Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by Thamilthangai,

    சவால்!.... 'அடடா..எப்படித்தான் ஒதுக்கி ஒதுக்கி வைச்சாலும் வைச்ச பொருள் வைச்ச இடத்தில் இருக்கிறதில்லை அலுத்துக்கொண்டாள்" கீர்த்தி. அன்றைய நாளுக்குரிய வேலைகளை காலையில் எழுந்ததும் அட்டவணை போட்டு அதை அசைபோட்ட படியே செய்து செய்து பழக்கப்பட்டவளுக்கு இன்று காலையில் வந்த தொலைபேசிச்செய்தி கேட்டதும் அத்தனையும் மறந்து போச்சு'... கொஞ்சம் பின்னோக்கிப்பார்போமா?. யார் இந்த கீர்த்தி(...@@@@@@@ இது பின்னோக்கி போவதற்கான குறியீடு) சூர்யா,இந்துமதி தம்பதிகளின் ஒரே ஒரு செல்லப்பெண் தான் கீர்த்தி., ஒரே பெண் என்பதால் அவள் கேட்ட அத்தனையும் கிடைத்துவிடும் என்று இல்லை. சூர்யா கனிவோடு கண்டிப்பும் மிக்கவர். அவளை சுதந்திரமாக வளர்த்தாரே அன்றி ஊர் சுற்றும் பிள்ளையாக அல்ல. இந்துமதியோ எப்…

    • 72 replies
    • 11.3k views
  2. சுது மாத்தையாவும் சுடுபாணும். பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்…

    • 42 replies
    • 8k views
  3. அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து…

    • 3 replies
    • 2.3k views
  4. கூகிளுக்கு எனது ஊர் உளவாரம் பதிவு பிரச்சனையில்லையாம் அதனால் அதை திறந்து இப்ப விட்டிருக்கிறார்கள் .அப்பன் மவனே சிங்கன்டா என்ற புளக்கை திறந்து விட ஆராய்ந்து கொள்ள கால அவகாசம் வேணுமாம் எனது ஊர் உளவார அதிக பின்னூட்டம் பெற்ற எனது பதிவுகளில் ஒன்றான இந்த பதிவை ஒரு சோதனை பதிவாக போடுகிறேன் .இந்த பதிவை இதுவரை பார்க்காதவர்களுக்கும் ஒரு வசதிக்காக தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொள்ளும் நோக்குடனும் இதை நான் தொடக்கி வைக்கிறேன். காவலூர் இராசதுரை-ஊர்வாகவற்றுதுறை- எழுத்தாளர் குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர் சில்லையூர் செல்வராஜன்--- சில்லாலை- நட…

  5. 20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும். பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே …

  6. சிறு வயதிலிருந்து கதை கேட்க பிடிக்கும் கதை வாசிக்க பிடிக்காது . அப்படி கதை வாசிக்க வெளிக்கிட்டாலும் சட்டு பிட்டன்று கதையை சொல்லி முடித்து விட வேணும் . கதை சொல்லுறது என்று வெளிக்கிட்டு உந்த ஆலாபனை எல்லாம் செய்து வாறது எல்லாவற்றவையும் கேட்டு அதுக்குள்ளை கதையின் மையக்கரு எங்கை இருக்கு என்று தேடற பொறுமை இல்லாததால் கதை வாசிக்கிறதில் அதிகம் ஆவல் இல்லாமால் போச்சு. எங்கையாவது படம் காட்டி கார்ட்டூன் படம் காட்டி கதை சொன்னால் ரசிச்சு பார்ப்பது உண்டு . இப்படி எனது கதை இருக்கும் பொழுது .சும்மா நடந்து போற நேரங்களிலை என்னுடன் கதைத்து கதை சொல்ல வெளிக்கிட்டான் ஒருவன் .இவனை இவ்வளவு நாட்களாக காணலை யார் இவன் என்று கூட தெரியாது .தெரியாத ஆளான எனக்கு கதை சொல்ல வெளிக்கிடுறான் என்று யோசித்தத…

    • 2 replies
    • 1.2k views
  7. கணக்குப் புத்தகமும் காதலும் இந்தவார ஒரு பேப்பரில் காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக

  8. மூச்சிருக்கும் காலம் வரை“ அப்பா அப்பா” என்று அடிக்கடி என் அன்புச் செல்வங்களின் அழைப்பொலி என் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் புலன்களினூடே மெல்ல இழையோடி இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. ஏன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி விழி மலர்த்தி ஒளி செலுத்த விருப்பம் இருந்தும் கண்முன் இனம் தெரியாத என்னவென்று கிரகிக்க முடியாத பல வர்ண ஒளிவட்டங்கள் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. ஏன்னைச் சுற்றி என் அன்புறவுகளின் அங்கலாய்ப்புகளை என்னால் உணரமுடிந்தும் என் இயக்கங்கள் செயல் இழந்ததால் செயல்பட முடியாமல் கைகளும் கால்களும் கட்டிப் போட்டதுபோல் கனத்துக் கிடந்தன. மெல்லத் தலையை அசைக்கின்றேன். “அம்மா இங்கை பாருங்கோ அப்பா அசைகிறேர். பால் கொஞ்சம் கொடுப்பமா?” என்று என் ஆசை மகள் ஆவலாய்க் கேட்பது கூட எ…

  9. Started by sathiri,

    தீவாளி ஒரு பேப்பரிற்காக தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கெ…

    • 20 replies
    • 4.6k views
  10. ஒரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது. அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார். “குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?” “பெண் தொடர்பு!” “புரியவில்லை?” “ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு …

    • 4 replies
    • 5.3k views
  11. பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம் அடிக்கும். வீட்டுக்கு முன்பாக ஆலமர விஸ்தீரணத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருக்கும். எங்கள் தெருவாசிகளின் வேடந்தாங்கல் அது. அம்மரத்தில் பொன்னியம்மன் இறங்கியிருப்பதாக பூசாரி தாத்தா சொல்வார். இரவு வேளைகளில் உச்சா போவதற்காக அப்பாவை துணைக்கழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருளில் அந்த மரம் மினுக் மினுக் என ஒளிருவதை கண்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் அதற்கு காரணமாய் இருந்திருக்கலாம். மரத்தின் பிரம்மாண்டமும் ஒரு மாதிரியான அடர்த்தி தோற்…

  12. Started by KULAKADDAN,

    கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…

    • 2 replies
    • 1.2k views
  13. Started by லக்கிலுக்,

    எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ? கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின…

    • 3 replies
    • 5.7k views
  14. அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …

  15. வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார். முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெற…

  16. சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?” “ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான். கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!” ”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!” “ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!” பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது. “சாரி சரவணன்.…

    • 4 replies
    • 2.3k views
  17. Started by sathiri,

    வணக்கம் யாழ்உறவுகளிற்கு நீண்ட நாளின் பின்னர் மீண்டும் ஓர் தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதுவும் வழைமை போல உண்மை சம்பவமே நான் 2003 ம் ஆண்டு தமிழ் நாட்டில் சந்தித்த ஒரு ஈழ தமிழ் தாயின் கதை அதை எனதுநடையி்ல் எழுததொடங்குகிறேன் கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்ததில் தொடரும்.....என்றே வைத்தேன் காரணம் கதையின் இறுதியில் புரிந்து கொள்வீர்கள் நன்றி பாகம் 1 தொடரும்....... 2003ம் ஆண்டு நான் இந்தியா போயிருந்தேன் இங்கு பிரான்சில் வேலை பழு நேரமின்மையென்று ஏதோ பசிக்காக இரண்டு தடைவை சில நேரம் இரவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ள நான் இந்தியா போகும் போதெல்லாம் அங்கு காலை மதியம் இரவு என்று வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிடுவது வழைமை. அப்பே…

    • 34 replies
    • 5.3k views
  18. Started by sathiri,

    தர்மஅடி இந்த வார ஒரு பேப்பரிற்காக தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம

    • 25 replies
    • 5.7k views
  19. எழும்படி பெண்பாவாய் ஒரு பேப்பரிற்காக மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை ப…

    • 16 replies
    • 3.4k views
  20. காட்டாற்றங்கரை அத்தியாயம் 2 ------------------- வன்னிக்கு வருகிற போதெல்லாம் பாலனை யாருமே துயில் எழுப்ப வேண்டியதில்லை. அங்கு எல்லா இசைகளும் எண்ணற்ற இன்ப அழகுகளும் நிறைந்த அந்தக் காடு எப்பவும் கடிகாரங்களோடு அவனுக்காகக் காத்திருந்தது. போத்துக்கீசர் காலத்தில் இருந்தே காலம் காலமாய் ’கும்பிட்டு வாழ்கிலேன் நான்’ என்று நிமிர்கிற தமிழர்கள் புகல் என்று ஒன்றில் ராமேஸ்வரத்துக்கு அல்லது இந்த வன்னிக் காட்டுக்குத் தானே ஓடி வருகிறார்கள். நீண்ட பயணத்தின் உடற் சோர்வுடனும் வழியில் யானையிறவு கிழிநொச்சி மாங்குளம் என்று சோதனைச் சாவடிகளில் ஏறி இறங்கி சிங்கள் வசவுகளில் இழிவு பட்டு மன உழைச்சலுடனும் வருகிற பாலனைக் கணடதும் வரண்ட செம்புழுதியைத் துடைத்துக் கொண்ட…

    • 18 replies
    • 3.3k views
  21. சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தர உயரம். மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது. தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார். தோற்றப் பொலிவில் அவர் காட்டிய முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஒரு நடிகனாக ஆசைப்பட்டார். தினமும் காலையில் கண்ணாடி முன் நின்று பல பாவனைகளில் நடித்து பார்ப்பார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் நடிக்க ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுப்பார். குறைந்தபட்சம் டிவி நாடகங்களிலாவது நடித்து திரையுலகுக்குள் நுழைந்து…

    • 7 replies
    • 2.6k views
  22. குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்ற…

    • 16 replies
    • 4k views
  23. சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…

    • 13 replies
    • 2.8k views
  24. தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…

  25. Started by Jamuna,

    டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(விடை தெரியாமல் போன விடுகதை)...ஜம்மு பேபியின் "கானல் நீர்" (தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமா திரையிடபட்டுள்ளது)..கவுஸ் புல் காட்சிகளாக..!! *கதாநாயகர்கள் - 1)டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் நிரோ.. 2)டைகர் பிலிம்சின் மக்கள் கதாநாயகன் "சனதிரள் நடிகர்" முரளி திரைபடத்தில் முரளி... *கதாநாயகிகள் - 1)டைகர் பிலிம்சின் அழகு தாரகை "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் சோபனா.. 2)அறிமுக நாயகி..(அவுஸ்ரெலிய கனவு கன்னி)..கனிஷ்டா திரைபடத்தில் கவிதா.. *கெளரவவேடத்தில் - 1)அறிமுக நட்சத்திரம் "சின்ன குயில்" அனிதா திரைபடத்தில் லக்சனா..!! 2)அறிமுக நட்சத்திரம் "சிரிபழகி" சுபைதா திரை…

    • 23 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.