கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பாலாண்ணா, இது உங்களுக்காக மட்டும்.. இன்று தற்செயலாய் தூர தேசத்திலிருக்கும் என் அண்ணன் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் என சாதாரணமாய் சொல்லிவிட என்னால் முடியவில்லை. சிறுவயதிலிருந்து நான் அண்ணன்கள் செல்லம். குடும்பத்தில் பல ஆண்களுக்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பெண்ணாயிற்றே. ஆயினும் எனக்கு என் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களை விட, ஈழத்தில் எங்கள் வீட்டின் முன்னால் இருந்த சகோதரர்களை தான் அதிகம் பிடிக்கும். நாட்டை காக்க வாழ்பவர்களை பிடிப்பதற்கு காரணம் தான் தேவையில்லையே. அப்படி சிறுவயதில் இருந்து அண்ணனானவர்களில் முக்கியமாக மதியண்ணா, முகிலண்ணா, நிலவண்ணா, பாலாண்ணாவை சொல்லலாம். இதில் நால்வரையும் மாவீரராக பார்த்தவள் நான். இன்று அவர்களின் படங்க…
-
- 11 replies
- 2.6k views
-
-
கதிரி எழுதியவர் மானிடப்பிரியன் "இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள். "அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு. "அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது. "அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி! "இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள். என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும். பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
கனவு மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில் என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது. டேய்..! எந்திரி..மணி எட்டாகுது சே..! பயங்கரமான கனவு. என்னடா இ…
-
- 0 replies
- 854 views
-
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.4k views
-
-
உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெ…
-
- 13 replies
- 2.5k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …
-
- 4 replies
- 1.6k views
-
-
மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு. அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது. சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்ட…
-
- 22 replies
- 3.8k views
-
-
உறவும் வரும் பகையும் .வரும் ..... பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர் .மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள் .தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களு…
-
- 8 replies
- 1.8k views
-
-
பரந்து விரிந்து கடல்,கரை கழுவிச் செல்லும் அலைகள்,வளைந்து நெளிந்த தென்னைகள்,இருந்த தென்னைகளுல் ஓங்கி நேராய் வழர்ந்த தென்னைகள் அதிகம்.கவிட்டு வைத்த படகுகள்,என்னதான் கடலோடு நீந்தி வந்தாலும் கவிட்ட பின்னே மணல் ஒட்டித்தான் கிடந்தது.தொடை தெரிய மடித்து கட்டிய சாரம்.தோளில் ஒரு தும்புத்துவாய்.ஏதொ மகாறாஜா தோரணையில் நடை. அந்தோனிபிள்ளையார் படகுகளூடு மணலில் கால் புதைய புதைய நடக்கையில் சிப்பியும், ஊரியும் ஈரபாதத்தை உறுத்தினாலும், உரத்துப்போன பாதத்தோலை ஊடறுக்க முடியாது மண்ணுல் புதையுண்டு கொண்டிருந்தன. சின்னையன் இப்பத்தான் கொண்டுவந்தது,ஒரு பொரியல் ஒரு குழம்பு வைச்சால் போதும்.2 முட்டையையும் அவிச்சு விடு.மணி ஆறாகுது,தம்பிமார் வரப்போறங்கள், மினக்கெடாமல் சமையலை முடி என்ன, நிக்கிலசை வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார் "மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …
-
- 1 reply
- 952 views
-
-
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் க…
-
- 3 replies
- 5.1k views
-
-
நிலையற்ற வாழ்வுடன்..... [ கதை கருத்துக்களம் அரட்டை பகுதிக்கு அல்ல...! ] பாகம்-1 தொடர்கதை ::... நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நிமிடங்களில் அருகில் வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய் இருங்க.…
-
- 1 reply
- 949 views
-
-
தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம். ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது. 'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்த…
-
- 0 replies
- 709 views
-
-
------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------
-
- 1 reply
- 1.4k views
-
-
என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னுடன் கதைத்த விடயம் ஒன்றை இணைக்கிறேன் இதனது தொடர்ச்சியினை எழுதுவது கள உறவுகளின் பொறுப்பு.. அவர்:-தம்பி உவங்கள் சரி வரமாட்டாங்கள் தமிழ்ச்செல்வம்,பால்ராஜ் எண்டு பெரிய தலை எல்லாம் போகுது.. உவங்களால ஏலாது போல கிடக்கு... ஒன்றில் அடிக்கிறதென்டா அடிக்கவேணும் அல்லது சும்மா இருக்க வேணும்.. நான்:- சரி அண்ணா போன மாவீரர் தினத்திட்கு வந்தனீங்களோ அவர்:- இல்லைத்தம்பி மனிசிக்கு வேலை.. மகளை கூட்டிக்கொண்டுவர பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்ததெடாஅப்பு நான்:-வாற பொங்கு தமிழ் 12 ஆம் திகதி நடக்க இருக்கு..இங்கு இருந்து மகிழூந்து என்றால் 30 நிமிடம் தானே அதுக்கு வருவீங்களோ அண்ணா... அவர்:- அதுதான் அப்பு நானும் யோசிக்கிறேன் எத்தின நாளைக்குத்தான் இப்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும் [கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்] வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே. இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும…
-
- 8 replies
- 3.1k views
-
-
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான். தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான். மேலும் சிறிது தூரம் சென்ற அவர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
சிகரத்தை எட்டிய சிறிய தவளை வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு. இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது. போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்….. “வழி மிகவும் கடினமானது” “இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது” “வெற்றிபெ…
-
- 4 replies
- 1.3k views
-
-
கால்கள் பேசினால்..!! கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்.. அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.? ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக…
-
- 38 replies
- 4.5k views
-
-
-
"அது ஒரு வசந்த காலம் .............". துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி ..... பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம். பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு . முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன் .கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று , அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு... .மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு . இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் . .காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு " அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சை…
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்பார்ந்த யாழ்கள உறவுகளே! ஒரு பேப்பரில் தொடராக வெளிவரத் தொடங்கியிருக்கின்ற எனது இந்த பதிவை (ஒரு வகையில் இதுவும் ஒரு வித அனுபவப் பதிவுதான்) யாழ்கள நண்பர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுமாறும் வேண்டிக்கொள்கிறேன். சாய்ந்த கோபுரங்கள் சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்த…
-
- 77 replies
- 21.5k views
-