Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சத்திய போதிமரம்!… ( சிறுகதை ) கே.கணேஷ். November 05, 2018 in: கதைகள் சிறப்புச் சிறுகதைகள் (17) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கே.கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என…

    • 2 replies
    • 1.3k views
  2. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 அகரன்November 02, 2018 in: நிகழ்வுகள் கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும் முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.) இரண்டாவது பரிசு இலங்கை …

  3. இனி, மின்மினி -புதிய க்ரைம் தொடர் ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம் நியூயார்க் நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொ…

  4. ஜெசிந்தாக்கும் எனக்கும் டும் டும் டும் கஜரதன்-நாகரத்தினம் என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு குடுத்திட்டு இருந்தன். அவனுக்கு புரியுதோ இல்லையோ அப்பியோடா உண்மையாவா என்டு ரியாக்சன் குடுத்துக்கொண்டு நின்டான். மத்த பெடியங்கள் பெட்டைகள் அவையவை அவையவைக்கு தெரிஞ்சத அலம்பிட்டு இருந்தாங்கள். அப்ப வகுப்பே எங்கட சாகவச்சேரி சந்தை போல அவளவு அமைதியா இருந்திச்சு (ஹீ ஹீ ). ஒருத்தன் சந்தோசமா இருந்திட கூடாதே அடுத்தவனுக்கு வயிறு எரிஞ்சுடுமே அப்பிடி பக்கதில கணித பாடம் எடுத்த சேர் ஒராலுக்கு எரிஞ்சுட்டு போல…. எங்கட வகுப்புக்கு வந்து உங்கட்வகுப்பு மிஸ் வராட்டி அவாண்ட பாட புத்தகத்தை எடுத்து எல்லாரும் படியுங்கோ என்டுட்டு …

  5. Started by அபராஜிதன்,

    எனக்கு 'அகிலா'வைப் பிடிக்கும் ரிஷபன் திருவானைக்காவல்வாசியான எனக்கு 'அகிலா'வைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புதிதாய் டிரையினிங்கிற்கு வந்திருந்த நான்கு பெண்களில் அகிலாவும் ஒருத்தி. ரோஸ்மேரி, அகிலா, வனஜா, தமிழ்செல்வி நான்கு பேரும் எதிரில் நிற்க என்னை அறைக்குள் அழைத்த என் பாஸ் அகிலாவைக் காட்டினார். "யூ டேக் கேர் ஆஃப் ஹர்" என்றார். பார்த்த உடன் முதலில் பதிவான தகவல்கள் இரண்டு. அகிலா சற்று அமைதியான சுபாவம். பெரிய அகலமான ஆழமான கண்கள். "உங்களுக்கு ஏதாச்சும் நிக் நேம் உண்டா, ஸ்கூல் டேய்ஸ்ல " என் அறைக்கு வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி. மனசுக்குள் 'முட்டைக் கண்ணு' அகிலா கேள்வி புரியாமல் விழித்தபோது கண்கள் இன்னும் அழகாய்…

  6. பாதிக் குழந்தை!… பித்தன். October 14, 2018 சிறப்புச் சிறுகதைகள் (15) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – காதர் மொகைதீன் மீரான் ஷா எழுதிய ‘பாதிக்குழந்தை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். “உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள். நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத…

  7. மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி) pro Created: 31 October 2016 வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக நீளமானதாயிருக்கும். எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்! தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக…

  8. ஜூட் - அனோஜன் பாலகிருஷ்ணன் வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல…

  9. கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்! ஜீ. உமாஜி pro Created: 27 November 2016 செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்ச…

  10. வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன் இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா என்று யோசிக்கச் சங்கடமாகவிருந்தது. ஜெயந்தனைக் காதலித்து கடைசியில் ஹரியை கல்யாணம் செய்துகொண்டபோதும் ஜெயந்தனைப் பற்றி நான் ஹரியிடம் வாயே திறந்தது இல்லை. ஜெயந்தனை சந்தித்தது…

    • 8 replies
    • 1.3k views
  11. சுருக்குப் பை By சிந்துஜன் நமஷி ஒரு கார்காலத்தின் இரவில் இடி, மழை, மின்னலொடு என் வாழ்க்கைக்குள் வந்தவன் காந்தன் அண்ணா. காட்டாறு தாண்டிப் போன நிலம் போல என் தளத்தின் நியாயங்களை எல்லாம் கலைத்துவிட்டு போனவன் . ஒரு கள ஆய்விற்காக அப்போது நான் பியகமவில் இருந்தேன். அழகான மலையடி வார கிராமம் அது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் என்ற பெயரில் பல தொழில்சாலைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருந்ததால் தூர இடங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்குவது பெரும் வியாபாரமாக மாறிப்போய் இருந்தது. ஆட்டோக்காரன் தான் என்னை ‘மெனிக்கே’ வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். சிங்களத்தில் ‘மெனிக்’ என்றால் மாணிக்கம் தவிர அவளுக்கும் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…

    • 1 reply
    • 763 views
  12. மௌனங்கள் கலைகின்றன - 2 முட்டிய விழிகளும், முதல்வலியும் வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும். …

  13. மௌனங்கள் கலைகின்றன. கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன். முகட்டு ஓடு பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான…

  14. சுகமே….. சுவாசமே…….. ஆப்பிள் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தபடி இதமான தென்றல் சாளரத்தினூடாக அந்த அறைக்குள் நுழைந்துகொண்டிருந்த்து. சாளரத்தின் திரைச்சீலைகளை ஒதுக்கிய மைதிலி முகிலுக்குள் ஒளிந்தும் தெரிந்தும் விளையாடும் வெண்ணிலவை இரசித்தபடி ஆப்பிள் பூக்களின் நறுமணத்தில் சொக்கிப் போய் நின்றாள். மைதிலி என்னை நேசித்த ஒரே காரணத்திற்காக தனக்கான அனைத்தையும் துறந்தவள். பெற்றோர் கூடப்பிறந்தவர்கள், மதம் , அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வசதிகள் குறைந்த என்னை மட்டுமே ஏற்று இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவள். கடந்த ஆறு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மழலைச் செல்வம் இன்னும் சில மாதங்களில் எங்கள் கைகளில் தவழும். உப்பி மேடு கட்டிய வயிற்றைத் தடவியப…

  15. புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... புதுப் பெண்சாதி கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வ…

    • 1 reply
    • 2.3k views
  16. நள்ளிரவு!… அ.ந.கந்தசாமி. சிறப்புச் சிறுகதைகள் (14) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – அ.ந.கந்தசாமி எழுதிய ‘நள்ளிரவு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல…

    • 1 reply
    • 1.4k views
  17. கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா ‘எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கென வாழாத் தலைவன்!’ என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான். குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே எப்போதும் வலம் …

  18. கனாக் கண்டேன் தோழா கதைகள் கனாக் கண்டேன் தோழா - ராஜேஷ்குமார், சிறுகதை ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் நியூஜெர்ஸி வெள்ளை வெளேரென்ற உறைபனியில் இருக்க, என் மனதும் அடிவயிறும் நூற்றுப் பத்து டிகிரி உஷ்ணத்தில் தகித்துக்கொண்டு இருந்தது. …

    • 1 reply
    • 1.1k views
  19. ஸ்பெயின் - 01 இளங்கோ-டிசே ஐரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது. La Sagarida Familla (Spain) ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டு…

  20. ஸ்பரிசம் - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: செந்தில் சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த சாயம்போன இருட்டிலும் உடலின் மீது போர்த்தியிருந்த வெள்ளை வேட்டி மட்டும் பளிச்செனத் தெரிந்தது. சுமைதாங்கிக் கல்லைப் பக்கவாட்டில் தாங்கியிருந்த புங்கமரம், வழக்கத்துக்கு மாறாக தன் நீண்ட கிளைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு நின்ற…

    • 1 reply
    • 1.8k views
  21. அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - புஷ்பா தங்கதுரை புஷ்பா தங்கதுரை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - கோவிண்ட்! என்றார் மேனேஜர். - யெஸ் சார்! என்றேன். …

    • 1 reply
    • 1.7k views
  22. ஃபைவ் ஸ்டார் துரோகம்... க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் அதிரடி அரசியல் த்ரில்லர்! கடந்த ஓராண்டு காலமாக ஒன்இந்தியா தமிழில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் தொடரான ஒன்+ஒன்=ஜீரோ தொடர் இடம் பெற்றது. லட்சக்கணக்கான வாசகர்களால் ரசிக்கப்பட்ட தொடர் இது. அந்தத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு புதிய தொடரை ராஜேஷ்குமார் ஒன்இந்தியா தமிழில் எழுதுகிறார். இந்தத் தொடருக்கு தனது பாணியில் 'ஃபைவ் ஸ்டார் துரோகம்' என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பே, தொடருக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறதல்லவா? ரொம்ப நாள் காத்திருக்கத் தேவையில்லை... ஜஸ்ட் 24 மணி நேரம்தான். நாளை இதே நேரம் ஃபைவ் ஸ்டார் து…

    • 32 replies
    • 13k views
  23. Started by அபராஜிதன்,

    19th Sepதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள். சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்க…

  24. ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும் கதையாசிரியர்: ராஜேஷ்குமார் ‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். “கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?” “ம்… கேட்டுட வேண்டியதுதான்!” உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழ…

    • 1 reply
    • 1k views
  25. கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர். September 16, 2018 சிறப்புச் சிறுகதைகள் (11) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.அகஸ்தியர் எழுதிய ‘கடல் சிரித்தது’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்…

    • 1 reply
    • 806 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.