கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
ஒரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது. அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார். “குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?” “பெண் தொடர்பு!” “புரியவில்லை?” “ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு …
-
- 4 replies
- 5.3k views
-
-
சண்டியர்கள் ஒரு பேப்பருக்காக அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது
-
- 14 replies
- 3.2k views
-
-
எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ? கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின…
-
- 3 replies
- 5.7k views
-
-
அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …
-
- 2 replies
- 1.7k views
-
-
வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார். முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெற…
-
- 4 replies
- 2.2k views
-
-
சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?” “ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான். கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!” ”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!” “ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!” பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது. “சாரி சரவணன்.…
-
- 4 replies
- 2.3k views
-
-
சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தர உயரம். மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது. தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார். தோற்றப் பொலிவில் அவர் காட்டிய முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஒரு நடிகனாக ஆசைப்பட்டார். தினமும் காலையில் கண்ணாடி முன் நின்று பல பாவனைகளில் நடித்து பார்ப்பார். ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் நடிக்க ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுப்பார். குறைந்தபட்சம் டிவி நாடகங்களிலாவது நடித்து திரையுலகுக்குள் நுழைந்து…
-
- 7 replies
- 2.6k views
-
-
தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…
-
- 3 replies
- 1.9k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(விடை தெரியாமல் போன விடுகதை)...ஜம்மு பேபியின் "கானல் நீர்" (தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமா திரையிடபட்டுள்ளது)..கவுஸ் புல் காட்சிகளாக..!! *கதாநாயகர்கள் - 1)டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் நிரோ.. 2)டைகர் பிலிம்சின் மக்கள் கதாநாயகன் "சனதிரள் நடிகர்" முரளி திரைபடத்தில் முரளி... *கதாநாயகிகள் - 1)டைகர் பிலிம்சின் அழகு தாரகை "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் சோபனா.. 2)அறிமுக நாயகி..(அவுஸ்ரெலிய கனவு கன்னி)..கனிஷ்டா திரைபடத்தில் கவிதா.. *கெளரவவேடத்தில் - 1)அறிமுக நட்சத்திரம் "சின்ன குயில்" அனிதா திரைபடத்தில் லக்சனா..!! 2)அறிமுக நட்சத்திரம் "சிரிபழகி" சுபைதா திரை…
-
- 23 replies
- 3.9k views
-
-
அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ. நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா? கட்டாயம் வருவ…
-
- 10 replies
- 2.3k views
-
-
உயிர்த்துளியின் ஓரத்தில் கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது. கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு. எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம். அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறு…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிதறல்கள் சொற்களால் கட்டிய புஸ்பக விமானம் ----- கவிதை அகிலத்தை வாழ்த்தும் ஆனந்தக் கண்ணீர் ----- மழை மனதுக்குள் பூப்பூக்கும் நந்தவனம் -----அன்பு காதலுக்கும் கனவுக்கும் பிறப்பிடம் -----விழி கண்ணுக்குப் புலப்படாத காந்தர்வ சக்தி -----கடவுள் நாதியற்றுப்போன நம்மில் ஒருவன் ----- அநாதை கதியற்றுப் போன காற்றுப் பைகள் ----- அகதி இறையுணர்வால் உடலுணர்வை வென்றவர்கள் ----- துறவி உயிரின் வருகைக்காய் உண்டான பூகம்பம் ----- பிரசவம் அணைக்க அணைக்க அத்துமீறும் காட்டுத்தீ -----ஆசை பாதிநாள் நோயாளி மீதிநாள் சுகவாசி ----- நிலவு உணர்வுகளின் கனவுத் தொழிற்சாலை ----- நினைவு அவனாக அவளாக இப்போ அதுவாக ----- பிணம் உறவுகளை உடைத்துவிடும…
-
- 5 replies
- 1.6k views
-
-
அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க
-
- 14 replies
- 2.6k views
-
-
கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…
-
- 2 replies
- 1.2k views
-
-
கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா. இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ. நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள …
-
- 10 replies
- 2k views
-
-
காட்டாற்றங்கரை அத்தியாயம் 2 ------------------- வன்னிக்கு வருகிற போதெல்லாம் பாலனை யாருமே துயில் எழுப்ப வேண்டியதில்லை. அங்கு எல்லா இசைகளும் எண்ணற்ற இன்ப அழகுகளும் நிறைந்த அந்தக் காடு எப்பவும் கடிகாரங்களோடு அவனுக்காகக் காத்திருந்தது. போத்துக்கீசர் காலத்தில் இருந்தே காலம் காலமாய் ’கும்பிட்டு வாழ்கிலேன் நான்’ என்று நிமிர்கிற தமிழர்கள் புகல் என்று ஒன்றில் ராமேஸ்வரத்துக்கு அல்லது இந்த வன்னிக் காட்டுக்குத் தானே ஓடி வருகிறார்கள். நீண்ட பயணத்தின் உடற் சோர்வுடனும் வழியில் யானையிறவு கிழிநொச்சி மாங்குளம் என்று சோதனைச் சாவடிகளில் ஏறி இறங்கி சிங்கள் வசவுகளில் இழிவு பட்டு மன உழைச்சலுடனும் வருகிற பாலனைக் கணடதும் வரண்ட செம்புழுதியைத் துடைத்துக் கொண்ட…
-
- 18 replies
- 3.3k views
-
-
பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும் சற்று கிராமச்சூழலை அண்டிய பகுதியில் வாழும் மீனா ரொம்ப அழகானவள். பெற்றோருக்கு ஒரேயொரு செல்லமகளான மீனா பருவமடைந்தாலும் இன்னும் செல்லப்பிள்ளையாகவே வீட்டில் வலம் வந்தாள். படிப்பில் கெட்டிக்காரியான அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட போதிலும் படுக்கையை பெற்றோரோடு பங்கிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் கொண்ட மீனா கட்டிலில் பூனைகுட்டி போல மென்மையாக ஆனால் கடுமையான உறக்கத்தில் இருந்தவளை தாய் உலுப்பி எழுப்பியதால் திடுக்கிட்டு எழும்பி சிணுங்கியபடி எழுந்து "என்னம்மா இப்படி அவசரபடுத்தி எழுப்புறீங்க" என்ற முனங்கலோடு கண்ணைக் கசக்கியவண்ணம் குளியலறையை நோக்கிச் சென்றவள் வீட்டினுள் துப்பாக்கியோடு இருந்த இராணுவத்த…
-
- 17 replies
- 2.8k views
-
-
பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான். அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன் “ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார். “மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன். சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார் “தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப…
-
- 9 replies
- 2.9k views
-
-
காட்டாற்றங்கரை அத்தியாயம் 1 கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும் சுடு புழுதி செம் பருந்துகளாய்ச் சுளன்றது. காய்ந்த புதர்கள் கானல் நீரில் அசைந்து முள்ளம் பன்றிகள் போல ஓடின. முதலையின் முதுகுபோலப் பாழாய்க் கிடந்த களர் நிலத்தில் ஒரு மாடு விழுந்து கிடந்தது. அந்த மாட்டின் நோக்கி அலகை நீட்டியபடி காகம் ஒன்று காத்திருந்தது. உலர்ந்து வெடிக்கும் காட்சிகளெல்லாம் ‘ஈழத்தின் திணை பாலை’ என்கிற விவாதத்தையே ஞாபப்படுதியது. பாலை நிலத்துக்கு தனது குடி மக்களைத் தாங்கி வைத்திருக்கப் போதிய…
-
- 13 replies
- 2.7k views
-
-
சுடும் நிலவு சுடாத சூரியன் “இன்று சனிக்கிழமை காலநிலை பூச்சியத்துக்குக் கீழே பத்துப் பாகை என்று வானிலை அவதானநிலைய அறிவிப்பைக் கேட்ட வண்ணம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி வீட்டைப் பூட்டியபின் தன் குளிருடைகளை எல்லாம் சரிபார்த்தபடி காரை வீதியில் இறக்கினாள் மனோகரி. வீதி ஓரம் எங்கும் பனிக்குவியல். இந்தக் குளிரிலும் வீதியில் ஆள் நடமாட்டத்துக்கு குறைவில்லை. அவரவர் தத்தமது கடமைகளைச் செய்வதற்கு குளிரோ மழையோ இங்கு ஒரு தடையாக இல்லை. காரை வெகு கவனமாகச் செலுத்திய மனோகரி பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு பாடசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது நேரம் ஒன்பது மணி. தமிழ் வகுப்புகள் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகள் தாய் மொழியைப் …
-
- 10 replies
- 2.4k views
-
-
பங்குனி மாதம் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். பயம் மட்டுமல்ல படபடப்பு, வெறுப்பு, சோகம், தனிமை என அனைத்தும் ஒன்றாக வந்து கொல்லும். "பள்ளிக்கூடத்துக்கு போகாமல் ஊர் சுத்தி கொண்டு திரியுங்கோ" என அப்பாச்சி பேசும் போது; எனக்கும் புரியவில்லை. என்னை அழைத்து சென்ற அப்பாவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த மாதம் தரவிருந்த பரிசு. பொதுவாக ஆண்டின் இறுதி மாதங்களில் ஊருக்கு செல்வது தான் வழக்கம். அப்பொழுது தானே எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கும். அந்த வருடம் ஆண்டின் இறுதியில் அப்பாவிற்கு வேலையில் விடுமுறை கிடைக்காததால் பங்குனி மாதத்தில் சென்றோம். ஊரில் கொஞ்சம் போரின் கோரம் அதிகமாக இருந்ததால் அண்ணன்களும் தங்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் பங்கர் அருகே நாட்களை கழித்து கொண்டிருந்தார்…
-
- 20 replies
- 3.7k views
-
-
டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்…
-
- 8 replies
- 2.2k views
-
-
வயலும் வைரவரும். இந்தவார ஒரு பேப்பரில் வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரே…
-
- 31 replies
- 6.1k views
-
-
சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது. கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு. பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
அழுக்கு!! ஆக்கம் - களவாஞ்சிகுடி யோகன்..!! அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள். "எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன். "இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?" "ஏன் அங்கிள்?" "ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்." தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வர…
-
- 29 replies
- 5.6k views
-