாத்தூள் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல…
-
- 11 replies
- 7.2k views
-
-
This is the spicy Sri Lankan chickpea curry served in the cafeteria at St. Joseph's Health Centre. Chef Bala Thangarajah’s chickpea curry is so popular in the St. Joseph’s Health Centre cafeteria, people revolt if it’s not on the menu once a week. They used to complain that it was too hot. Now they complain if it’s not spicy enough. Thangarajah uses Niru brand Curry Flavour, a powdered spice blend of cinnamon, cardamom, curry leaves and fennel. He also uses Niru’s roasted hot Jaffna curry powder, which is red and includes chili, coriander, fenugreek, pepper, cumin, turmeric and fennel. I bought both at Sri Lankan supermarket New Spiceland (5790 Sheppard Ave. E., 6…
-
- 0 replies
- 764 views
-
-
கிகிகி வந்திட்டோம்ல...ஒவனில் பன் வேகிட்டே இருக்கு..படத்துடம் கொலைவெறி செய்முறை விரைவில்... UPDATE: தேவையான பொருட்கள்: கோதுமை மா பால் நீர் ஈஸ்ட் சீனி உப்பு முட்டை வெள்ளைக்கரு சீனிச்சம்பல் செய்முறை: 1. தேவையான பொருட்களை சரி அளவில் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி 3. பாலை லேசாக சூடாக்கி, முறையே சீனி, ஈஸ்ட் போட்டு நன்றாக கலக்கி ஒரு பக்கத்தில் வையுங்கள். 4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள். குழைத்த மா இருமடங்காகி வரும் வரை வைத்திருங்கள்.…
-
- 21 replies
- 6.6k views
-
-
நோய்க்கொரு மருந்து மருந்திற்கொரு விருந்து: காளான் சாதம். [Thursday, 2011-08-11 23:24:55] தேவையான பொருட்கள்: உதிராக வடித்த சாதம்-1 கப் பெரிய வெங்காயம்-2 வெங்காய தாள்- சிறிதளவு இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்-5 மிளகுதூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 2 ஸ்பூன் காளான் - 250 கிராம் செய்முறை: * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை சேர்த்து வதக்கவும். * காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். * பின் அதனுடன் மிளகு…
-
- 12 replies
- 1.1k views
-
-
முட்டை பஜ்ஜி மாலை உணவுக்கு முட்டை பஜ்ஜி மிகவும் ஏற்றது. தேவையானவை முட்டை - 4 கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 தேக்கரண்டி சோடா மாவு - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொறிக்க கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை செய்யும் முறை முட்டைகளை வேக வைத்து இரண்டு பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு அதில் உப்பு, அரிசி மாவு, கேசரி பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் கலந்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அடுப்ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
பீட்ரூட் இலை ரசம் பீட்ரூட் இலை ரசம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. தேவையானப் பொருட்கள் பீட்ரூட் (இலையுடன் கூடியது) - 2 ரசப்பொடி - 2 தேக்கரண்டி தக்காளி 1 பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் - தாளிக்க பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை ' மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேகவிடவும். அதன் இலைகளை கழுவி நறுக்கி வைக்கவும். குக்கரை இறக்கி அதில் ரசப்பொடி, தக்காளி, நசுக்கியப் பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்…
-
- 9 replies
- 1.6k views
-
-
எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.
-
- 9 replies
- 7.7k views
-
-
ஓட்ஸ் ஊத்தாப்பம் தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - ஒரு கப் ரவை - 1 /2 கப் புளித்த தயிர் - 1 கப் துருவிய கேரட், முட்டைக்கோஸ் - 1 கப் கொத்தமல்லித் தழை - சிறிதளவு வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: * மிக்ஸியில் தயிருடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாகஅரைத்துக்கொள்ளவும். * வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * ஓட்ஸ் தயிர் கலவையுடன் தேவையான அளவு உப்பு, ரவை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்னர் தோசைக் கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை ஊற்றி, அதன் மேல் காய்கறி கலவையை நன்றாக தூவ வேண்டும். மொறு மொறுப்பு கிடைப்பதற்காக ஊத…
-
- 10 replies
- 1.6k views
-
-
என்னாங்கடா இது எப்போ பாரு சாம்பார் இட்லி பொங்கல் என்னுகிட்டு! அப்புறம் சைனீஸ் ப்ரைட் ரைஸ்! ...இப்டியே பீட்சா பர்கர்னு ....கத்துக்குங்க!
-
- 3 replies
- 1k views
-
-
யாருக்காவது கறிவேப்பிலை சட்னி செய்ய தெரியுமா? கறிவேப்பிலை சாப்பிட்டால் தலை முடி கறுப்பாக்கவும் அடர்த்தியாகவும் வளருமாம் .......இங்கு பலருக்கு இந்த பிரச்சனையுண்டு
-
- 10 replies
- 3.5k views
-
-
ஸ்பெசி சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு - 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு - 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்(தனியாக மாங்கு மாங்கு என உரித்து அரைக்க தேவையில்லை இப்போ பாக்கெட்டுகளிலே கிடைக்குது..) சின்ன வெங்காயம் 100கிராம் பச்சமிளகாய் - 1 மஞ்சள் பொடி 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள் 2ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் 1/2ஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு செய்முறை சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்…
-
- 20 replies
- 9.1k views
-
-
-
பெரு நெல்லிக்காய் குழம்பு.. தேவையானவை: பெரு நெல்லி- கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 1/4 கப் புளி - கோலிக்குண்டு அளவு மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு நல்லெண்ணய் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறி வேப்பிலை + கொத்துமல்லி சிறிதளவு.. செய்முறை: வாணலில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து அந்த கலவையுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் விட்டு அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நன்கு பாதி பாதியாக கீறி பிளந்த நெல்லிகா…
-
- 7 replies
- 6.3k views
-
-
புதினா சாதம் என்ற மெந்தாபாத் தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலைகள் - 1 கட்டு புதினா இலைகள் - 1 கட்டு சின்ன வெங்காயம் -8 நாட்டு தக்காளி - 3 இஞ்சி பூண்டு பேஸ்டு - 1 பாக்கெட். பச்சை மிளகாய் - 2 (அரைத்தது) மசாலா பொருட்கள்(பட்டை லவங்கம் பிரியாணி இலை) கடலை எண்ணை(மணிலா எண்ணை) - 3 டீஸ்பூன் டால்டா(வன்ஸ்பதி ஆயில்) - 2 டீஸ்பூன் பொன்னி அரிசி (அ) ஐ.ஆர் 50 அரிசி -கால் கிலோவுக்கும் கொஞ்சம் கூடுதல் (செஞ்சி ராஜா தேசிங்கு பிராண்டு.. பொன்னி அரிசி என்றால் கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சி நிபுணர்களால் ஆராய்ந்து தெரிவிக்கபட்டுள்ளது ) உப்பு - தேவையான அளவு செய்முறை: …
-
- 1 reply
- 2.2k views
-