நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
தோசை, வெங்காயச் சட்டினி,பருப்புக்கீரை செய்முறை காணொளியில்
-
- 11 replies
- 5.4k views
-
-
விரால் மீன் குழம்பு தேவையான பொருட்கள்: விரால் மீன் – அரை கிலோ காய்ந்த மிளகாய் – 20 (வறுத்து அரைக்கவும்) தனியா – 8 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) புளி – 100 கிராம் பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 15 நாட்டுத் தக்காளி – 3 எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.…
-
- 9 replies
- 5.7k views
-
-
சிம்பிளான பாகற்காய் குழம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள். பாகற்காய் கசப்பாக இருப்பதாலேயே பலர் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதனை சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதிலும் அந்த பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். இங்கு பாகற்காய் குழம்பை எப்படி கசப்பின்றி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது) பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு…
-
- 7 replies
- 4.2k views
-
-
வெஜிடேபிள் தம் பிரியாணி தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை - 2 மிளகு - 5 பிரியாணி இலை - 3 கருப்பு ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது புதி…
-
- 5 replies
- 2.5k views
-
-
கல்லு றொட்டி . தேவையான பொருட்கள் : கோதுமை மா 1 கிலோ . தேங்காய் 1 . பச்சை மிளகாய் 7 அல்லது 8 . சின்னவெங்கயம் 250 கிறாம் . உப்பு தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியால…
-
- 37 replies
- 4.5k views
-
-
சுவையான spicy chicken noodle soup செய்யத் தெரிந்தவர்கள் செய்முறையைத் தருவீர்களா? சகோ சுவிக்கு நிட்சயம் தெரிந்திருக்கும்..
-
- 15 replies
- 1.3k views
-
-
வாழை தண்டு கூட்டு தேவையானவை வாழை தண்டு – ஒரு ஜான் அளவு துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்) எண்ணையில் வறுத்து பொடிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3 கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி முழுதனியா – ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை – 10 இதழ் சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி செய்முறை 1.வறுக்க கொடுக்க பட்டுள்ளவைகளை வறுத்து பொடிக்கவும். 2. வாழை தண்டை வட்ட வட்ட வடிவமாக நறுக்கி இடை இடையே வரும் நாரை பிரித்து எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். 3. பொடியாக அரிந்த வாழை தண்டில் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வே…
-
- 1 reply
- 7.4k views
-
-
கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்
-
- 0 replies
- 456 views
-
-
இந்த வகை சிக்கன் கோயமுத்தூர் பகுதியில் மிகவும் பிரபலம். அனைத்து ஓட்டல்களிலும் கிடைக்கும். அதிகம் மசாலா இல்லாத உணவு. தேவையான பொருட்கள் சிக்கன் 500 கிராம் நல்லெண்ணை 3 மேஜைக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை 2 கொத்து சிவப்பு காய்ந்த சீனி மிளகாய் 15 வெங்காயம் 2 பெரியது கொத்தமல்லி இலை 1 கைப்பிடி மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி செய்முறை 1. சிக்கனை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கி கொள்ளவும். 2. சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும். 3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும், பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 4. பிறகெ…
-
- 8 replies
- 4.5k views
-
-
இறால் எக் ரைஸ் தேவையானவை: இறால் கால் கிலோ (சுத்தம் செய்தது) முட்டை 3 வடித்த சாதம்/பாசுமதி சாதம் ஒரு கப் பச்சை மிளகாய் 3 பெரிய வெங்காயம் 2 கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான அளவு கொத்தமல்லித்தழை தேவையான அளவு செய்முறை: சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து …
-
- 0 replies
- 541 views
-
-
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். …
-
- 7 replies
- 3.5k views
-
-
கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…
-
- 0 replies
- 750 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
கத்தரிக்காய் மசாலா என்னென்ன தேவை? கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, தேங்காய் -6 பல், இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 5 பல், கடுகு - சிறிது. உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? கத்தரிக்காயை நான்காக கீறிக் கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் கத்தரிக்காயை சேர்க்கவும். மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி அதையும் கத்தரிக்காய் மசாலா கலவையில் ஊற்றி, உப்பு சேர்த்து வ…
-
- 0 replies
- 458 views
-
-
தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்……………2 சின்ன வெங்காயம்………100 கிராம் புளி………………….…………….எலுமிச்சை அளவு தேங்காய்………………………4 தேக்கரண்டி தக்காளி……………….…………. 1 சீரகம்………………..……………1 /2 தேக்கரண்டி பூண்டு………………..…………10 பல் கடுகு ……………………..……….1 /2 தேக்கரண்டி பெ.சீரகம் ……………………..…..1 /2 தேக்கரண்டி மிளகாய் தூள்…………….3 தேக்கரண்டி மஞ்சள் பொடி………………..கொஞ்சம் நல்லெண்ணெய் …………..2 தேக்கரண்டி வெந்தயம்……………………..1 /2 தேக்கரண்டி கறிவேப்பிலை……………….1 கொத்து செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், தக்காளி ,சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும். அடுப்பில…
-
- 2 replies
- 2.4k views
-
-
பல விதமான நாசி கோரிங் செய்யும் பழக்கத்தில் நானே உருவாக்கிய செய்முறை இது. சுவையாகவும், அதே சமயம் இலகுவில் சமைக்க கூடியதாகவும் இருக்கும். இனி செய்முறை: தேவையான பொருட்கள்: சாதம் 1 கப் வெள்ளை பூண்டு + இஞ்சி விழுது 1 மே.க அரைத்த செத்தல் மிளகாய் விழுது / Hot Chilli Paste 1 மே.க ஸ்ப்ரிங் ஒனியன் 1/4 கப் [நறுக்கியது] நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 [சின்னது] முட்டை பொரியல் [தோசை தட்டில் போட்டு எடுத்து சிறிதாக வெட்டி எடுக்கவும்] சோய் சோஸ் 1 மே.க உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1. சட்டியில் எண்ணையை சூடாக்கி வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2. பூண்டு+ இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3. பின்னர் மிளகாய் விழுதையும்,…
-
- 11 replies
- 4.3k views
-
-
உருளைக்கிழங்கு தயிர் கிரேவி இதுவரை உருளைக்கிழங்கைக் கொண்டு குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என்று சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து கிரேவி செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், அதனை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பிரியாணி இலை - 1 கடலை மாவு - 2 டீஸ்பூன் தயிர் - 4 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ம…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிக்கன் - 65 தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் இஞ்சி - 25 கிராம் பூண்டு -4 பல் மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்- தேவையான அளவு. மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி மசாலா பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு (மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்). செய்முறை: 1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும். 3. மிளகுத்தூள், மிளகாய்த்…
-
- 26 replies
- 11.5k views
-
-
இறால் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ இறால் - கால் கிலோ வெங்காயம் - கால் கிலோ தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 2 அங்குலத் துண்டுகள் மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு புதினா - ஒரு கைப்பிடி அளவு உப்புத் தூள் - 2 தேக்கரண்டி பட்டை - 2 துண்டுகள் பிரிஞ்சி இலை - 2 செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசி உடன் பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொ…
-
- 9 replies
- 1.9k views
-
-
கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
கோஃப்தா ரைஸ் சுவைத்து இருக்கிறீர்களா? காலம் காலமா வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ், வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு பழகின உங்களுக்கு ஏதாவது ஒண்ணு புதுசா டிரை பண்ணனும்னு ஆசைப்பட்டீங்கனா கோஃப்தா ரைஸ்தாங்க பெஸ்ட் சாய்ஸ். அத எப்படி செய்யணும்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க. காலிஃப்ளவர் கோஃப்தா மசாலா ரைஸ் தயாரிப்பு நேரம்: 10 நிமிடம் சமைக்கும் நேரம் - 30 நிமிடம் 2 பேர் சாப்பிடலாம். தேவையானவை: பாஸ்மதி அரிசி - 1 கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கோஃப்தா செய்ய: துருவிய காலிஃப்ளவர் - 1 கப் உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்துக் கொள்ளவும்) …
-
- 0 replies
- 1.1k views
-
-
புத்தூர் செயராமன் வஞ்சரம் மீன் பிரை நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : ஈழ தோழர்களுக்காக வீக்கிலி ஆண்டவரிடம் வேண்டிய போது . In Sri Lanka, it is known as "thora".
-
- 0 replies
- 965 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க யாழ்ப்பாணத்தில வளக்கிற சிப்பி காளான் வச்சு இரு கறி செய்வம், இது இறைச்சி கறிய விட ரொம்ப சுவையா இருக்கும், ஒருமுறை இப்பிடி செய்து பாருங்க பேந்து விடவே மாட்டீங்க. செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 659 views
-
-
தேவையான பொருட்கள் : கோதுமை மா - 500 g வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 4 உப்பு - அளவானது தண்ணீர் - அளவானது எண்ணெய் - அளவானது செய்முறை : வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக அரிந்து மாவுடன் உப்பும் சேர்த்து கையால் பிசைந்து பின் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டி சுடும் பதத்திற்கு குழைத்துக்கொள்ள வேண்டும். தாச்சிச் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சாடையாகத் தட்டி நடுவே துளை போட்டு, அடுப்பை அளவாக எரியவிட்டு வடையைப் போட்டு சிறிது நேரத்தில் அகப்பையால் பிரட்டி வேகவிட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்கவேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைக்கலாம். சுடச் சுட உண்ணவும் ஆற…
-
- 12 replies
- 6.1k views
-