கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
நான்காவது கொலை - கருணாகரன் ‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம். நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். …
-
-
- 1 reply
- 507 views
-
-
மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி ”சும்மா சாப்பிடுங்க” பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான். வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டை…
-
- 0 replies
- 506 views
-
-
அரளிக்கொட்டை நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள். …
-
- 0 replies
- 500 views
-
-
லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி தமிழில்: சுகுமாரன் டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியா…
-
- 0 replies
- 497 views
-
-
சென்றிப் பெடியன் தவாண்ணை யாழ்ப்பாணம் ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு, வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய் அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம். சண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது. இந்தியன் ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர் எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை. இருந்திட்டு எப்பவாவது ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் கு…
-
- 0 replies
- 488 views
-
-
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இ…
-
- 0 replies
- 488 views
-
-
படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந…
-
- 0 replies
- 487 views
-
-
"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வை…
-
- 1 reply
- 487 views
-
-
"காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்ப…
-
- 0 replies
- 485 views
-
-
-
ஒரு நிமிடக் கதை: எள்ளாமை! வங்கியில் என் உதவியாளர் நாகுவின் யோசனைப்படி, அப்பிரமுகரை நேரில் சந் தித்து காசோலையைப் பெற்றுவரலாம் என்று காரில் புறப்பட்டோம். நாகு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தார். சற்று நேரத்தில் நாகு என்னிடம், “நீங்கள் காரிலேயே இருங்கள். நான் அவர் எங்கிருக் கிறார் என்று விசாரித்து வரு கிறேன்” என்று சொல்லிச் சென்றார். கார் வணிக வளாகத்தின் எதிர் புறம் நின்றது. வளாகத்தின் முன்புறம் பூக்கடை. அது மகாலிங்கத்தினுடையது.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் மேலாளராக பணி யேற்ற போது, மகாலிங்கம் அவரது பூக்கடைக்காக ஒரு சிறிய தொகையை கடனாகக் கேட்டார். வாராக் கடன் அதிகமுள்ள அக் கிளையில் மேலும் அதை அதி கரிக்க வேண்டாமென்று மறுத…
-
- 0 replies
- 475 views
-
-
முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன் அதிகாலை ஆரவாரங்களுக்கிடையே மனிதக் குரல் போல ஒரு சத்தம் தொனித்தது. அந்தரித்து வெளியேறும் ஈனக் குரல் போன்ற ஒலி. வாசலில் ஒரு சிறுமி பிளாஸ்டிக் வாளியுடன் நின்றிருந்தாள். அவளது ஒருபக்க கன்னம் தீயில் வெந்து சதைகள் உருக்கி வார்த்த ஈயக்குழம்பாட்டம் பொத்தென்று நின்றது. ஒரு கண் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக உற்றுப் பார்த்தால்தான் விளங்கும் போல் இருந்தது. அந்தப் பக்கப் புருவமும் சீரின்றி தழும்பு போல தெரிந்தது. இலேசாக தலை ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு சீரற்ற அசைவு போலிருந்தது. பேசும் போது எதையோ மென்று முழுங்குவது போல தொண்டை அசைந்தது. சில கணங்கள் திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பஷீர். வீட்டுக்கூரையில் காகங்கள் எழுப்பும் சன்னத ஒலியை…
-
- 0 replies
- 470 views
-
-
வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது.…
-
-
- 2 replies
- 469 views
-
-
தெரிவு - சோம.அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பான்…! என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே த…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
சாட்சிகள் எதுக்கடி ? எனும் கதை மார்கழி மாதத்து பனித்துளி எனும் வலைப்பூவில் தாட்சாயணி யால் எழுதப்பட்ட கதை. இதுவரை கவிதை, சிறுகதை தொகுப்பு என பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கதையை வலைப்பதிவில் இருந்து பிரதி எடுத்து இணைக்க முடியாத படி வலைப்பதிவை அமைத்துள்ளார். நேரம் உள்ளவர்கள் வலைப்பதிவில் சென்று படித்துப்பாருங்கள். http://sthadsayanee.blogspot.ca/2012/08/blog-post_21.html
-
- 0 replies
- 463 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்ட…
-
- 2 replies
- 460 views
-
-
'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் …
-
- 0 replies
- 459 views
-
-
அவனை எனக்குத் தெரியும் ப.தெய்வீகன் தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில் சென்று அமர்ந்தேன். தன்னால் சுமந்துகொண்டு நடக்க முடியாத இரண்டு பெரிய படச்சட்டங்களுடன் ஒரு மூதாட்டி வந்தார். எனக்கும் அவருக்கும் இடையில் பொலித்தீன் மூடிய அந்தப் படச்சட்டங்களை இரும்புக் கதிரையில் சாய்த்து வைத்தார். அவை கீழே விழுந்துவிடக்கூடாத கவனத்தோடு அணைத்தபடி அருகிலி…
-
-
- 3 replies
- 459 views
- 1 follower
-
-
"பாகப்பிரிவினை" குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும் அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி 4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக …
-
- 0 replies
- 458 views
-
-
Where are you from? - - வ.ந.கிரிதரன் - "டாக்ஸி கிடைக்குமா?" வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன். "Wher…
-
- 1 reply
- 456 views
-
-
"அப்பாவின் பேனா..!" அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது? இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யா…
-
- 0 replies
- 455 views
-
-
ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே…
-
- 0 replies
- 454 views
-
-
77 வயது, மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன். இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம். இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்.இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல, இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டுஎண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக,போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது, முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.கடைசி மருமகளி…
-
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் -இளங்கோ 1. நான் கொழும்பில் போய் இறங்கியபோது வெயில் எரித்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதில் வெளியில் போகவும் எரிச்சலாக இருந்தது. இந்தப் பயணத்தின்போது அவளை எப்படியாகினும் தவறாது சந்தித்துவேண்டுமென நினைத்திருந்தேன். அவள் முள்ளிவாய்க்காலுக்குள் கடைசிவரை இருந்து தப்பி வந்தவள். கொழும்பிலும், தனது ஊரிலுமாக மாறிமாறி இப்போது வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளை அவளின் ஊரில் சென்று சந்தித்தல் அவ்வளவு எளிதில்லை என்பதால், எப்படியேனும் கொழும்பில் சந்தித்தால் நல்லது என்று தோன்றியது. நான் எழுதுவதைக் கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக வாசித்துக் கொண்டிருக்கின்றவள். ஆனால் அண்மையில்தான் சோஷல் மீடியா மூலம் தொடர்புகொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருந்தோம். …
-
- 0 replies
- 450 views
-
-
"காலம் மாறும் கவலைகள் தீரும்?" 'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது! அவன் அப…
-
- 0 replies
- 449 views
-