கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வணக்கம் சகோதரர்களே, இத்துடன்"புபாள ராகங்கள் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற என்னுடைய அக்கரைப் பச்சை என்ற சிறுகதையை இணைக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை ஆஆஆஆவலுடன் (அடேயப்பா எவ்வளவு ஆவல்) எதிர்பார்க்கிறேன் அன்புடன் மணிவாசகன் அக்கரைப் பச்சை இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். விடிந்தும் விடியாத அந்தப் பொழுதின் குளுமையை, அமைதியை, அழகை ஒரே நொடியில் அஸ்தமிக்கச் செய்த அந்தச் சத்தம் ஊரையே பரபரப்படையச் செய்கிறது. உயிர்ப்பலி எடுப்பதற்காய் யமதர்மன் 'பொம்மர்' உரு எடுத்து வந்து விட்டான். "தம்பி சத்தம் கேக்குது. எழும்பி பங்கருக்கை ஓடடா" சொல்லிக் கொண்டே ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீராங…
-
- 27 replies
- 5.6k views
-
-
............................................................................... இன்னும் விடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்துகொண்டிருக்கின்றன. சூரியனைத் துயிலெழுப்ப வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் அடிக்கடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுச் சேவல், இருளரக்கன் அகலப் போகிறான் என்ற குதூகலத்தில் பாடிக் களிக்கும் புள்ளினங்கள், சாதகம் பண்ணுவதாகக் கூறிக்கொண்டு அக்கம் பக்கத்தாரின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்வீட்டுப் பென்சனியர் .... எல்லாம் வழமை போலத் தானிருக்கின்றன. "எழும்பித் தேத்தண்ணியைக் குடியுங்கோவன். விடிஞ்செல்லே போச்சுது" சாந்தியின் அதட்டலுடன் தான் எனக்கும் விடிகிறது. நான் கைப்பிடித்தவள் தான் சாந்தி. இன்னும் சரியாகச் ச…
-
- 18 replies
- 3.8k views
-
-
அந்தக் கிழவனைக் காணவில்லை நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறா
-
- 5 replies
- 1.9k views
-
-
காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவ…
-
- 25 replies
- 5.9k views
-
-
ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது. இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை. வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள். கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள். முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத…
-
- 6 replies
- 1.9k views
-
-
1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_09.html
-
- 15 replies
- 3.5k views
-
-
மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள். அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த த…
-
- 15 replies
- 3.8k views
-
-
சிறகுகள் வேண்டும் எனக்கு என் மேசையில் இருந்த கடிகாரம் மணி 7 என காட்டியது. வேலைக்கு காலை 6 மணிக்கு வந்தேன். வேலையும் இன்று அதிகம் தான். இப்பொழுது வேலை அனைத்தும் முடிந்தும் வீடு செல்ல மனம் வரவில்லை. போனால் என்ன புதிதாக நடக்கும்? வழமையான புராணம். அதே கேள்விகள். அதே சந்தேகங்கள். இந்த 2 வருடத்தில் நடந்த விடயங்கள் "இப்படி ஒரு வாழ்க்கையா?" என சலித்துக்கொள்ள வைத்துவிட்டது. பெரியம்மா, மாமா, மாமி , சித்தப்பா, சித்தி என்று குடும்பத்தில் அனைவருமே என்னை தான் குறை சொல்கின்றார்கள். அம்மா அப்பா சொல் கேட்பது இல்லையாம்! இவர்கள் கேட்டார்களா என அப்பப்பாவிடம் கேட்க வேண்டும். நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு யோசிக்கும் சக்தி கூட இல்லையா? இத்தனை வருடங்களில் ந…
-
- 30 replies
- 8k views
-
-
இது யார் தப்பு?? சிட்னி முருகன் கோவில்! எம்மில் பலருக்கு வாழ்வோடு ஒன்றின போன ஒரு விடயம். பலருக்கு இது ஒரு ஒன்றுகூடி பேசுமிடம். பலருக்கு இது வாங்கிய புடவையையும், நகைகளையும் போட்டு மினுக்குமிடம். சிலருக்கு இது வியாபார ஸ்தாபனம். சிலருக்கு இது வருங்கால துணையை கண்டுபிடித்த இடம். நூற்றில் ஒருவருக்கு இது இறைவனை துதிக்கும் இடம். அந்த நூற்றில் ஒருவரின் கதை...ஒருத்தியின் கதை. இன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய மாணிக்கம், சகுந்தலா தம்பதியினரின் ஒரே மகள் சரண்யாவின் வாழ்க்கை கதை. 2002 ஆம் ஆண்டு சிட்னி முருகன் வருடாந்த தேர்த்திருவிழா. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய வந்த தமிழர்களுக்கு முதன் முதலில் ஒரு முழ…
-
- 44 replies
- 6.8k views
-
-
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் சல சலப்புடன் இருந்த வகுப்பு அறை அமைதியாகின்றது. ஆனாலும் நம்மிடையே அடக்க முடியாத சிரிப்பு. அந்த மாணவனோ ஏதும் அறியாத மாதிரி எழும்பி நின்று "குட் மோர்னிங் சேர்" என்று கூற வாயை பொத்தியபடி நாமும் எழுந்து நின்றோம். பதில் வணக்கத்துடன் வந்தவர் இருங்கள் என்று சொல்லாமல் தான் மட்டும் கதிரையில் இருந்தார். எல்லோரையும் வடிவாக பார்த்தார். அவரின் பூனைக்கண்ணை பார்க்க நமக்கு பயம் என்றபடியால் தலையைக் குனிந்து கொண்டு இருந்தோம். கடைசியாக எல்லோரையும் இருத்திவிட்டு "நீ மட்டும் நில்லு" என்று என்னை சுட்டிக்காட்டிச் சொன்னார். என் மனதுக்குள் போராட்டம் என்ன இந்த வாத்தி என்னை மட்டும் எழுப்பி விட்டிருக்கு, நான் ஒன்றுமே செய்யலையே என்று யோசித்தபடி குழ…
-
- 41 replies
- 7.2k views
-
-
இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்.. சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொ…
-
- 49 replies
- 11k views
-
-
ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2
-
- 2 replies
- 1.9k views
-
-
மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6.…
-
- 16 replies
- 3.6k views
-
-
அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..
-
- 1 reply
- 1.4k views
-
-
இனிய நினைவுகளின் வாசம். நன்றி - தமிழமுதம் - http://tamilamutham.net/amutham/index.php?...id=245&Itemid=1
-
- 5 replies
- 2k views
-
-
எழுதியவர் ஷண்முகி tanilamutham அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டேஇ படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ளஇ நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது. என் சின்னச் சின்ன தேவைகள்இ என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால்இ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா "இனிய பிறந்த நாள் வாழ்த்த…
-
- 3 replies
- 2.5k views
-
-
சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள். "இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலு…
-
- 5 replies
- 2.7k views
-
-
வாய் அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்.... எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது... திகைத்து நின்றேன்... கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது... அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்.. கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில…
-
- 10 replies
- 2.3k views
-
-