Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. இஸ்தான்புல் இளவரசி யோ. கர்ணன் மூன்றுநாளாகப் போக வெளிக்கிட்டு, முடியாமலிருந்தது இன்றுதான் சாத்தியப்படுகிறது. தகவல் கிடைத்ததும் உடனே போக வேண்டுமென்றுதான் வெளிக்கிட்டன். வேற யாருமென்றாலும் போகாமலிருந்து விடலாம். இது வெள்ளைக் காக்கா. அவனுக்கு ஒன்றென்றால் போகாமலிருக்க ஏலாது. எங்கட குடும்பத்தில ஒராள் மாதிரி. ஆனால் கடந்த மூன்று நாட்களாக வெளிக்கிட வெளிக்கிட ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்குது. செல்லடிப் பிரச்சனைதான். ஒரு நாள் நாங்களிருக்கிற வலைஞர் மடத்தில செல்லடியிருந்தது. மற்ற நாள் அவனிருக்கிற மாத்தளன் ஆஸ்பத்திரியடியில செல்லடியாகயிருந்தது. நேற்று இடையில இருக்கிற பொக்கணையில செல்லடி. ஏதாவதொரு இடை பார்த்து போகலாமென்று இருக்கத் தான், இண்டைக்கு விடிஞ்சதில இருந்…

  2. சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன். நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர். துலாபாரம் சினிமா கண்ணீர். தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர். கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை வாசகரின் கண்ணீரை வரவழைப்பதுதான் நோக்கம் என்பது போல் சொல்வது இலக்கியமாகாது. உள்ளார்ந்த சோகம் ஓ என்ற அலறலுடன் இருக்காது. காசுக்காக ஒப்பாரி வைப்பது உள்ளார்ந்த சோகமாகாது. உள்ளார்ந்த சோக…

  3. ஒரு கணத்துக்கு அப்பால் - ஜெயமோகன் வயது வந்தவர்களுக்கானது! அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்…

    • 1 reply
    • 912 views
  4. Started by anni lingam,

    ஏனோ தெரியவில்லை. நான் அழுகிறேன். விழிகளால் வழிகிற கண்ணீரால் நான் அசிங்கமாய் தெரிகிறேன்.ஏக்க விழிகளால் என்னைப்பார்த்த என் தேசத்தின் மகனால் நான் அம்மணமாக நிற்கிறேன்.குமுதினி படகில் பிள்ளையின் இதயத்தில் கத்தியை பாச்சிய கோரத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். கனவுகளில் நான் சுதந்திர மனிதனானேன்.தவறு என்னது இல்லாமல் திசைமாரிப்போனேன்.இன்று கனவினை புதைத்த தேசத்திலிருந்து கண்ணீர் வடிக்கிறேன். குமுதினியால் விட்டை விட்டு வெளியேறிய நான் முள்ளி வாய்க்காலால் எங்கிருந்து வெளியேற.சுயனலமறியாதவீரனின் மகனே உன் அப்பன் எது வந்த போதும் அங்கேயே இருந்தான்.நான் எதுவும் வராமலே ஓடிவந்தேன். நான் என்ன செய்ய அழுவதைத்தவிர.எழு'நில் நட என உன் அப்பன் சொன்னான்.அதே போல மிகப்பெரிய ஆலமரமாய் நின்றான்.விழு…

  5. வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு ந‌டக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். த‌ன‌க்கு இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் …

  6. உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்துத் தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய்க் கிடந்தது. கண்களில் கறுப்புக்கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவதுபோல வட்டமான ஒரு கொண்டை. கல்வீட்டுக்காரர் மக…

    • 1 reply
    • 911 views
  7. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் “தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம…

  8. திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழு…

  9. ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..! சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து, அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும். சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வ…

  10. ■ ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான். இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால் இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனில் உயிரை எடுக்காமல் போய்விட்டான். ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார், "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை…

  11. பிடித்தவர்களுக்கு மட்டும் **************************************************************** பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட…

  12. மதுரை, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பாண்டி-ராமாயி ஆகியோருடைய மகன் ராஜேஷ்கண்ணன். பி.காம். பட்டதாரி. அதே கூடல்நகர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன்-முத்தலட்சுமி தம்பதியினரின் மகள் வைதேகி. இவரும் ராஜேஷ் கண்ணனும் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலிக்கும்போதே இருவரும் சேர்ந்தும் விட்டனர். இதனால் கர்ப்பமானார் வைதேகி. அப்போது அவருக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை. மகள் கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் பதறிப் போனார்கள் வைதேகியின் பெற்றோர். இதையடுத்து தங்களது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் கண்ணனிடம் வற்புறுத்தினர். அவரும் விருப்பத்துடன்தான் இருந்தார். ஆனால் ராஜேஷ் கண்ணனின் பெற்றோர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரி…

  13. இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் ம…

  14. நான் பிறந்தது ஊர் மக்களால் “கீளிச்சந்தை ஆஸ்பத்திரி” என்று செல்லமாக அழைக்கப்படும், அளவெட்டி அரசினர் மருத்துவமனையில் தான். பின் எனது ஆரம்ப மழலைக் காலங்களில், அப்பாவின் வேலை காரணமாக திருகோணமலை, உப்புவெளி, என முதலிருவருடங்கள் கழிந்தன. பெற்றோர்கள் என்னை சல்லியம்மன் கோவில், கோணேஸ்வரர் கோவில் என்று நேர்த்திக்காக கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனது முதல் பிறந்த நாளிற்கு ஐந்து விரலிற்கும் ஐந்து மோதிரம் போட்டிருக்கின்றார்கள். ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை. எல்லாமே அப்பா, அம்மா, மற்றும் என்னை அங்கு வளர்த்தவர்கள், பிற்காலத்தில் சொல்லிய கதைகள். மற்றப்படி திருகோணமலை, என்ன நிறமென்றே எனக்கு இன்றுவரை தெரியாது. போய்ப்பாக்க வேணுமெண்டு ஆசைதான். பார்க்கலாம்! நான் பிறந்த “கீளிச்சந்தை ஆஸ்ப…

  15. பூஞ்சிறகு ரிஷபன் திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன். "பாபு.. நீயும் வா" அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன. திடுக்கிட்டு திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின. ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது. …

  16. தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர். படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது. பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகள…

  17. இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா By சஞ்சீவி ராஜா - பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கைய…

    • 0 replies
    • 903 views
  18. எவளுக்கும் தாயாக..... எஸ். அகஸ்தியர் - சிறுகதை அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-] நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே…

  19. Started by நவீனன்,

    கொடை வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். "" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. ""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். ""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்…

  20. காதல் போயின் மோதல் இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப் போயிடும்...” காதல் உடைவதற்கு எவ்வளவு எளிமையான ஒரு காரணம். என் கண் முன்னே இன்னொரு ஆளுடன் சுற்றி - தாங்கிக் கொள்ள முடியவில்லை. …

  21. காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…

  22. இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும். இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறேவற்றுவது போல் நிறேவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன…

  23. நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…

    • 1 reply
    • 900 views
  24. மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…

    • 4 replies
    • 899 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.