கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
#படித்ததில்_பகிர்ந்த்து 2500/- தண்டப்பணத்தை செலுத்த முடியாத வயோதிபர் 07 ஆண்டுகள் சிறையில்....!!! எனது மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்... ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது... " மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று " ! நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில்த் தொற்றி ஏறிக் கொண்டேன். அப்போது என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிலிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதணைக்க…
-
- 2 replies
- 968 views
-
-
மனிதம் ரிஷபன் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். 'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில். "வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன். மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான். "கேசட் கொண்டு வந்தியா" குரல் என்னையும் மீறி பரபரத்தது. வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்.. "பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்…
-
- 0 replies
- 928 views
-
-
செருக்கைத் துறந்த சுகர் நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே. பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது. இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1 முதலில் சில வார்த்தைகள். சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்த…
-
- 0 replies
- 997 views
- 1 follower
-
-
கடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன் ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது பெருமளவிலான ஆசைகளைத் தோற்றுவிக்கும் பருவம். அப்பர…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிறிஸ்துமஸ் லைட்ஸ் – தன்ராஜ் மணி “ரூப், விண்டோ எல்லாத்துலயும் நிறைய… நிறைய்ய்ய்ய லைட்ஸ் வேணும் இந்த இயர்,” கைகளை அகல விரித்து சுவர் அகலத்திற்கு நீண்டிருந்த சாளரத்தின் முன்நின்று குதித்துக் கொண்டே சொன்னான் டெரி. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவதாஸ் ஐபேடில் இருந்து தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரித்தார். “இங்க வா,” என்றார் ஐபேடை சைட் டேபிளில் வைத்தபடி. ஓடி வந்து, வந்த வேகத்தில் தாவி, கால் முட்டியைத் தன் அப்பாவின் மடியில் அழுத்தி, முகத்தை அவர் மார்பில் பதித்து, கட்டிக் கொண்டான். வலியில், “ஐயோ,” என்று கத்தி விட்டார் தேவதாஸ். “எத்தன வாட்டி சொல்றது உனக்கு. இயர் த்ரி போய்ட்ட, இப்படி வந்து எம் மேல குத…
-
- 2 replies
- 1.2k views
-
-
போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம் **பிரபாஅன்பு** அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை. சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..? உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுத…
-
- 2 replies
- 1.5k views
-
-
உரு – ப. தெய்வீகன் 1 மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று லோட்டன் வீதி வழியாக வேலக்கை பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிப் போவார்கள். எனக்கு பத்து வயதாக இருக்கும் போது இந்தக் காளி கோவிலில் தான் முதல் தடவையாக காவடிக்கு முள்ளுக் குத்துவதைப் பார்த்தேன். அன்றைய தினம் வேலக…
-
- 1 reply
- 1.1k views
-
-
ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும். பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒர…
-
- 1 reply
- 1.3k views
-
-
சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான். ”நான் போறேன்” சண்முகம் விடவில்லை. “நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.” கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா’ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை. மணிவேல் தணிந்த குரலில் சொன்னான். “உடன…
-
- 3 replies
- 1.6k views
-
-
கடந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை. இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. *********"**"**""""************************* இத…
-
- 0 replies
- 1.1k views
-
-
இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும…
-
- 0 replies
- 618 views
-
-
செல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான். ‘‘சொல்லும்மா...’’ ‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள். செல்போனை ஏந்தியிருப்பது வலது கையா இடது கையா? அது ஊன்றி நிற்கும் காலை பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை ந…
-
- 3 replies
- 985 views
-
-
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் - ரிஷபன் கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல" கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. "வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக. "பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா..…
-
- 5 replies
- 7.3k views
-
-
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது. அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார். பக்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
சாரதா - இமையம் இடித்துப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. “ஊருபோயி சேருறவர நின்னுக்கிட்டுத்தான் போவணும்போல இருக்கு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். மறு நிமிஷமே ரிசர்வ் கோச்சில் எப்படி இடம் காலியாக இருக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார். நிற்பதற்கு இடம் கிடைத்ததே பெரிது என்று நினைத்தார். தாம்பரத்தில் ஏறியவர்களால் கோச்சில் நின்றுகொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. “ரிசர்வ் கோச்சில எதுக்கு ஏறுனீங்க? அன்ரிசர்வடு கோச்சுக்குப் போங்க” என்று டிடிஇ கத்துவாரோ என்ற கவலை வந்தது. “கோச்சுல காலவச்சி நிக்ககூட எடம் இருக்காதே”…
-
- 4 replies
- 2.1k views
-
-
#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) "அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...?" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். "எப்ப செத்துச்சு "_ அந்த கிழவி. "இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. " "நெஞ்சுவலி.' "அடக்கொடுமையே.." "நாங்க இந்த வீட்டுக்கு குடி…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார் இளங்கோ-டிசே 'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அது வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாடுபட்ட சிலுவையள்-சிறுகதை-தமிழ்க்கவி காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு. கால்களை அவ்வப்போது வழுக்கிக் கொண்டிருந்தது. அதென்ன, புல் இல்லாத இடத்தில் கால் பட மண் ஒட்டுது. அந்தக்காலை புல்லில வைக்க பனி நனைக்குது. வழுக்கத்தானே செய்யும் என்றாலும், அவளுடைய நடையில் ஒரு கொஞ்சமும் வேகம் குறையவில்லை. அதுமட்டுமல்ல அவளுடைய தலையில் ஏற்றியிருந்த சுமைகூட அப்படியே இருந்தது. அவளுடைய ஒருகையில் அரிவாள் அவளுடைய கைவீச்சுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தது. மறுகையில் தண்ணீர்க்கலயம். அதன் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கில் பிடிக்கப்பட்டிருந்தது. தலைச்சுமை சுருட்டி வைத்த சும்மாட்டில் சிவனேயென்று கிடந்தது. என்னதான் வேகமாக நடந்தாலும் அவளுடைய உடலில் இன்றைக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அகதியின் பள்ளி September 27, 2019 - பா.ரமேஷ் · இலக்கியம் / சிறுகதை டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த மணி , ஒரு பெட்டிச் செய்தியை பார்த்து , புருவத்தை அகல விரித்தவன் பேப்பரை வாகாக நாலாய் மடித்து , செய்தியை கண்களால் ஜூம் செய்தான் “ ஏலேய், சிவா இங்க பார்ரா ,பள்ளிக்கூடத்தில பிள்ளைகளை சேக்குறதுக்கு ,டி.சி தேவையில்லையாமுல்ல, பேப்பர்ல போட்டிருக்கான்” என்றான். “ அட ஆமாம்ப்பா 2010 லையே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருச்சுப்பா” , இதுக்கு ஆர்.டி.இ 2009 சட்டமுன்னு பேரு “என்றான் சிவா. “ஏப்பா சிவா , நாம படிக்கிறபோது , ஒரு பள்ளிக்கூடத்தில சேரணுமுண்டா எவ்வளவு கஷ்டமுப்பா .” “அன்னைக்கி, டி.சி இல்லாம எவனாச்சும் சேப்பானா ?” என்றான் மணி. “ ஏய் ,டி.சி மட்…
-
- 0 replies
- 766 views
-
-
-
உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் ஏதோவொரு வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. சன்னலைத் திறந்து வெளியே வேடிக்கை பார்த்தேன். பலாமரத்தில் அணில்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறிய ஆசுவாசம் பரவியது. அவசர அவசரமாக என் பாடசாலை உடைகளைக் களைந்து, மாற்றுடை மாற்றிவிட்டு சாப்பாடு மேசைப்பக்கம் சென்றேன். ஏற்கெனவே போட்டு மூடிவைத்திருந்த மதியத்து சோறு, கறிகளுடன் ஆறிப்போய் இருந்தது. சுவரிலிருந்த மணிக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். இரண்டு நாற்பது. இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன வகுப்புத் தொடங்க. பாதிவரை சாப்பிட்டுவிட்டு, கொப்பிகளோடு லுமாலா சைக்கிளில் ஏறி மிதித்தேன். வெயில் முதுகில் ஊடுருவிச் சுட்டது. செம்மண் பாதை வளைந்து நெளிந்து சென்று தார் வீதியில் ஏறியது. இருப…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
' காற்றோடு போன கனவுகள்’ விமர்சன உரையில் கவிஞர் கு.கிலேசன் நாவிதன்வெளி இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளியில் கவிமணி கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜாவும் நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசனும் நூல் ஆய்வுரையினை கலைஞர் ஏ.ஓ.இ.அனல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள். நூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் தமதுரையில்: சிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல. காற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந…
-
- 0 replies
- 964 views
-
-
பயணம்: கேரளா/தமிழகம் சில தெறிப்புகள் இளங்கோ-டிசே கொச்சியில் இருக்கும் கலைக்கூடங்கள் என்னை எப்போதும் வசீகரிப்பவை. கடந்தமுறை கொச்சியிற்குச் சென்றபோது Kochi-Muziris Biennale நடைபெற்ற காலம் என்பதால் கலைகளின் கொண்டாட்டமாக இருந்தது. இம்முறை அந்தக் காலம் இல்லாதபடியால் நிரந்தரமாக அங்கே இருக்கும் கலைக்கூடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒருநாள் முழுதும் அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தக் கலைக்கூடங்களில் பொதுவாக முன்பக்கத்தில் இவ்வாறான ஓவியங்கள் பார்ப்பதற்கும்/ (சிலவேளைகளில்)விற்பதற்கும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதைத்தாண்டிச் சென்றால் cafeக்கள் உள்ளே இருக்கும். இந்த இடங்களில் தனியே ஓவியங்கள் என்றில்லாது இசை, இன்னபிற விடயங்களும் நிகழ்ந்தபடி இருக்கும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
1. ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான். ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவன…
-
- 3 replies
- 1.6k views
-